Mohanraj Murugesan
குழந்தைகள் குழந்தைகளாக மட்டுமே இருக்கட்டும்

அம்மா, அப்பா
நீங்கள்
இந்துவோ?
கிறிஸ்துவரோ?
இஸ்லாமியரோ?
எனக்கு பிரச்சனையில்லை
நான்
ஒரு குழந்தை
குழந்தை மட்டுமே....
உலகத்தீரே!
ஓர் உண்மைச் சொல்லுங்கள், உங்கள் மனதில் முதன் முதலாய் தோன்றிய கடவுள் நம்பிக்கை பயமுறுத்தி வந்ததா? பழக்கத்தால் வந்ததா? இரண்டில் ஒன்று தான் நிச்சிய காரணம், ஏன்? என்றால் இந்தியாவில் எந்த மூலையில் பிறந்தாலும் அந்த குழந்தையோடு அதன் சாதியும், மதமும் சேர்த்தே பச்சை குத்தப் படுகிறது.

குழந்தைகள் கண்திறக்கும் போதே, அது ஆண்டவன்யிட்ட பிச்சை அல்லது அருள் என்று ஆரம்பிக்கிறோம் நம் மூலை சலவையை, நா கூசமால் நாம், பத்து மாதம் பாடாய் பாடு பட்டு, உயிர் வலி அனுபவித்து, உதிரம் சிந்தி பெற்று எடுத்த அந்த அன்னையை வைத்துக் கொண்டே ஆண்டவன் அருள் என்று பிதற்றுகிறோம், நாம் நம்பினால் மட்டுமே குழந்தை பிறப்பு என்பது கடவுள் அருள் ஆனால் அந்த அன்னை அனுபவித்த வலியும், அவர் சிந்திய ரத்தமும் தான் எதார்த்தம், நாம் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும், ஆனால் நாம் எப்போதுமே நம் குழந்தைகளுக்கு எதார்த்தங்களை தருவதில்லை, நமது நம்பிக்கைகளையும், கற்பனைகளையுமே திணிக்கிறோம் அதனால் தான் பெற்ற தாயையே எட்டி உதைத்து முதியோர் இல்லத்திற்கு அனுப்பும் பக்திமான்களை உருவாக்கியிருக்கிறோம்,

கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்... நான் உன்னை பெற்று எடுத்ததால், இது தான் உன் மதம், இது தான் உன் கடவுள், இது தான் உன் புனித நூல் என்று குழந்தைகளின் மூலையில் திணிப்பது கண்டிப்பாய் உரிமை மீறல் தானே? குழந்தைகள் என்றால் அவர்களுக்கு சுயம் இல்லையா என்ன? நாம் உயிர் கொடுத்தோம் என்பதற்காக அவர்களுக்கு உரிமையில்லை என்று ஆகிவிடுமா?
அப்படினா எதுவுமே சொல்ல வேண்டாமா? அவர்களுக்கு நல்லது கெட்டது தெரியாதே, நாம் தானே கற்றுக் கொடுக்க வேண்டும், அது நம் கடமை என்ற உங்கள் ஆதங்கம் சரிதான்...

ஆனால் என் கேள்வி அதற்கு மதமோ? கடவுளோ? தேவையா என்பதே?

நிதானமாய் வாசித்து பாருங்கள் கீழே உள்ள வழிமுறைகளை,

திருடினால் கடவுள் கண்ணை குத்திடும்.

மற்றவர்களுக்கு தீங்கு செய்தால் நரகத்தில் எண்ணெய் கொப்பரையில் போட்டு வதுக்குவார்கள்

சாப்பிடு இல்லைனா பூச்சாண்டிகிட்ட பிடுச்சி கொடுத்துறுவேன்

இவைகள் சாதரணமாய் நம் குழந்தைகளை நல்வழிபடுத்த நாம் பயன்படுத்துவது...

இவைகளையே கீழ் வருவது போல கற்றுக்கொடுக்கலாம் இல்லையா?

குட்டி பாப்பா, அந்த மழையை பார், எப்போதுமே எல்லோரையும் சமமாக, ஏற்ற தாழ்வுயில்லாமல் அன்பு மழை பொழிகிறதே அது போல் நீயும் எல்லோரையும் சமமாக பார்!

செல்லம் அதோ பார், அந்த மரத்தை எப்படி தான் வெயிலிலோ மழையிலிலோ நனைந்தாலும் தன்னை நம்பி வந்தவர்களுக்கு குடையாய் நிற்கிறது அது போல் நீயும் எல்லோருக்கும் உதவுணும்.

கன்னுக்குட்டி! இந்த பந்தை பார், இத எவ்வளவு வேகத்தில் நான் எறியிறேனோ அதே வேகத்தில் சவரில் பட்டு திரும்பி வரும், அது போல் தான் நீ நல்லது பண்ணினால் நல்லது திரும்பி வரும், கெட்டது பண்ணினால் கெட்டது திரும்பி வரும்.

இந்த இரண்டு வழிமுறைகளில் எதை தேர்வு செய்வது என்பது ஒவ்வொரு பெற்றோரின் விருப்பம்,

என் கேள்வி...

பட்டாம்பூச்சி பிடித்து விளையாடும் அந்த பிஞ்சு கைகளில் பைபிள் திணிப்பதோ?

நீ மற்றவர்களை காட்டிலும் உயர்ந்த சாதியில் பிறந்தவன் என்று உணர்த்தும் படி அந்த கல்லம் கபடம் அற்ற குழந்தையின் தோள்களில் பூநூல் போடுவதோ?

ஏன்? எதற்கு? என்று சொல்லாமல் வம்பிடியாய் குழந்தையின் தலையில் தொப்பி மாட்டிவிடுவதோ? எந்த வகையில் சரி? இது எப்படி அறிவுசார் செயலாக முடியும்?

இவைகள் போல் தொடர்ந்து நாம் குழந்தைகள் மீது திணிபதற்கு காரணம், "என்னால் உருவானவர்கள் தானே, என் நம்பிக்கைகளை, என் கற்பனைகளை, என் கனவுகளை, எனது பொதுபுத்திகளை என் குழந்தைகள் மீது திணிப்பதும் அவர்கள் அதை சுமப்பதும் என்ன தவறு? அதை கேட்க நீ யார்?" என்று வாதிட்டால் ஒரு கேள்வி நண்பர்களே...

இந்த மனப்பான்மை அன்பினாலா? ஆதிக்கத்தினாலா?

அன்பு தான் ஆனால் ஆதிக்கம் கலந்த அன்பு என்று நீங்கள் சப்பை கட்டு கட்டினால், பதில் சொல்லுங்கள்

பருவம் பெற்ற நம் பிள்ளைகள் நாம் பின்பற்றிய மதத்தையோ, நம்பிக்கையையோ புறகணிக்க்கூட வேன்டாம், கேள்வி கேட்டாலே ஏன் நாம் விண்ணுக்கும் மண்ணுக்கும் குதிக்கிறோம், நம் பிள்ளைகள் சுயமாய் சிந்திக்கிறார்கள், அவர்களுக்கு முடிவு எடுக்க சுதந்திரம் இருக்கு என்று நாம் ஏன் உணர்வதுமில்லை, அவர்களை விடுவதுமில்லை?

எப்பா! சாமி!!! என்ன பெத்தவங்க இப்படி தான் வளத்தாங்க, நானும் இப்படி தான் வளர்ப்பேன், உலகத்தில எல்லோரும் இப்படி தான் வளக்குறாங்க, இது தான் சரி என்று என்னிடம் வேதம் ஓதாதீர்கள் நான் தெளிவாகவே இருக்கிறேன்.

என் குழந்தை மீது நான் உறுதியாய் எதையும் திணிக்க மாட்டேன், எந்த சாயமும் அவர்கள் மீது நான் பூசப் போவதுயில்லை, என் குழந்தை ஓர் குழந்தையாக மட்டுமே வளரும்.

அதோ!!! என் குழந்தை வளர்ந்து பணி செய்து கொண்டுயிருக்கிறாள் அவள் கழுத்தில் ஏதோ கயிறு இருக்கிறது, ஒரு வேளை அதில் ஏசுவோ, அல்லாவோ, பிள்ளையாரோ தொங்கி கொண்டுயிருக்கலாம் அல்லது வெறும் கருப்பு கயிறாகவும் இருக்கலாம், எதுவாயினும் அது அவள் அவளுக்காக அவளே தேர்வு செய்துக் கொண்டது! நான் திணித்தது அல்ல!!!

வாருங்கள் தோழியர்களே, தோழர்களே புதியதோர் உலகம் குழந்தைகளுக்காக உருவாக்குவோம், அதில் குழந்தைகள் குழந்தைகளாக மட்டுமே இருக்கட்டும்...

என்றும் நம்பிக்கைகளுடன்,
குழந்தை மூலைசலவையின் எதிர்பாளன்,
தோழன் மோகன்


பின் குறிப்பு:
இது ஒரு முன்னுரையே நிறைய விவாதிக்க, எழுத வேண்டியிருக்கிறது, வலைபதிவுகளில் இருக்கும் அம்மாக்களும், அப்பாக்களும் இந்த பார்வை பற்றி கருத்து சொன்னால் நன்றாக இருக்கும்.
Mohanraj Murugesan
பதிவுலகமே தோள் கொடுங்கள்!!!

முன் குறிப்பு:
இதோ, இந்த வார இளம் எழுத்தாளர் தோழர் சரவணகுமார், தோழர் எனது ஆருயிர் நண்பர், மனிதம் போற்றும் பண்பாளர், செக்கு மாட்டு சிந்தனைகளில் சிக்காத சிந்தனையாளர், இதுவரை பேச்சாலும், செயலாலும் மட்டும் தன் சக மனிதர்களை சிந்திக்க செய்த தோழர் முதல் முறையாக பேனா பிடித்திருக்கிறார், அதற்கு தளம் அமைத்து கொடுத்ததற்கு பெருமை கொள்கிறேன். தோழர் தொடர்ந்து தன் எழுத்தானி கொண்டு சிந்தினை பரப்ப வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டு பதிவுலகத்திற்கு அறிமுகம் செய்கிறேன், பதிவுலகமே தோள் கொடுங்கள்!!!

எந்திரனும் கழிவ றைகளும்!!!
உழக தமிழர்களின் உயிர்துடிப்பாம் "எந்திரன் - தி ரோபட்" அக்டோபர் முதல் நாள் உலகெங்கிலும் அதன் வெற்றி பயணத்தை தொடங்கயிருக்கிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் சுமார் 160 கோடி ரூபாய் செலவில் உலக தமிழர்களின் பெருமையை நிலைநாட்ட இந்த படத்தை தயாரித்துள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகவும் கோலாகலமாக நடத்தபட்டது, இதில் களந்து கொள்வதற்காக பெரும்பாலான தமிழ்திரையுலக நட்சத்திரங்கள் வானில் மின்னிக் கொண்டே ஆகாய மார்க்கமாக மலேசியாவிற்கு பயனித்தன. இதற்கான செலவு எவ்வளவு என்பது தெளிவாக தெரியவில்லை, சுமார் 500 பேர் விமான பயணம், தங்கும் வசதிகள், நிகழ்ச்சி செலவு ஆக மொத்தம் சுமார் 5 கோடி ரூபாய் செலவாகியிருக்கும், இது போல் இந்த தனி சிறப்புவாய்ந்த படத்திற்கு எத்தனை விளம்பரங்கள், நிகழ்வுகள் மற்றும் செய்திகள் ஏற்படுத்தபட்டுள்ளன என்பதை பட்டியல் போடவே முடியாது. இருந்தாலும் இதோ சில,

மூன்று நாட்கள் இசை வெளியீடு தொகுப்பு விழா சன் தொலைகாட்சியில்
மீண்டும் எப்படி தொகுத்தோம் என்று ஓர் மறு ஒளிபரப்பு
பட டிரெயிலர் வெளியீட்டு விழா
குமரி முதல் சென்னை வரை "எந்திரன் ரத உலா"
முன்பதிவு செய்திகள், அதனுடன் தொடர்பு உடைய நிகழ்வுகள்
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...

நன்பர்களே இணையத்திலிருந்து தெரிந்து கொண்ட தகவலின் படி சுமார் 2500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் உலகெங்கிலும்.திரையிடப்படுகிறதாம் எந்திரன்.

இணையத்தில் ஒரு கணக்கு அடித்து சொல்கிறது முதல் மூன்று நாட்களுக்கு உள்ளாகவே சுமார் 500 கோடி ரூபாய் வசூலாகிவிடும் என்று, முதல் வாரத்தில் மட்டும் மொத்த வசூல் சுமார் 1600 கோடியை தொட்டுவிடுமாம், சென்னையில் மட்டும் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படுகிறதாம்.

ரூபாய் 160 கோடி முதலீடு இட்ட படத்திற்கு முதல் வாரத்தில் மட்டும் 1600 கோடி வருமானம் என்றால் இது எல்லாம் யாருடைய பணம், தயாரிப்புக்கு பயன் படுத்தபட்ட 160கோடியை சேர்த்தும் அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்து தானே சம்பாதிக்கபட்டது.

இந்த 160 கோடியும் வெளிநாடுகளில் விதைக்கபட்டு படமாக்கபட்டுயிருக்கிறது ஆனால் இது தமிழ்நாட்டில் மட்டும் அறுவடை செய்யப்போகும் வருமானம் மூதலீட்டை காட்டிலும் பத்து மடங்கு, இது மட்டுமல்ல "எந்திரன்" என்ற தமிழ்பெயருக்காய் 10 ஆயிரம் வரிச்சலுகையும் பெறுவார்கள்.

இந்த 1600 கோடி ரூபாயும் ஒருவரிடமிருந்து பெறப்போவதுயில்லை, நம் ஒவ்வொருவரிடமிருந்தும் பெறப்படயிருக்கிறது, அது அனைத்தும் நம் பணம்.

இது ஒருபக்கம் இருக்கட்டும் நான் உங்களிடம் மற்றும் சில தகவல்களை பரிமாறி கொள்ள விரும்புகிறேன்.

நாம் அனைவரும் வசிக்கும் இந்தியா உலக சுகாதர தரவரிசையில் எவ்வளவு பின்தங்கி உள்ளோம் தெரியுமா? அது மட்டும் அல்ல சமீபத்திய ஓர் ஆய்வின் படி ஆப்பிரிக்காவில் உள்ள சில நாடுகளை காட்டிலும் ஏழைகள் அதிகமாக வசிக்கும் நாடாக இந்தியா மாறியிருக்கிறது. இது மட்டும் அல்லாமல் பன்றி காய்ச்சல் போன்ற தொற்று நோய்களினால் சுமார் 110 நபர்கள் இறந்துயிருக்கிறார்கள். அவ்வளவு எதற்கு நமது ஊரில் உள்ள பள்ளிகளில் சுத்தமான, சுகாதாரமான, தேவையான அளவிற்கு கழிப்பிட வசதிகள் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

நமது நகரங்களின் சந்துகளில், சாலை ஓர மரங்களின் அருகில் சிறுநீர் கழிக்காதவர்கள் உண்டா என்றால் இல்லை என்பது தான் பெரும்பாலானவரின் பதில்.

இந்த சுகாதார முறைகேட்டினால் .அதிகம் பாதிக்கபடுபவர்கள் பெண்கள் தான்.

நம் தமிழகத்தை பொருத்த வரையில் 4078 மேல்நிலை பள்ளிகள் உள்ளன, இதில் இருபாலர் பயிலும் பள்ளிகள் 3001, இதில் எத்தனை பள்ளிகளில் சுத்தமான கழிவ றைகள் உள்ளன.
பெரும்பாலும் கிராமபுற பள்ளிகளில் திறந்த வெளி கழிப்பிடம் தான்

இங்கு படிக்கும் பெண்கள் குறிப்பாக மேல்நிலை பள்ளியில் படிப்பவர்களுக்கு இயற்கையாக வரும் சில பிரச்சனைகளால் அந்த நாட்களில் பள்ளிக்கு செல்வது இல்லை, இப்போது சில வசதிகள் இருந்தும் கூட அவர்கள் உடை மாற்றி கொள்வதற்கும், ஓய்வெடுத்து கொள்வதற்கும் தனி அ றைகள் ஏதும் இல்லை,

இது ஒரு புறம் இருக்க, பேருந்துகளில் நெடுந்தூரம் பயணம் செய்யும் பெண்களின் நிலை ஆண்களின் நிலையை விட மிகவும் மோசம். ஊருக்கு வெளியில் இயற்கை உபாதைகளுக்காக பேருந்து நிருத்தப்படும், அங்கு எந்த வித பாதுகாப்பு வசதியும் இருக்காது, இது மட்டும் அல்லாமல் சூரியன் வருவதற்கு முன்பாகவே எல்லாத்தையும் முடித்து விட வேண்டிய கட்டாயத்தில் தான் இன்றும் நிறைய சகோதிரிகள் இருக்கிறார்கள் தமிழ்நாட்டில்.

இப்படி சரிவர கழிவுகள் வெளியேராத காரணத்தினால் இந்திய பெண்களுக்கு விரைவாக சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது என்பது நாம் அறிய வேண்டிய உண்மை.

நமது ஊரில் உள்ள பள்ளிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் திரையரங்குகளில் சுத்தமான கழிப்பிடம் இருக்கிறதா? கழிவ றை
இருக்கட்டும் சுத்தமான தண்ணீர் கிடைக்கிறதா? இல்லை என்பது தான் ஒரே பதில்...

இப்போது மறுபடியும் எந்திரனை யோசித்து பாருங்கள், நம்மால் ஒரு 2 1//2 மணி நேரம் பொழுதுபோக்கிற்காக எடுக்க படும் படத்திற்கு ரூபாய் 1600 கோடி வருமானம் ஒரு வாரத்தில் ஈட்டி தர முடியும் என்றால், நம் வீட்டு பெண்கள், சகோதரிகள், குழந்தைகள், ஏன் நமக்காக கூட ஓர் சுத்தமான, சுகாதாரமான சூழ்நிலையை நாம் ஒன்று கூடி உருவாக்காமல் இருப்பது ஏன்?, ஏன் நாம் ஒன்று கூடி படம் மட்டும் தான் பார்க்க வேண்டுமா என்ன? கொஞ்சம் மாற்றி பார்கலாமே, நம்மால் கண்டிப்பாக ஒரு சுத்தமான சுகாதாரமான சூழ்நிலையை உருவாக்க முடியும், குறைந்த பட்சம் எந்திரனுக்காய் அடிக்க பட்ட பெலஃஸ்(flex) பேனர்களையும் சவரோட்டிகளையும் சுகாதார கழிவ றைகளின் கதவுகளாக மாற்றுவோமே?

சிந்தியுங்கள் தோழர்களே! தோள் கொடுங்கள் தோழிகளே!!!

என்றும் உங்களில் ஒருவன்,
மானுடத்தின் காதலன்,
உங்கள் சரவணகுமார் 

முந்தைய அறிமுகங்கள்:
இலங்கை வாழட்டும் - இளம் எழுத்தாளர்கள் அறிமுகம் - 1
முதல் முயற்சி - இளம் எழுத்தாளர்கள் அறிமுகம் - 2
Mohanraj Murugesan
உங்களுக்கு எதற்கு மூலையும்? இதயமும்? 
அயோத்தியில் ஒரு கோயில் கட்டிவிடுவதால் ராம ராஜ்ஜியம் வந்து விடும் என்று நம்புவதற்கு எதற்கு மூலை? ஒரு மனிதன் போட்டுயிருக்கும் சட்டை காவியா? பச்சையா அல்லது வெள்ளையா என்று மட்டும் பார்பவர்களுக்கும்
தனக்கும், தன் மதத்திற்கு எதிரான அந்த நிற சட்டையை அணிந்ததற்காகவே அவனை கொலை செய்ய துணிபவர்களுக்கு எதற்கு இதயம்?


வரலாறு முழுக்க மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் நடத்தபட்ட போர்களும் இழந்த பல கோடி உயிர்களும் போதாதா? இன்னும் அடங்கவில்லையா அந்த வெறி... மனித தவறுக்கு கடவுளை காரணம் ஆக்காதே என்று சொன்னால், பதில் சொல்லுங்கள், பம்பாய் கலவரங்களில் இஸ்லாமியர்களை தேடி தேடி கொன்று குவித்தார்களே இந்து வெறியர்கள், அப்போது ஏன் ராமன் வேடிக்கை பார்த்து கொண்டுயிருந்தான்?, அல்லா இஸ்லாமியிர்களை ஏன் காபாற்றவில்லை? அல்லது அப்படி தன் சக மனிதனை கொடுரமாய் கொலை செய்ய தூண்டிய அந்த எண்ணத்தை படைத்தவர் யார்? ராமனா?, நீங்கள் சொல்லலாம் அந்த எண்ணம் சுயநலம் கருதி இன்னோரு மனிதன் விதைத்தது என்று அப்போது அவனுக்குள் அதை விதைத்தது? இப்படியே போனால் அந்த முதல் விதை யார் உருவாக்கியது? சாத்தான் என்றால்? சாத்தானை படைத்தது யார்? பதில் சொல்லுங்கள்....

எல்லாம் வல்ல கடவுள் ஏன் நன்மையை மட்டுமே படைத்திருக்கலாமே தீமையையும் ஏன் படைத்தார்?

சரி! நாம் எல்லோரும் இந்துகள், "ஹரிஜன்" என்றால் கடவுளின் குழந்தை என்று சொல்லிவிட்டு அவர்களை கருவரைக்குள் அனுமதிக்காது தடுப்பது எது? சாதி திமிரா? ஆதிக்க மனோபவமா? பக்தியா?
இன்னும் கொடுமை 500 ரூபாயை விட்டு எறிந்தால் அதை பொருக்கி கொண்டு கடவுள் சிலையை கட்டிபிடிக்க அனுமதிக்கும் உங்கள் கோயிலின் நிலை தான்...

இதையும் மிஞ்சும் வகையில் கருவரையில் சாந்திமுகூர்த்தமே நடத்திவிட்ட பிறகும் எப்படி வாய் கூசாமல் சொல்லுகிறீர்கள், அங்கு கடவுள் இருக்கிறார்; அது புனிதம்; அங்கு பூநூல் போட்டால் மட்டும் தான் உள்ளே வர வேண்டும் என்று.

ஏற்கனவே இருக்கின்ற கோயில்களே இந்த இழிநிலை என்றான போது, எதற்கு இன்னோர் கோயில் அதுவும் அயோத்தியில் என்ன சாதிக்கபோகிறீர்கள் அதை கட்டிவிட்டு, அதை கட்டி முடித்தவுடன் இந்தியாவின் வருமை ஒழிந்துவிடுமா? சமதர்மம் பிறந்துவிடுமா? இல்லை மனிதர்கள் தான் சுயநலம் விட்டுவிடுவார்களா? எதுவும் நடக்கபோவதில்லை அப்புறம் எதற்கு இந்த ஆர்பாட்டம்? இது புதிதாய் கெட்டப்படும் தேவாலயங்களுக்கும் மசூதிகளுக்கும் பொருந்தும் தானே?

உங்கள் மூலை கொண்டு கொஞ்சம் சிந்தியுங்கள் எவ்வளவு முட்டாள்தனமான மூடநம்பிக்கைகள் உங்கள் மீது திணிக்கபட்டுயிருக்கிறது என்று புரியும், கொஞ்சம் உங்கள் இதயத்தோடு பேசி பாருங்கள் அது சொல்லும், ஒரு முதியோர் இல்லத்தில் ஒரு அரை மணி நேரம் அந்த வயது முதிர்ந்த குழந்தைகளோடு பேசிவிட்டு வரும் நிம்மதி ஒரு நாள் முழுக்க கோவிலிலோ, தேவாலயங்களிலோ, மசூதிகளிலோ இருந்தாலும் கூடக் கிடைக்காது என்று.

நம் முன்னே அன்பும், அரவணைப்பும் வேண்டி ஆயிரமாயிரம் முதியவர்கள் இருக்கிறார்கள்,

நல் கல்வி அறிவு வேண்டி பல லட்ச குழந்தைகள் இருக்கிறார்கள்,

உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து போனது தவிர ஒன்றுமே கிடைக்காத கோடான கோடி உழைக்கும் மக்கள் இருக்கிறார்கள் விடியல் வேண்டி...

சிந்தித்து பாருங்கள் நண்பர்களே! நாம் கட்டவேண்டியது புதிய கோயில்களையா? சிந்திக்க கற்று தரும் பள்ளிகளையா?

ஒன்று கடவுளை மறந்துவிட்டு, மானுடத்திற்காக போராடுங்கள் அல்லது மூடநம்பிக்கைகளும், போலி சம்பிராதயங்களும்,மத சாயங்களும்
நீக்கி அன்பின் ஊடாகவும் அறிவியல் ஊடாகவும் கடவுளை தேடுங்கள்....

அதை விடுத்து மூடநம்பிக்கைகளில் மூழ்கி உங்களையும் கடவுளையும் சிறுமை படுத்தாதீர்கள்.

இல்லை இல்லை நான் சிந்திக்க மாட்டேன் என் தாத்தா இப்படி தான் இருந்தார், என் அப்பாவும் இப்படி தான் இருந்தார் அதனால் நானும் இப்படி தான் இருப்பேன் என்றால் ஒப்புக்கொள்ளுங்கள் உங்களுக்கு மூலையும் இதயமும் தேவையில்லை என்று!!!

என்றும் மானுடத்தின் காதலன்,
தோழன் மோகன்...
Mohanraj Murugesan
கீற்றுக்கு உதவிடுங்கள்! நண்பர்களே!!!

எனது பொதுபுத்திகள், பிற்போக்குதனங்கள்,செக்கு மாட்டு சிந்தனைகளில் இருந்து நான் சிந்தனையாளானாய் பரிணாமம் கொண்டதற்கு கீற்று இணையதளத்தின் பங்கு ஆக பெரியது, வைரமுத்து வரிகளில் வண்டு போல் மயங்கி கிடந்த என் கண்ணத்தில் அரைந்து தலித் சகோதரர்களின் தெருவுக்கு இட்டு சென்றன கீற்றுவில் வெளிவந்த கவிதைகள், மூடநம்பிக்கைகளில் மூழ்கி போய் இருந்த என்னை பெரியாரிய பார்வையில் பயணிக்க வைத்தன கீற்றுவில் வெளிவந்த கட்டுரைகள், தான் தனது என்று வாழ முடிவு செய்து இருந்த என்னை சமூகத்தின் பால் தீரா காதல் கொள்ள செய்தன கீற்றுவில் வெளிவந்த சிற்றிதழ்கள், ஒடுக்கும் அதிகார வர்கத்தின் ஓலம் மட்டுமே கேட்டு கொண்டு இருந்த என் செவிகளில் முதல் முறையாக ஒடுக்கபடுவோரின் குரல்கள் கேட்டது கீற்று நடத்திய கூட்டங்களில் தான்...

"தனி ஒரு மனிதனான என்னால் என்ன செய்ய முடியும்?", "என்னை சுற்றி எல்லாரும் சுயநலகாரர்களாய் இருக்கிறார்கள்", "எனக்கு சமுகத்திற்கு உழைப்பதனால் என்ன கிடைக்க போகிறது?", "நான் மட்டும் ஏன் சமுகத்திற்காய் உழைக்க வேண்டும்" போன்ற எனது சமரசங்கள் எல்லாம் உடைந்து சுக்கு நூறாக போனது, தினமும் காலை 4 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 11 மணி வரை அலுவலக பணி முடித்துவிட்டு எந்த ஒரு பலனை எதிர்பார்க்காமல் மாற்று ஊடகத்தை கட்டி அமைக்க போராடும் கீற்று ரமேசுவையும் கீற்று நண்பர்களையும் கண்ட பின்பு...

தோழிகளே/தோழர்களே,

இதோ இப்படி என் உள்ளத்தில் மட்டுமல்ல லட்சக்கணக்கான உள்ளங்களில் மாற்று சிந்தனை விதையை தூவிய கீற்று இப்போது இயங்கு நிலையில் இல்லை, பொருளாதார நெருக்கடியால் முடங்கி கிடக்கிறது அந்த ஆலமரம்! நெஞ்சு வலிக்கிறது நன்பர்களே, நான் உறுதியாய் கீற்று இணையதளத்திற்கு உதவ போகிறேன் நிதி கொடுத்து மட்டுமல்ல, மானுடம் கொண்ட மனிதனாக வாழ்ந்தும் காரணம் கீற்று நண்பர்கள் கீற்றை ஆரம்பித்து 6 வருடமாக இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியிலும் கீற்றை தோடர்ந்து இயக்கி இருக்கிறார்கள் என்றால் அது பணத்தின் மீதான நம்பிக்கையல்ல நம் மானுடத்தின் மீதான நம்பிக்கை, ஆதலால் பதிவுலகமே கீற்று இணையதளம் மறுபடியும் நமக்காகவும், சமூகத்திற்காகவும் பயணிக்க உங்களால் ஆன அனைத்து உதவியையும் செய்யுங்கள்... இது நமக்கும், அடுத்த தலைமுறைக்குமான முதலீடு! செலவல்ல!!!

என்றும் மானுடத்துடன் வாழ முயற்சிக்கும்
ஓர் மனிதன்,
மோகன்....

கீற்று கட்டுரை:

கீற்று இணையதளம் இதுவரை shared server-ல் இயங்கி வந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாக அதிகரித்து வரும் கீற்று வாசகர்களின் எண்ணிக்கை, ஐந்து ஆண்டுகளில் வெளியான படைப்புகள், சிற்றிதழ்கள் அனைத்தையும் பாதுகாத்து வருவதால் அதிகரித்திருக்கும் Memory usage & MySQL usage காரணமாக‌ dedicated server-க்கு மாறியாக வேண்டியுள்ளது. Dedicated server என்றால் ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் கட்ட‌ வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு பதிவு செய்வதாக இருந்தால் இரண்டு லட்சம் வேண்டும். இது கீற்று இணையதளத்திற்கு மிகப்பெரிய தொகை.
கீற்றில் இணையும் சிற்றிதழ்களின் எண்ணிக்கையும், கீற்றிற்கு வரும் படைப்புகளின் எண்ணிக்கையும் ஒவ்வொரு மாதமும் அதிகரித்து வருகிறது. முழுநேர ஊழியர் இல்லாமல், இவற்றை எல்லாம் வலையேற்றுவது மிகவும் சிரமமான செயலாக இருக்கிறது. முழுநேர ஊழியர் என்றால், குறைந்தது மாதம் ரூபாய் ஐயாயிரம் சம்பளம் தர வேண்டும்.
கடந்த ஜூலை மாதம் ‘இஸ்லாமியர்கள் மீதான சமூக, அரசியல் ஒடுக்குமுறைகள்’ கருத்தரங்கை நடத்திய வகையில் ரூ.10,000 கடன் என்பதுதான் கீற்றின் நிதிநிலைமை. எனவே கீற்று தொடர்ந்து வெளிவருவது வாசகர்கள் கையில்தான் உள்ளது. கீற்று வெளிவருவது அவசியம் என்று கருதும் வாசகர்கள் நிதியுதவி அளிக்குமாறு வேண்டுகிறோம்.
தற்காலிகமாக கீற்றின் செயல்பாட்டை நிறுத்தியுள்ளோம். கீற்று இணையதளத்தின் படைப்புகள், சிற்றிதழ்கள் அனைத்தையும் backup எடுத்துள்ளோம். போதிய அளவு நன்கொடை கிடைத்தால், நிச்சயம் கீற்று பழையபடி வெளிவரும் என்று நம்புகிறோம்.

நன்கொடை செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:

ஐசிஐசிஐ வங்கிக் கணக்கு எண்: 603801511669
கணக்கு வைத்திருப்பவர் பெயர்: இரமேஷ்
வங்கிக் கிளை: அண்ணா சாலை, சென்னை
IFSC Code / MICR Code: ICIC0006038 / 600229017

Credit card மூலமாக நன்கொடை அளிக்க விரும்புபவர்கள், 
paypal-ஐ பயன்படுத்தவும். https://www.paypal.com/us/cgi-bin/webscr?cmd=_flow&SESSION=Z7sE9TIqPf1mYFZ1_j9rsj-YzlWxjXVkdNBhDInj-wAGo6IO27lAkeMLN6a&dispatch=5885d80a13c0db1f8e263663d3faee8dc18bca4c6f47e633fcf61b288f5ebea2

Cheque/DD அனுப்ப வேண்டிய முகவரி: 
Ramesh,
22/34, Saraswathi Nagar 5th street,
Adambakkam
Chennai - 88

நன்கொடை அனுப்பியபின் தங்களது பெயர், அனுப்பிய தொகை குறித்து editor@keetru.comக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும்.

என்றும் அன்புடன்
கீற்று நந்தன்.
கைப்பேசி: 99400 97994
http://www.keetru.com/index.php


மேலும் விவரங்களுக்கு இந்த சுட்டியை சுடுக்கவும்
Mohanraj Murugesan
பதிவுலகமே தோள் கொடுங்கள்!!!

முன் குறிப்பு:
இதோ, இந்த வார இளம் எழுத்தாளர் தோழி புவனா, புவனா எனது அருமை தோழி மட்டுமல்ல எனது அன்பு தங்கையும் கூட, இவள் பல வகைகளில் தனித்துவம் வாய்ந்த ஆளுமை, இவளின் எழுத்துகளையும், சமுக அக்கறைகளை பார்க்கும் போது இளைய சமுதாயத்தின் மீது நம்பிக்கை அதிகமாகிறது, இவளின் முதல் மழலை கிருக்களில் இருந்து இந்த "முதல் முயற்சி" கட்டுரை வரை இவளின் எழுத்துக்கள் அடைந்து வரும் பரிணாம வளர்ச்சியை பார்க்கும் போது மிகவும் வியப்பாகவும், பெருமிதமாகவும், நம்பிக்கையாகவும் இருக்கிறது, இது போல் புவனாவின் எழுத்துக்கள் தொடர்ந்து அடுத்த அடுத்த தளத்திற்கு நகர வேண்டும் என்ற ஆசையோடும் அவளின் எழுத்துக்கள் பெண்ணின் சமுக அவலங்களை அகற்ற பயண்படவேண்டும் என்ற வாஞ்சையோடும் இணையத்திற்கு அறிமுகம் செய்கிறேன், பதிவுலகமே தோள் கொடுங்கள்!!!

முதல் முயற்சி 

ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமே” என்று எவ்வளவு ஆனந்தத்துடன் பாரதி பாடினானோ ! அதே அளவு ஆனந்தத்தை நானும் உணர்ந்தேன் பெண்ணிற்கு 33 % இடஒதுக்கீடு கிடைத்த அன்று.ஆம் இந்த கனவு எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நினைவாகி இருக்கிறது. இவ்வளவு காலதாமதம் அவசியம் தானா ? என்னை பொறுத்தவரை இந்த காலதாமத்திற்கு ஒரு வகையில் நாம் தான் காரணம். நம்மிடம் இருக்கும் மிகப் பெரிய தவறு நாம் கூடி அமர்ந்து நம்முடைய பிரச்சனைகளை விவாதிப்பதில்லை.பெண்தோழிகள் ஒன்று கூடினால் பெரும்பாலும் திரையில் வரும் கதாநாயகியின் நிறத்தையும், அழகையும், இல்லையென்றால் தொலைக்காட்சியில் அழுதுவடியும் பெண்களையும், பெண்களையே இழிவு படுத்தும் தொடர்களையும் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஏன்? நாம் பொதுவுடைமையை விவாதிக்க கூடாதா? என்றுக் கேட்டால் இந்தக் கேள்விக்கு எந்தப் பெண்ணாலும் பதில் கூறமுடியவில்லை. நம்மிடையே உள்ள கழைகளை நாம் கூடி தான் கலைய வேண்டும். இனியாவது நாம் ஒன்று கூடி நம் பிரச்சனைகளை விவாதித்து ஒரு தீர்வு காணலாம் என்ற உந்துதலில் தான் இந்தக் கட்டுரை எழுதியுள்ளேன். என் பயணத்திற்கு இந்த கட்டுரை ஒரு முதல் முயற்சியாக இருக்கட்டும் . . . . . . . . . . . . .


நம் பெண்கள் சமூகத்தில் தான், ஒரு பெண்சிசு ஜனனம் எடுப்பதற்கே பெரிய போராட்ட்த்தை எதிர்கொள்கிறது.இயற்கையாக ஒரு பெண்சிசு கருவானாலும் அந்தசிசு இந்த பூமியில் பிறக்கலாமா ? இல்லையா என்று முடிவெடுக்கும் அதிகாரம் ஆண்கைகளில் தான் உள்ளது. இப்பொழுது யாரும் கள்ளிப் பால் ஊற்றி பெண்சிசுவை கொலைச் செய்வயதில்லை. ஆனால் ஒரு தாய் சுமப்பது பெண்குழந்தை என்பது உறுதியானால் அவளை நடத்தும் முறை மாறிவிடுகிறது. இதில் அவலம் என்னவென்றால் பல நேரங்களில் ஒரு பெண்ணின் மனதை நோகடிப்பது மற்றொரு பெண் தான். குழந்தையில் இந்த பேதம் ஏன் ? என்று எனக்கு இன்று வரை விளங்கவில்லை. அன்று சங்க காலத்தில், அதிக குழந்தைசெல்வங்கள் இருந்த காலத்தில் கூட தனக்கு மகள் பிறந்த செய்தியை, “என் சமூகத்தையே மேம்படுத்த வீரத் திருமகள் பிறந்து விட்டாள் என்று மார் தட்டி சொன்ன உங்கள் வீரம் எங்கே போனது ? ”

இடைக்காலத்தில் நாம் இழ்ந்த கல்வி என்னும் அறிவு தாகத்தை எப்படியோ போராடிப் பெற்றுவிட்டோம்.ஆம் இப்பொழுது பெரும்பாலும் பெண்கள் படிக்க ஆரம்பித்துவிட்டனர்.ஆனால் இன்னும் தனக்குத் தகுந்த பாடத்தை தகுந்த இடத்தில் தேர்ந்தேடுக்கும் உரிமை பல இடங்களில் பெண்களுக்கு நிராகரிக்கப்படுகிறது. சில நேரங்களில் பெண்களுக்கு கொடுக்கப்படும் உரிமைகளையும் அவர்கள் சரியாகப் பயன்படுத்தி வெற்றிப் பெற தவறிவிடுகின்றனர்.

இன்று எந்தவிதபாகுபாடும் இல்லாமல் ஆறு வயது சிறுமி முதல் அறுபது வயது பெண்கள் வரை சந்திக்கும் ஒரே கொடுமை “ பாலியியல் கொடுமை ”.பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் , வேலை செய்யும் இடங்களிலும், பேச்சின் மூலமோ அல்லது செய்கையினாலோ பல பெண்கள் இந்தக் கொடுமையை அனுபவிக்கின்றனர்.

அக்னிக் குஞ்சொன்று கண்டேண் – அதை
அங்கொரு காட்டில் பொந்திடை வைத்தேன் ;
வெந்து தணிந்து காடு ; தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ?

எங்கே போனது அந்த அக்னி குஞ்சு ?

இன்றும் அது நமக்குள் எரிந்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அந்த வீரத்தைத் தட்டி வளர்ப்பதற்கு தான் இங்கே யாரும் இல்லை .அனைத்துப் பொற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை இந்த மோசமான சமூகத்திடம் இருந்து காப்பதாக எண்ணி அவர்களின் அழகிய சிறகுகளைப் பறித்து விடுகின்றனர். இதைவிட அவர்களிடம் உள்ள வீரத்தை வளர்த்து தன்னை எந்த சூழ்நிலையிலும் காப்பாற்றிக் கொள்ளும் வழியை கற்றுக் கொடுக்கலாம் இல்லையா ? ஆண்சமுகம் பெண்களை போகப் பொருளாக மட்டுமே நினைக்கும் இந்த மனோபாவம் மாற வேண்டும்.

பலஇடங்களில் பெண்களின் வாய்கள் திறக்கப்படுதே

இல்லை. ஆண்மகன் தன் கருத்தை தெரிவிக்கும் பல இடங்களில் பெண்ணின் கருத்துக்கு மதிப்பே இல்லாமல் போய் விடுகிறது.அதையும் மீறி தன் கருத்தை தெரிவிக்கும் ஒரு பெண்ணுக்கு இந்த சமுகம் சுட்டும் பட்டங்கள் “அடங்காதவள், திமிர்பிடித்தவள் ” .


இந்த நவீன உலகத்தில் பெண்கள் , ஆறே நாளில் முகம் வெளுக்கும் , பிரகாசம் அடைவீர்கள் என்பதை நம்பி ரசிக்கும் அளவுக்கு தன் இயற்கை நிறத்தை ரசிப்பதேயில்லை. பல பெண்கள் மனதில் இது பெரிய தாழ்வுமனப்பான்மையை வளர்கிறது.இன்னும் சில பெண்கள் தங்களது வெற்றிக்கு தன் திறமையை நம்புவதைவிட தங்கள் வெளிப்புறத் தோற்றத்தை மிகவும் நம்புகிறார்கள்.

பெண்ணில் வாழ்ந்து, பெண்ணுடன் வாழ்ந்து வெற்றிக் கொண்டு மேன்மை அடைந்துள்ள இந்த சமுகம் , அத்தகைய பெண்ணையே அடக்கி ஆள வேண்டும் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறது. நம்முடைய ஆற்றலை உலகிற்கு பறைசாற்ற இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது.

பெண்கள் அன்னங்களாம்
ஆம் அன்னங்கள்தான்
பாலிலிருந்து தண்ணீரைப்
பிரிதெடுக்கும் அன்னங்களல்ல
பாலிலிருந்து விஷத்தையே
பிரித்தெடுக்கும் வித்தியாசமான அன்னங்கள் !

நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை உடைத்தெறிந்து பெண்சமூகமே ஒன்று சேருவோம்
புதுயுகம் படைப்போம்

வாருங்கள் ,

வென்றுவிடும் தூரத்தில் தான் வானம்.

என்றும் அன்புடன்,
உங்களில் ஒருத்தி,
தோழி புவனா
Mohanraj Murugesan
பெரியாரின் பிறந்தநாளில் பெரியாரிடம் சில கேள்விகள்?
ஏன் எங்கள் எவருக்கும் இல்லாத பொதுநலம் உங்களுக்கு?
அப்படி என்ன உங்களுக்கு இந்த சமுகத்தின் பால் காதல்?

சுயநலமும், லாபநோக்கும், சுரண்டலும் தான் வெற்றியின் சூத்திரங்கள் என்று நாங்கள் மாற்றிவிட்டோம்

ஆனால் நீங்களோ,

உங்களது 95 வருட வாழ்க்கையில் 70 வருடம் பொது நலத்தோடு தொன்று ஆற்றியிருக்கிறீர்கள் ஏன்?

வெறும் 12 கி.மீ தூரம் தான் ராமேஸ்வரத்தில் இருந்து, அவர்கள் கதறி அழுத ஓலம் கூட தெளிவாகத்தான் கேட்டது, ஆனாலும் ஒன்றும் செய்யவில்லை நாங்கள்,

ஆனால் நீங்களோ.

8,20,000 மைல்கள் சுற்றுபயணம் செய்திருக்கிறீர்கள் திராவிட இனம் சமத்துவம் அடைய, பேதம் அகல, சிந்தனை பிறக்க.... எப்படி முடிந்தது உங்களால்?

உண்மை தெரியுமா? நீங்கள் பயணித்த இந்த தூரம், பூமியின் சுற்றளவைப்போல் 33- மடங்கு, பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவைப்போல் 3- மடங்கு. என்னால் கற்பனைக் கூட செய்து பார்க்க முடியவில்லை ஆனால் நீங்கள் பயணித்திருக்கிறீர்கள் எப்படி?

பெரியாரே, சுய சிந்தனையும், சுய மரியாதையும் இந்த தமிழினம் பெற வேண்டி, நீங்கள் ஆற்றிய அத்தனைச் சொற்பொழிவுகளையும் ஒலிப்பதிவு நாடவில்(cassette) பதிவு செய்திருந்தால் அது 2- ஆண்டுகள், 5- மாதங்கள், 11- நாள்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும்...

சற்றே திரும்பி பார்க்கிறேன், சுய தேவைகள்,சினிமா விமர்சன்ங்கள், வெட்டி அரட்டைகள், பெண்கள் பற்றிய கேவலமான பேச்சுக்கள், கேலிகள் கிண்டல்கள் தவிர்த்து நான் வாழும் சமுகத்திற்க்காக, என் சக மனிதனுக்காக எத்தனை நொடிகள் பேசியிருக்கிறேன் என்று சிந்தித்தால், சில மணித்துளிகள் கூட இல்லை என்னிடம் ஆனால் நீங்கள்?

இதையெல்லாம் செய்து விட்டு நான் ஒரு தொண்டன், சாதரண மனிதன் என்று சொல்லுகிறீர்களே எப்படி?

சரி தான் பெண்கள் சரியாக தான் பட்டம் சுட்டியிருக்கிறார்கள் "தந்தை பெரியார்" என்று

ஒன்றை மறந்தேன்

பெரியரே இன்று பெண்கள் நிலை தெரியுமா?

பெண்களுக்கு பிறக்க உரிமையிருக்கிறது (சில கிராமங்கள் தவிர்த்து) ஆனால் அவர்களின் வாழ்க்கை முடிவுகளை ஆண்கள் தான் முடிவு செய்கிறார்கள் இன்றும்;

வேலைக்கு போகலாம் ஆனால் வீட்டு வேலைகளையும் கட்டாயம் செய்தாக வேண்டும்;

கண்டிப்பாக சுதந்திரம் உண்டு ஆனால் அது எவ்வளவு தூரம் என்பதை ஆண் தான் முடிவு செய்கிறான்...

இப்போதும் பெரியாரே, மீசைக் கொண்ட பேடி பயல்கள், ஒரு பெண்ணை வண்புணர்ந்தால், அவள் தான் கெட்டு போனவள் அந்த நாய் மக்கள் அனைவரும் தன் ஆண்மையை நிருபித்தவர்கள், கெடாதவர்கள்...

நா கூட கூசுகிறது, இன்றும் வரதட்சனை என்று தன்னையும், தன் மானத்தையும் விற்று பிளைக்கிறார்கள் மீசை முறுக்கி கொண்டே!!!

விலைக்கு வாங்க பட்டவன் தானே பிறகென்ன வீராப்பு துணி துவைக்க மாட்டேன், சமையலில் மட்டும் அல்லாமல் எதிலும் உதவி செய்ய மாட்டேன் என்று, உண்மையில் பிச்சைக்காறர்கள் என்று பச்சை குத்தியிருக்க வேண்டும் அவர்கள் நெற்றியில்....

சரி தானே பெரியாரே???

இன்னும் ஓர் சிந்தனையை விதைத்துவிட்டீர்கள்,

உங்களின் தடி சத்தம் கேட்கிறது இன்னும் பலமாக, நீங்கள் மூட்டிய சுய மரியாதை தீ இன்னும் மூர்க்கமாய் எரிய தொட்ங்கியிருக்கிறது, கேள்விகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என் தேடல்கள் போல், சிந்தனையும், மானுடமும் வழிக் காட்ட இன்னும் வேகமாய் பயணிக்கிறேன் நீங்கள் வித்திட்ட பொது நல பாதையில்....

என்றும் பொது நல பாதையில்,
பெரியாருடன்,
ஓர் கருஞ்சட்டைக்காரனாய் மோகன்
Mohanraj Murugesan
பெரியாருடன் ஒரு பயணம் - பயணிக்க வாருங்கள் பதிவுலகமே!!!
கும்புடுறே சாமி!!! னு கூனி குறுகி நிற்காமல், படித்து, பட்டம் பெற்று தன் சமுகத்தையே தீண்டாமையால் ஒதுக்கின ஆதிக்க சாதியினர்க்கு சமமாக ஓர் ஆதி திராவிட சகோதரர் இன்று நிமிர்ந்து நிற்கிறார் என்றால், அதற்கு வித்திட்டு, மரமாக்கியவர் தந்தை பெரியார். அவர் இல்லையென்றால் தமிழனின் பெயரில் இருந்து கூட சாதியை, அகற்றியிருக்க முடியாது. பெரியார் பன்முகம் கொண்டவர், அவர் எப்போதும் கடவுளையும், மதத்தையும் மட்டும் திட்டிக் கொண்டுடே இருந்தார் என்பது எல்லாம் பொய் பிரச்சாரம், 
 
1940 களிலே சோதனைக் குழாயில் குழந்தையை உருவாக்குவதை விஞ்யானம் கண்டுபிடிக்கும் என்று எழுதின மிகப் பெரிய சிந்தனையாளர், பொதுவுடைமை கருத்துக்ளை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்ட ஓர் சமுக போராளி, எங்கெல்லாம் சமத்துவம் இல்லையோ அங்கெல்லாம் போராடிய ஒரு மானுட காதலர் பெரியார், அப்படிப்பட்ட ஒரு உன்னத சிந்தனையாளரின் 13 வருட சிந்தனைகளை பெரியார் திராவிட கழகம் திரட்டி, தொகுப்பாக்கி நீதிமன்றம் வரை போராடி மீட்டெடுத்து வந்துயிருக்கிறார்கள், அவர்கள் பணி சாதரணம் இல்லை, அளப்பெரிய பணி, அந்த பணியை சிறப்பிக்கும் பொருட்டும், பெரியார் சிந்தனையை கடைத் தமிழனுக்கும் எடுத்துச் செல்லும் விதமாகவும் கீற்று இணையதளம் வருகிற 18 ஆம் தேதி(18-09-2010), சனிக்கிழமை மாலை 4 மணி அளவில் தேவநேயப் பாவாணர் நூலக அரங்கு, அண்ணா சாலை, சென்னை அரங்கில் வைத்து பெரியாருடன் ஒரு பயணம் (1925 -‍ 1938 குடிஅரசு தொகுப்புகளின் வழியே) என்ற தலைப்பில் கூட்டம் நடத்த உள்ளார்கள்,

அருமையான 5 பேச்சாளர்கள் காலம் வாரியாக பெரியாரின் சிந்தனையை தங்கள் பேச்சின் வழியாக தர இருக்கிறார்கள், இந்த நிகழ்வு கண்டிப்பாக நம் அனைவருக்கும் பெரியார் பற்றிய ஓர் பன்முக அறிமுகமாக இருக்கும், ஆதலால் தோழி/தோழர்களே அனைவரும் தவறாது இந்த கூட்டத்தில் கலந்துக் கொள்ள வேண்டுகிறேன்.

இந்த கூட்டச் செய்தியை உங்கள் வலைப்பூ மூலமாகவோ மின்ன்ஞ்சல் முலமாகவோ உங்கள் நன்பர்களுக்கும் கொண்டு செல்லுங்கள், கூட்டத்திற்கும் அழைத்து வாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நான் கண்டிப்பாக கூட்டத்தில் கலந்துக் கொள்வேன்! நீங்கள்!!!

என்றும் தோழமையுடன்,

தோழன் மோகன்,

மலரட்டும் மானுடம்
 
Mohanraj Murugesan
பதிவுலகமே தோள் கொடுங்கள்!!!

முன் குறிப்பு:
இந்த கவிதை நான் எழுதியது இல்லை, என் அன்பு தோழன் சிவக்குமார் எழுதியது. சிவக்குமார், நான் எப்போதும் நம்பும் இளைய சமுதாயத்தை சேர்ந்தவன், கல்லூரி கால வசந்தங்களில் வசித்தாலும் சமுகத்தின் பால் தீராத காதல் கொண்டவன், அவன் எழுத்துக்களை உலகுக்கு எடுத்து போக வேண்டும் என்ற என் ஆசையின் வெளிப்பாடு இது, இனி இது போல் என்னைச் சுற்றி இருக்கும் இளம் எழுத்தாளர்களை இணையத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறேன். அந்த முயற்சியின் தொடக்கமே இது, பதிவுலகமே தோள் கொடுங்கள்!!!


இலங்கை வாழட்டும் 
மானுடம் தின்று
மறுபரிணாமம் ஈனும்
இலங்கை இன்னும்
வாழட்டும்

நீங்கள் பயப்பட வேண்டாம்

இனப் படுக்கொலையை எதிர்த்து
எழும் எங்கள் போராட்டங்கள் எல்லாம்
வருடம் ஒருமுறை நடக்கும்
தேரோட்டம் போல் ஆகிவிடும்

உண்ணாவிரதம் இருந்தோம்
உயிர்கூடக் கொடுத்தோம்
உங்களுக்கென்ன ?

சிரித்து விளையாட
எங்கள் இனத்தின்
இளம் கன்னிகள் !

சிதைத்துப் பார்க்க
எங்கள் இனக்
குழந்தையின் சிற்றுடல் !

இன்னும் என்னவெல்லாம் செய்ய எண்ணம்
எங்களுக்குத் தெரிந்தது
இரண்டு தான்
அஹிம்சை ஒரு வழி
அடிமை ஒரு வழி


இலங்கை இன்னும்
வாழட்டும்

அங்கே தீர்ந்தால் சொல்லுங்கள்

நாங்கள் இருக்கிறோம்
இன்னும் கட்டலாம்
சிலக் கல்லறையை
இனியும் வெடித்துச் சிதறலாம்
சில கருவறையை

_ இ.சிவக்குமார்
Mohanraj Murugesan
இனி நான் என் செய்யேன்?

அங்கு என்ன சத்தம்?
     என் ஹார்மோன்களின்
     வெள்ள பெருக்கு... 
ஏன் அப்படி?
     அவள் கண்சிமிட்டலை 
     கண்டுவிட்டேன்....

இது என்ன
இப்படி ஓர் பேரொலி?
      இது என்
      இதய துடிப்பு
      மன்னிக்க
      இதய வெடிப்பு
இது எதனாலோ?
     அவள் புன்னகை
     பூ பூத்துவிட்டாள்...

என்ன அது
ஒப்பாரி?
     என் மூளைசெல்கள்
     மூர்ச்சையாகிவிட்டன
இதற்கு
மூலம் யாரோ?
     அவளே
     அதோ
     அந்த கடைகண்ணின்
     கதிர்வீச்சு...

அங்கு என்ன
கைதட்டல் ஒலிகள்
அதுவும் நுரையீரலில்...
இதற்கும்
அவள் தான் காரணமோ?
     பிறகு அவளே தான்
     அவள்
     மட்டுமே தான்...
     அதோ
     அவள் சுவாசித்து அனுப்பிய
     மூச்சுக்காற்றை
     முயன்று பிடித்துவிட்டதாம்
     மூக்கு
     அதற்கு தான் இத்தனை 
     ஆர்ப்பாட்டம்...

ஏய்! ராஜகுமாரி,
வைர விழியாள்
வாள் சண்டை செய்தாய்
என் விழியோடு;
தாங்கி கொண்டேன்...

தொடமுடிந்த தூரத்தில்
தொடமுடியாமலும்;
தொடமுடியாத தூரத்தில்
தொடவிட்டும்;
மாயங்கள் செய்தாய்
என் கைகோடு
தாங்கி கொண்டேன்...

என் ஒரு மைல் பேச்சுக்கு
ஒரு பொன்
முறுவல் சிந்திவிட்டு
என் உதடு உறையச் செய்தாய்
அப்போதும்
தாங்கி கொண்டேன்...

ஆனால்

இப்போது
உள் நின்றும்  
உயிர் குடித்தால்
இனி நான் என் செய்யேன்???
Mohanraj Murugesan
ஆகஸ்டு 15 இந்திய தேசத்தின் அடிமை(கள்) தின விழா

முதலில் இந்தியா தேசமா?

எந்த கடலில் பிடிப்பட்டாலும்
பாகிஸ்தான் மீனவர்கள்
பாகிஸ்தான் மீனவர்களே.....
ஆனால்
இந்திய பெருங்கடலிலே
சிறிலங்கா ராணுவத்தால்
சுட்டுக் கொல்லப் பட்டாலும்
அவர்கள்
தமிழக மீனவர்கள் தான்
இந்திய மீனவர்கள் அல்ல...

சரி, இந்தியாவிற்கு சுதந்திர தின விழா
தேவைதானா?

Mohanraj Murugesan
என் ஆசை
என் தேவதையே,

இது என் ஓர் ஆசை
இல்லை இல்லை
இது என் பேராசை

என் கை பிடித்து
கடத்திச் செல்

யாரும்
காணாத இடத்திற்கு,

யாரும்
போகாத இடத்திற்கு...

நீயும் நானும் மட்டும்
தனித்திருப்போம்
அன்பின் மழையில்
நணைந்திருப்போம்...

உன் மடி கொடு
மாய்ந்து போகிறேன்...

ஓர் கண் சிமிட்டு
கற்றோடு
கரைந்து போகிறேன்...

ஒரு புன்னகை பூ வீசு
புவியோடு
புதைந்து போகிறேன்...

என் இனியவளே,

இப்படியே இருக்கிறேன்

இப்படியே இறக்கிறேன்......... தொடர்புடைய முந்தைய கவிதகள்
என் விடலைப் பருவ கவிதைகள் - 1
என் விடலைப் பருவ கவிதைகள் -2
என் விடலைப் பருவ கவிதைகள் -3
என் விடலைப் பருவ கவிதைகள் -4
Mohanraj Murugesan

இது தான் கடவுளா?
 
இல்லாத கடவுள் பெயரால் கல்லா கட்டும் மதவாதிகளே, பயத்தை பக்தியென்று புலம்பி திரியும் பதர்களே, கு.ரங்குசாமி என்பதை குரங்குசாமி என்று மாற்றினால் குபேரனாகி விடலாம் என்று நம்பும் சிந்தனை அற்றவர்களே, ராகு கேது என்ற ஒன்றே வான் வெளியில் இல்லாத போது அதன் பெயர்ச்சியால் மலச்சிக்கல் வரும் என்று சொன்னாலும் மணடையாட்டும் மெத்த படித்தவர்களே, மென்பொருள் நிறுவனத்தில் பணி புரிந்தாலும் கொண்டக்கடலை மாலையோடு வலம் வரும் குத்து விளக்குகளே!!!

உங்களை பார்த்து கேட்கிறேன் இது தான் கடவுளா?

Mohanraj Murugesan

என் செல்ல பப்லுக்கு

வான மகளே,
வட்ட நிலவே,
வெள்ளி மலரே,

இயற்கை படைத்த
அழகின் உச்சமே
எப்படி இருக்கிறாய்?

நீ மட்டுமே
பேரழகி என்று
நினைத்திருந்தேன்;

நீ மட்டுமே
அழகின் மொத்தமென்று
மயங்கியிருந்தேன்;

நீ மட்டுமே
ஒரே ஒரு பார்வையில்
உயிர் கரைக்கும்

மின்சாரமென்று
சத்தியம் செய்தேன்...

ஆனால்

இவை அனைத்தையும்
ஒரு நொடியில்
உடைத்துவிட்டாள்
அவள்...

சிறகுகள் மட்டும்
முளைத்திருந்தால்
அவள் தேவதை...

அவள் மட்டும்
விண்ணில் தவழ்ந்துவந்தால்
அவள் வண்ண நிலா...

அவள் மட்டும்
கை அசைத்து காற்றுகிழித்தால்
அவள் தென்றல்...

அவள் மட்டும்
கண்சிமிட்டி நின்றிருந்தால்
அவள் நட்சத்திரம்...

அவள் மட்டும்
முகம் மலர்ந்தால்
அவள் மல்லிகை...

ஏய்! என்னாயிற்று,
ஏன்? மேகத்திரை
போட்டுக்கொண்டாய்

பப்லு
ஓ! கோபமா?

கவலை வேண்டாம்,
உன்னை குழந்தையாய்
பெற்று எடுக்கிறேன்,

உன்னை
கொஞ்சி கொஞ்சியே
உன் ஆசை தீர்க்கிறேன்
போதுமா???
Mohanraj Murugesan
எனக்கு தெரிந்தது...உங்களுக்காக...

முன் குறிப்பு,
இந்த பதிவு நான் சுமார் முன்று வருடங்கள் முன் எழுதியது, என் மின்ன்ஞ்சலை தூசி தட்டும் போது கிடைத்த்து, இது ஓர் மீள் பதிவே, அது மட்டுமல்ல நான் எழுதிய முதல் கட்டுரை இது தான்....


தமிழா!!! உன் கற்பனையின் கணம் கண்டு ஒவ்வொரு முறையும்
வியக்கிறேன்,வியந்து கொண்டேயிருக்கிறேன்...
இங்கே நான் உங்களுக்காக விவரிக்க போகும் கற்பனை, நான் அறிந்து வியந்தது மட்டுமல்ல நீங்கள் அறிந்து வியக்கவேண்டும் என்றே விவரிக்கிறேன்...
இங்கு சொல்லபோகும் கற்பனையின் கணம் உணரும் அத்தனை நெஞ்சகளுக்கும் என் தமிழ் வாழ்த்துக்கள்...

இனி கற்பனை பார்ப்போம்,
நாம் அனைவருமே வானமகள் தன் முழுமுகம் காட்டி முத்து முத்தாய் சிரிக்கும் ஒரு பெளர்ணமியை பார்த்திருப்போம்....

இப்படியும் ஓர் பேரழகா? இவளை பெற்றார்களா? இல்லை செய்தார்களா? என்று வியக்க தொன்றும் பெண்களையும் பார்த்திருப்போம்...

ஆனால் தூரமாய் எப்போதுமே துடித்து கொண்டேயிருக்கும் விண்மீனை கவனித்திருக்கமாட்டோம்...
கவனித்திருந்தாலும் பெரிதாய் கவலை கொண்டிருக்கமாட்டோம்...

ஆனால் ஓர் தமிழ் கவிஞன் கவலைகொண்டான் விண்மீன் விட்டு விட்டு துடிக்கும் ரகசியம் தெரிந்தே தீரவேண்டும் என்று தீவிரம் கொண்டான், இமை மூடினான் கற்பனை கண் திறந்தான், காரணம் கண்டு கொண்டான்...
அந்த கவிஞனின் காரணம் அறிய நீங்கள் மூன்று விஷயங்கள் கற்பனை செய்ய வேண்டும்...

ஒன்று: மேலே பெளர்ணமி நிலவு பளபளக்கும் வானம்
இரண்டு: கீழே மானுட தேவதையாய் ஓர் மல்லிகை மலர் போன்ற மங்கையின் முகம்
மூன்று: இரண்டுக்கும் நடுவே புதிதாய் பிறந்த ஓர் விண்மீன்

இப்போது மெதுவாய்
விண்ணிலிருக்கும் "வெண்ணிலாவையும்"
மண்ணிலிருக்கும் "பெண்ணிலாவையும்"
மாற்றி மாற்றி கவனியுங்கள்...
உங்கள் கண்ணை உங்களாளே நம்ப முடியவில்லையல்லவா?
உங்களுக்கே குழப்பம் வருகிறதல்லவா?
"எந்த நிலா? உண்மை நிலா?" என்று
இதே குழப்பம் தான்
இதே பதற்றம் தான் அந்த விண்மீனுக்கும்
"எந்த நிலா? உண்மை நிலா?" என்று
பாவம், அந்த நொடியில் ஆரம்பித்த குழப்பம் தான் இந்த நொடியும் தொடர்கிறது...

இன்று இந்த நொடி வரை விண்மீனால் அறியமுடியவில்லை
"எந்த நிலா? உண்மை நிலா?" வென்று என்கின்றான் அந்த தமிழ் கவிஞன்
அந்த கவிஞன் வெறு யாருமில்லை பொய்யா புலவர் நம் "வள்ளுவன்" தான்...
இந்த கற்பனை வருவது வேரு எங்குமில்லை உலகமே போற்றும் நம் "திருக்குறளில்" தான்...

குறள் எண்:1116

குறள்:
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.


எப்படி கற்பனை கொண்டிருக்கிறான் கவிஞன்!!! சத்தியமாய் நான் கற்பனை கூட செய்தது இல்லை இப்படியெல்லாம் கவிகள் செய்யமுடியுமென்று...
இது போல் தமிழனின் தனிசிறப்பு பதிவு செய்தால் ஓராயிரம் கோடி வளை பதிவுகள் பதித்தாளும் போதாது...

ஆகவே உலக தமிழர்களே நான் முன் வைப்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான்

"நாம் அனைவரும்,
நான் தமிழன் என்று மார் தட்டி கொள்ளவில்லையென்றாலும்
நான் தமிழன்;
என் மொழி தமிழ், என்று சொல்வதில் கேவலம் கொள்ளவேண்டாம்"
ஆங்கிலமே வேண்டாமென்று சொல்லவில்லை தமிழை மறந்துவிடாதீர்கள்...


எற்கனவே தமிழை எழுதவோ? படிக்கவோ? தெரியாத ஒரு தமிழ் தலைமுறையே உருவாக்கிவருகிறோம் சத்தமில்லாமல்...

தமிழை இரண்டாவது மொழியாக வைக்கலாமா? வேண்டாமா? என்று யோசிக்கும் பள்ளிகள் பெருகிவருகின்றன...

ஆதலால் நான் முன் வைப்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான்
"நாம் அனைவரும்,
நான் தமிழன் என்று மார் தட்டி கொள்ளவில்லையென்றாலும்
நான் தமிழன்
என் மொழி தமிழ் என்று சொல்வதில் கேவலம் கொள்ளவேண்டாம்"
ஆங்கிலமே வேண்டாமென்று சொல்லவில்லை தமிழை மறந்துவிடாதீர்கள்...

இங்கு நான் பதித்த அனைத்தும்
எனக்கு தெரிந்தது... உங்களுக்கு தெரியவேண்டியது...

என்றும் உங்களுக்காக,
மோகன்
Mohanraj Murugesan
உன் விழிகள் 


வைர விழியாளே, 

விழிகளெனும் விசித்திரங்கள்
தாக்கியப் பொழுது
வார்த்தைகள் வசப்படவில்லை
உவமைகள் உரியதாயில்லை

ஆனால்

உள் உணர்வோ
கவி செய்கிறது
கற்பனை கொள்கிறது,
சங்கீதம் பாடுகிறது,
சங்கடங்கள் தருகிறது

ஏய் தங்கதழலே,
உன் விழிகளெனும்:
வேல் அம்புகள்,
செய்யும் காயம்,
ரத்தம் சிந்தும் ரணங்களல்ல...
ரகசியமாய் தாக்கும்
சந்தோச கஷ்டங்கள்...

மினசாரமும் உன் விழியும்
சொந்தங்களோ?
ஒருமுறை தாக்கினாலும்
உயிர் கரைக்கிறது...
Mohanraj Murugesan
முன் குறிப்பு: இன்று(ஜீன் 11) நான் எனது முதல் மென்பொருள் நிறுவனத்தில் இருந்து வேலையை  விட்டு கிளம்புகிறேன், எனது நிறுவனம் மற்றும் ஹைதராபாத் நண்பர்களுக்காக எழுதிய கவிதை இது...இன்று பிரிகிறேன் உங்களிடம் இருந்து!!!


பிரிகிறேன் தோழிகளே,
பிரிகிறேன் தோழர்களே,
பிரிகிறேன் ஹைதராபாத்தே,

எத்தனை கனவுகள்,
எத்தனை நிகழ்வுகள்,
எத்தனை நினைவுகள்,
எத்தனை சிரிப்புகள்,
எத்தனை சன்டைகள்,
எத்தனை சமரசங்கள்,
எத்தனை மொக்கைகள்
இன்னும்
எத்தனை எத்தனையோ....

என் நினைவுகளை உங்களிடம் விட்டு விட்டு
உங்களின் நினைவுகளை என்னோடு ஏற்றிச்செல்கிறேன்...

எவ்வளவு சமாதானம் சொன்னாலும்
நெஞ்சு ஏற்பதில்லை
பிரிவுகளை...

எவ்வளவு மறைத்தாலும்
வழிந்து விடுகிறது
கண்ணீர் துளிகள்...

எவ்வளவு தவறுகள் இருந்தாலும்
முதல் நிறுவன அனுபவம்
முதல் முத்தம் போல்
என்றும் நிறைந்திருக்கும்
அதே ஈரத்துடன்...

விடை குடுங்கள் நன்பர்களே
விடியல் நோக்கிய
என் பயணத்திற்கு,


நட்பை எப்போதும்
தூரங்கள் முடிவு செய்வதில்லை
ஆனால்
நேற்றுவரை உங்கள் அனைவரிடமும்
நான் கண்டு, ரசித்த
சிரிப்புகளும்,
சின்ன சின்ன சன்டைகளும்,
பெரிய அறிவுரைகளும்,
ஆடி மகிழ்ந்த நிகழ்வுகளும்,
அன்பான கண்டிப்புகளும்,
நேசமான பகிர்வுகளும்
மரண மொக்கைகளும்
இனி
நினைவுகள் தான்
எனும் போது...
நிச்சியமாய் வலிக்கிறது நெஞ்சு...

சேர்ந்தவர்கள் பிரிவது
எதார்த்தம் என்றால்
பிரிந்தவர்கள் சேர்வதும்
எதார்த்தம் தானே...

மற்றொரு நாள்
மீண்டும் கைகோர்போம்
மீண்டும் பயணிப்போம்
ஏனென்றால்
எப்போதுமே பயணங்கள்
மட்டும் முடிவதெயில்லை....


என்றும் உங்கள் பயணங்களில் ஒருவன்,
தோழன் மோகன்
Mohanraj Murugesan
நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைக்கெட்ட மாந்தர்களை நினைத்துவிட்டால்...

25 வருடம் கழித்து தீர்ப்பு வருகிறது ஆம் குற்றம் தான், இருந்தால் என்ன குற்றம் இழைத்தவர்கள் கோடீசுவர இந்தியர்கள் என்பதால் போனா போகுதுனு இரண்டாண்டு கால சிறை தண்டனை விதித்திருக்கிறது இந்திய நீதி மன்றம், இதில் வேடிக்கை இது தான் தீர்ப்பு வந்த சாய்ங்காலமே குற்றம்புரிந்த அனைவருக்கும் பிணை விடுதலை, பிறகென்ன அந்த நல்லவர்கள் (நயவஞ்சகர்கள்) கொன்றது இந்தியாவின் ஒற்றை கலங்கரை விளக்கான, இந்தியாவின் வல்லரசு கனவை நினைவாக்க பிறந்த ஒற்றை விடிவெள்ளியான, இந்தியாவின் பாதுகாப்பில் ஊழல் செய்த, தமிழீழ மக்களின் குரவளையை அறுத்த காங்கிரசின் தலைவர் ராஜீவ் காந்தியைவா? இல்லையே உழைப்பை மட்டுமே நம்பி, உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து போன வெறும் 8000 சாமானிய இந்தியர்கள் மன்னிக்க இந்தியா என்ற நிலப்பரப்பில் வாழ்வதால் இந்தியர்களாக ஆக்கப்பட்ட இந்தியர்களை தானே, இதுக்கு இரண்டு ஆண்டே ரொம்பக் கூட...

அப்ப போபாலில் விசவாயு தயாரிக்க அனுமதி வாங்காமல், எந்த ஒரு பாதுகாப்பு விதிமுறையையும் சரிவர பின்பற்றாமல், Union Carbide யால் இயக்கி வந்த அந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட விசவாயு கசிவால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்ட 2 லட்ச பொது மக்களுக்கும் இது தான் நீதியா? என்று நீங்க யோசிச்சாலோ,கேட்டாலோ, இது தான் பதில்,

Mohanraj Murugesan

இரண்டாம் முற்றுகை
 
என் இனியவளே,

ஓராயிரம் கோடி
வெண்ணிலாக்கள் உடைத்து
பார்க்கடல் ஊற்றி
பளிங்குகல் சேர்த்து
பத்திரமாய்
படைக்கபட்ட
பவளம் தானே
கண்ணே
உன் நிலா முகம்...

Mohanraj Murugesan
நானொரு வெயில் காதலன்!!! 

வெயில் என்றவுடனே வேர்வை, புழுக்கம், அனல் காற்று, தாங்கவே முடியாத வெட்கை போன்ற ஏதாவது ஒன்றோ பல உணர்வுகளோ நம்மில் பலரிடம் தோன்றுகிறது... உச்சி வெயிலில் உங்கள் நண்பரிடமே, வா, வெயிலில் விளையாடலாம் அல்லது வெயிலில் பேசிக்கொண்டே நடக்கலாம் என்று சொல்லுங்கள், அவ்வளவுதான்,"உனக்கேன்ன பைத்தியமா என்றே கேட்பார்?"

உடனே கேளுங்கள், "சூரியன் மட்டும் இல்லையென்றால் பூமியே பிறந்திருக்காது தெரியுமா?"

சற்றே முழிப்பார், விடாதீர்கள் அடுத்த கேள்வியையும் கேட்டுவிடுங்கள், "சூரியனின் வெப்ப கதிர்கள் மட்டும் பூமிக்கு வருவது நின்றுப் போனால் மனிதன் மட்டுமல்ல அனைத்து உயிர்களும் அழிந்துபோகும் என்றாவது தெரியுமா?"

உங்கள் நண்பர் கொஞ்சம் சுதாரித்து எல்லாம் தெரியும் ஆனாலும் வரமுடியாது, வெயில்ல போனா வேர்க்கும், வேர்த்தா வாடை வரும், நான் வரலைனு சொன்னா...

ஒரு பொன்முறுவல் சிந்திவிட்டு நிதானமாகச் சொல்லுங்கள்,

வேர்வை வெளியேருவது உடலுக்கு நல்லது,

உடல் வேர்பதற்க்கும் உடல் ஆராக்கியத்திற்க்கும் நேரடி பங்குண்டு,

உடலிருந்து வெளியேரும் வேர்வைக்கு வாடைக் கிடையாது, ஆனால் நம் தோலில் இருக்கும் பாக்டீரியா போன்ற நுன்கிருமிகளாலும், அழுக்காலும் தான் வேர்வைக்கு வாடை சேர்க்கின்றன என்ற அறிவியலையும் சேர்த்துச் சொல்லுங்கள்,


வாயடைத்துப் போவார் உங்கள் நண்பர் என்று தானே நினைப்பீர்கள்,

இல்லை அவர் உடனே தனது வஜ்ராயூதத்தை பயன்படுத்துவார், அது "வெயிலால் என் உடல் நிறம் கருத்துபோயிரும்" என்பதல்ல "நான் கருப்பாகிவிடுவேன்" என்பதே அது...

Mohanraj Murugesan
முதல் முற்றுகை

என் பிரியமானவளே,


என் இனியவளே,
என் இம்சையாளே,
என் ஆருயிரே,
என் ஓருயிரே,

என் கண்ணில் விழுந்தாய்
நினைவில் நின்றாய்;
உயிராய் உரைந்தாய்
உள்ளமாய் திரிந்தாய்

உண்மை சொல்
என் கண்மணி
நீ
தேவதைதானே??? 
Mohanraj Murugesan
இந்திய தமிழர்களே, எப்போதும் வேடிக்கை மட்டுமே பாருங்கள்!!!


இந்திய தமிழர்களே,
நலமா?
உங்களுக்கேன்ன
நன்றாக திங்க இலவச அரிசி,
உண்ட களிப்பு நீங்க இலவச தொலைக்காட்சி,
நேரம் போக்க இளைய தலைவலியின் 50 தாவாது படம்,
வெட்டி பேச்சு பேச குஷ்புவின் அரசியில் வருகை,
போதா குறைக்கு செம்மொழி மாநாடு..

ரொம்பவே நல்லாயிருக்கிறீர்கள்...

நாங்கள் தான்,
சம உரிமைக்காய்
அறவழியில் அணிதிரண்டோம்;
அப்படியே எறித்தான் சிங்களவன்...

எதிர்வினையாய் ஆயுதம் ஏந்தினோம்
பயங்கரவாதிகள் என்றது இந்தியா,
நீங்களும் வாய்மூடி ஆதரித்தீர்கள்
உங்கள் மண்ணில் வைத்து
ஒரு களவாணி உயிரை காவுகொண்டதற்காக?

சுதந்திரம் வேண்டி
சிங்களவன் மீது போர் தொடுத்தோம்,
இந்தியா சிங்களவனின் இறையாண்மையைக்காக்க
அள்ளி அள்ளி கொடுத்தது
குண்டுகளையும், தோட்டாக்களையும்
தமிழ்நாட்டின் தரைவழியே...

சிங்களவன்
மூன்றே நாளில் முடித்துவிட்டான்
ஒரு மாபெரும் இனப்படுகொலையை,
நீங்களோ
ஏற்கனவே காசு, சாதி, மதத்தினால்
முடிவாகியிருந்த தேர்தல் முடிவுகளை
பிடித்து முட்டிக்கொண்டு இருந்தீர்கள்...

உங்கள் பத்திரிக்கைகளோ
போர் முடியும் வரை ஆருடம் சொன்னார்கள்
முடிந்தப்பின்,
போராளிகளை குற்றவாளியாக்கி
ராஜபக்சேவே நாயகன் ஆக்கினார்கள்...
"இலங்கை ரத்னா" என்ற ஒரு விருதுக்காக
இன்று வரை முதல் பக்கத்தில் ராஜபக்சேக்கு
கட்டம் கட்டி நக்கி பிளைக்கிறார்கள்....

உங்கள் தமிழின தலைவரே(துரோகி)
தந்தி குடுத்தார், தபால் போட்டார்
திடீரெண்டு ஒரு வேலை உண்ணாவிரதம்(த்தூ)
இருந்து போரையே நிறுத்திவிட்டதாக சொல்றாறு..
வெங்காயம்....

இதோ,
இனப்படுகொலை நடந்து
ஒரு ஆண்டு முடிவடைந்துவிட்டது


Mohanraj Murugesan
                எனக்கு பிடித்த பாவேந்தர் பாரதிதாசரின் கவிதைகள் - 1!!!

நிலா அஃறிணையா? அதுக்கு உயிரில்லையா? அது வெறும் பாலைவனம் தானா? ஆம் என்று தான் சொல்லும் அறிவியல் அது தான் உண்மையும் கூட...

இருந்தால் என்ன, பெளர்ணமி நாளில் கடற்கறை மணலில், கடல் என் கால் நனைக்க, அந்த முழுநிலவை பார்க்கும் போது எனக்கு நிலா, மங்கையின் முகமாக தான் தெரிகிறது, கடற்கரையில் அத்தனை பேர் இருந்தும் என் உதடு குவித்து அவளுக்கு (நிலாவுக்கு) முத்தம் குடுக்கிறேன், எனக்கு சிறகில்லையென்பதால் தானே அவளை நெஞ்சார தழுவிக்கொள்ள முடியவில்லை என்று ஆதங்கபடுகிறேன், சரி அவளாவது நான் படும் காதல் துயர் கண்டு அவள் ஊடல் விடுத்து வானம்விட்டு இறங்கி வரக்கூடாதா? என்று வருத்தபடுகிறேன், சில நேரங்களில் மண்டியிட்டு என் இரு கை விரித்து அவளை நோக்கி கெஞ்சியும் பார்த்துவிட்டேன் என்ன கோபமோ? அவள் இன்று வரை தரையிறங்கி வருவதில்லை....

என்ன முட்டாள்தனமாக தெரிகிறதா? பரவாயில்லை இந்த உணர்ச்சியை பொருத்தவரை நான் ஒன்றும் தனி மனிதனல்ல, எனக்கு தெரிந்து எல்லா கவிஞ்கர்களுமே நிலாவை பாடியிருக்கிறார்கள், மோகம் கொண்டுயிருக்கிறார்கள், பைத்தியமாக காதலித்திருக்கிறார்கள், ஏன் பாரதிதாசன் கூட இதில் அடக்கம் தான், வியப்பாக இருக்கிறதா, இதோ அவரின் கவிதை கிழே, நீங்களே முடிவுசெய்யுங்கள்...

Mohanraj Murugesan
பதிவுலகமே! வாங்க கொண்டாடுவோம் பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளை!!!


            இன்று வாலிவ கூட்டத்தையே, இரண்டாக பிரிக்கலாம், கவிதை எழுதுபவர்கள் அல்லது கவிதை எழுதாதவர்கள், இன்னொரு வகையும் உண்டு அடுத்தவர்கள் கவிதையை தனதென்று சொல்லி கொள்ளும் இரவல் கவிஞகர்கள், இவர்களை காட்டிலும் ஒரு புதுவகையான ஒரு கூட்டம் இருக்கிறது, தனது மனிததன்மையை இழந்துவிட்டு வெறும் இயந்திரங்களாக இயங்க பழகிவிட்டவர்கள், கவிதைகளை வைத்து என்ன காசு பார்க்கமுடியும் என்னும் அளவுக்கு அவர்களின் மனம் சுரிங்கிபோயிருக்கிற்து.... அவர்களை விட்டுவிட்டு பார்த்தால் நாம் எல்லாருமே கவிதையை சந்தித்திருக்கிறோம்... எல்லோர் மனதுக்குள்ளும் எங்கோ மூலையில் ஒரு கவிதை ஒட்டிக்கொண்டேயிருக்கிறது...
Mohanraj Murugesan

காரணம் 1: “எனது சுயநலமும், இந்தியாவின் களவாணித்தனமும்”

இந்த தொடர் பதிவுகளில், முதல் பதவில் நான் ஒப்புக்கொண்டது போல் எனது சிரிப்பை எந்த காரணத்தினால் தொலைத்தேன் என்று யோசித்தபோது, முதல் காரணமாய் எனக்கு தோன்றியது “எனது சுயநலமும், இந்தியாவின் களவாணித்தனமும்” தான்…

தலைப்பே வில்லங்காமயிருக்கே… கண்டிப்பா இது பிரிவிணைவாதம்தான் அல்லது இவன் ஒரு தேசதுரோகி என்று முடிவுகட்டியவர்கள், அப்படியே இந்த வலை சன்னலை மூடிவிட்டு உங்கள் தேசவெறியை மன்னிக்க தேசபக்தியை காட்டவே கண்டுபிடிக்கபட்ட கிரிக்கேட் விளையாட்டையோ? திரையில் மட்டுமே நாட்டுக்காக உயிரை குடுக்கும் உங்கள் கதாநாயகரகளையோ? ரசிக்க சென்றுவிடும் படி கேட்டுக்கொள்கிறேன்….
இந்த முன்னெச்சரிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் பதிவை படித்துவிட்டு குத்துது குடையுது என்றால் நான் பொறுப்பள்ள..

முதலில் ஒன்றை தெளிவுபடுத்துகிறேன், இந்த நிலபரப்பில் அல்லது இந்த நாட்டில் பிறந்திருக்கிறேன், இந்த அரசிடமிருந்து தான் எனது கல்வி, உணவு, உறவிடம் மற்றும் உடையை, எனதோ அல்லது எனது  பெற்றோரின் உழைப்புக்கொண்டு பெற்றுயிருக்கிறேன் ஆதலால் இது என் தாய் நாடு நான் விரும்பாவிட்டாலும், ஆனால் இந்த ஒரு காரணத்திற்காகவே நான் இந்தியாவை விமர்சிக்கவே கூடாது என்று சொன்னாலோ, இந்தியா தனது பிராந்திய வல்லாதிக்க ஆசைக்காகவும், இந்திய மற்றும் பன்னாட்டு நிருவனங்களுக்காகவும்  “யாரை வேண்டுமானாலும் கொன்றுகுவிக்கலாம்(தனது சொந்த குடிமகன்கள் உட்பட), அவர்களின் நிலங்களிலிருந்து விரட்டி அடிக்கலாம்” அல்லது “இனப்படுகொலை செய்ய துணைபோகலாம்”, அதை நான் வேடிக்கைமட்டுமே பார்க்கவேண்டும் என்று சொன்னால், கண்டிப்பாக என்னால் அப்படியிருக்க முடியாது, நான் விமர்சிப்பேன், ஒருவேளை இந்தியாவின் அரசையும், அரசு இயந்திரங்களையும் எதிர்த்தால் மட்டுமே நீதியென்றால் அதற்கும் தயார் நான்…

Mohanraj Murugesan
இதோ  இந்த நொடியில் கூட பல கோடி மனிதர்கள் புன்னகைக்கக்கூடும், அது காரணமேயில்லாதாதகவும் இருக்கக்கூடும், காரணம் கருதியும் இருக்கக்கூடும், சிரிக்க வேண்டுமே என்று சிரிக்கவும் வாய்ப்பிருக்கிறது, சிரிக்கவே கூடாதென்று வாய்பொத்தி, பின்பு முடியாமல் விழுந்து, புரண்டு, கண்ணில் நீர் வர சிரிக்கும் சூழலும் அமையக்கூடும், எப்படியோ நம்மில் யாரோ ஒருவரோ, ஒரு கூட்டமோ சிரித்துக்கொண்டே இருக்கிறது எப்போதும்….


நாம் எல்லோருமே மகிழ்ச்சியாய் சிரித்துக்கொண்டே இருக்கவே நினைக்கிறோம், ஆசைப்படுகிறோம், ஏதாவது செய்து எல்லோரையும் சிரிக்கவைக்கே முயற்சிக்கிறோம், நம் முயற்சியில் நமக்கு பிடித்தவர்கள் சிரித்துவிட்டால் துள்ளிக்குதிக்கிறோம், உலகத்தையே மறந்து போகிறோம், அந்த சில நொடிகள் தேவனாகிறோம் அல்லது தேவதையாகிறோம். நமக்கு புன்னைகையில்லாத உலகத்தை கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது, பொதுவாக புன்னகையில்லாமல் உம் என்று இருக்கும் மனிதர்களை நாம் ஏற்றுக்கொள்வதில்லை….இப்படி புன்னகைக்கு நிறையவே நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.


என் கேள்வி உண்மையிலே புன்னகை அவ்வளவு முக்கியமா?
நம்மை சுற்றி வாழும் எந்த விலங்கும் எப்போதும் புன்னகை செய்வதில்லை அல்லது புன்னகை என்ற உணர்வே அவைகளுக்கு இருப்பதில்லை…
அப்படியென்றால் புன்னகை முக்கியமில்லையா?

அட போடா! பைத்தியக்காரா! நாம் மனிதர்கள் அவைகள் விலங்கள் அதனால் தான் எப்படி.. என்கிறிர்களா…
அறிவாளிகளே! புரிந்துக்கொள்ளுங்கள், மனிதனும் விலங்கே, நாமும் அவைகளிள் ஒரு கூட்டமே…
போடா கிருக்கு!!! இந்த பூமி எங்களுக்காக கடவுள் படைத்தது, அனைத்து உயிரினங்களும் எங்களுக்கு சேவைச்செய்யவே படைக்கப்பட்டன என்று மல்லுக்கு வரும் கடவுள் நம்பிக்கையாளர்களே, பொறுங்கள், எப்படியும் நீங்கள் இந்த பூமியை அழித்தால் உங்கள் கடவுள் “ஜீ..பூம்..பா…” போட்டு மற்றொரு பூமி படைத்துதருவார், அவருக்கு தேவையெல்லாம் அதிக பட்சம் 7 நாட்கள் தானே…

ஆதலால் என்னோட பிரச்சனைக்கு வாருங்கள்,
புன்னகை அவ்வளவு முக்கியமா?
சரி இப்போதைக்கு இப்படி ஒப்புக்கொள்வோம்…
மனிதனுக்கு புன்னகை முக்கியம், மகிழ்ச்சியை வெளிப்படுத்த, நம்பிக்கையை உண்டாக்க, அன்பைச் சொல்ல, ஏன் உடம்பை ஆரோக்கியமாய் வைத்துக்கொள்ளக்கூட…

சிரி இப்போ அடுத்த கேள்வி?
எல்லா புன்னகையும் முக்கியமானவையா? மகிழ்ச்சியை வெளிப்படுத்துவையா?
அன்பை சொல்பவையா???

ஐயோ!!! முடியல.. ஆமாம் சாமி… என்றால்

தமிழீழத்தில் எமது தமிழினத்தின் மீது மிகப்பெரிய இனப்படுகொலையை நடத்திவிட்டு, அந்த படுகொலையின் மொத்த பங்கும் எனக்கே என்று பறைசாற்றி, இலங்கையின் ராசாவாக  மூடிசுட்டிக் கொண்டு, வரும் தேர்தலில் எமது கூட்டணி ஜெய்த்தே தீரும் என்று முத்துப்பல் தெரிக்கும் @#$!@# ராஜபக்சே வின் புன்னகை எவ்வளவு முக்கியம்? எப்படிபட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது?

தன் மனைவிக்கும், துனைவிக்கும் பிறந்த பிள்ளைகளில் ஆரம்பித்து தமது பேரன்/பேத்தி களை உள்ளடக்கி, இனி மேல் பிறக்க போகும் கொள்ளு பேரன்/பேத்திகள் முதல்க்கொண்டு கணக்கு பார்த்து தமிழ்நாட்டையும், பதவியையும் பிரித்து கொடுத்துவிட்டு, காசுக்காகவோ, சாதிக்காகவோ, இலவசத்துக்காகவோ ஒட்டு போடப்பொற நாய்க நீங்க!!! என்று நம்மை எல்லாம் பார்த்து ஏளனமாய் சிரிக்கும் @#@%$%^!$ கலைஞகரின் சிரிப்பு, எவ்வளவு முக்கியம்? எந்த வகையை சார்ந்தது???

என்ன பேச்சே காணோம்? ஏன் இந்த மெளனம்???
சரி விடுங்க, சிந்திச்சா கடவுள் கண்ண குத்திரும்….

இவ்வளவு சொல்றியே அப்படி உனக்கும் சிரிப்புக்கும் என்ன தான் பிரச்சனை, என்கிறிர்களா?


அந்த சிரிப்பு தான் பிரச்சனை, கொஞ்ச காலமாமே எனக்கு சிரிப்பே வரதில்லை, அப்படியே தப்பி தவறி சிரிச்சாலும் அது உண்மையா மனசிலிருந்து வந்த மாதிரியில்ல, சும்மா சிரிக்கனுமேனு சிரிச்ச மாதிரியிருக்கு, இதை பார்த்துவிட்டு என்னை உண்மையா நேசிக்கிறவங்க வருத்தபடுறாங்க, “என்ன தான் டா ஆச்சு?” னு கேட்கறாங்க… அப்புறம், என்னை சுத்தியிருக்கிற பச்சை தமிழர்களோ “Where is your Smile டா?”(உன் சிரிப்பு எங்கே?) கேட்கிறாங்கா?

இவ்வளவு பாசமாக விசாரிக்கும் போது, எனக்காக இல்லையென்றாலும் அவுங்களுக்காகவாது என்னுடைய சிரிப்பை தேடலாமென்று முடிவுபண்ணிட்டேன், அதான் அதை தேடுறதுக்கு முன்னாடி அது முக்கியமா என்று யோசிச்சது தான் இந்த முதல் பதிவு…இனி வரும் பதிவுகள் ஏன்? எதற்கு? எப்படி? இந்த சிரிப்பு என்னையோ/நம்மையோ விட்டு பிரிந்துபோனது, அதை எப்படி தேடுவது பற்றித்தான்... இனிமே முழுசா தேடல் தான்..

ஆதலால்,

எற்கனவே சிரிப்பை கண்டுபிடித்தவர்கள் வழிக்காட்டுங்கள்…
என்னைப்போல் தொலைத்தவர்கள், கை சேருங்கள் தேடுவோம் சிரிப்பை!!!

                                                                        இப்படிக்கு,
                                                                        சிரிப்பை தேடும்,
                                                                        சிரிப்பை தொலைத்தவன்…
                                                                                    (அல்லது)
                                                                        சிரிப்பை தொலைத்தவர்கள்…
தேடல் தொடரும்….Related Posts with Thumbnails

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner