Unknown
பெரியாரின் பிறந்தநாளில் பெரியாரிடம் சில கேள்விகள்?
ஏன் எங்கள் எவருக்கும் இல்லாத பொதுநலம் உங்களுக்கு?
அப்படி என்ன உங்களுக்கு இந்த சமுகத்தின் பால் காதல்?

சுயநலமும், லாபநோக்கும், சுரண்டலும் தான் வெற்றியின் சூத்திரங்கள் என்று நாங்கள் மாற்றிவிட்டோம்

ஆனால் நீங்களோ,

உங்களது 95 வருட வாழ்க்கையில் 70 வருடம் பொது நலத்தோடு தொன்று ஆற்றியிருக்கிறீர்கள் ஏன்?

வெறும் 12 கி.மீ தூரம் தான் ராமேஸ்வரத்தில் இருந்து, அவர்கள் கதறி அழுத ஓலம் கூட தெளிவாகத்தான் கேட்டது, ஆனாலும் ஒன்றும் செய்யவில்லை நாங்கள்,

ஆனால் நீங்களோ.

8,20,000 மைல்கள் சுற்றுபயணம் செய்திருக்கிறீர்கள் திராவிட இனம் சமத்துவம் அடைய, பேதம் அகல, சிந்தனை பிறக்க.... எப்படி முடிந்தது உங்களால்?

உண்மை தெரியுமா? நீங்கள் பயணித்த இந்த தூரம், பூமியின் சுற்றளவைப்போல் 33- மடங்கு, பூமிக்கும் சந்திரனுக்கும் உள்ள தொலைவைப்போல் 3- மடங்கு. என்னால் கற்பனைக் கூட செய்து பார்க்க முடியவில்லை ஆனால் நீங்கள் பயணித்திருக்கிறீர்கள் எப்படி?

பெரியாரே, சுய சிந்தனையும், சுய மரியாதையும் இந்த தமிழினம் பெற வேண்டி, நீங்கள் ஆற்றிய அத்தனைச் சொற்பொழிவுகளையும் ஒலிப்பதிவு நாடவில்(cassette) பதிவு செய்திருந்தால் அது 2- ஆண்டுகள், 5- மாதங்கள், 11- நாள்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும்...

சற்றே திரும்பி பார்க்கிறேன், சுய தேவைகள்,சினிமா விமர்சன்ங்கள், வெட்டி அரட்டைகள், பெண்கள் பற்றிய கேவலமான பேச்சுக்கள், கேலிகள் கிண்டல்கள் தவிர்த்து நான் வாழும் சமுகத்திற்க்காக, என் சக மனிதனுக்காக எத்தனை நொடிகள் பேசியிருக்கிறேன் என்று சிந்தித்தால், சில மணித்துளிகள் கூட இல்லை என்னிடம் ஆனால் நீங்கள்?

இதையெல்லாம் செய்து விட்டு நான் ஒரு தொண்டன், சாதரண மனிதன் என்று சொல்லுகிறீர்களே எப்படி?

சரி தான் பெண்கள் சரியாக தான் பட்டம் சுட்டியிருக்கிறார்கள் "தந்தை பெரியார்" என்று

ஒன்றை மறந்தேன்

பெரியரே இன்று பெண்கள் நிலை தெரியுமா?

பெண்களுக்கு பிறக்க உரிமையிருக்கிறது (சில கிராமங்கள் தவிர்த்து) ஆனால் அவர்களின் வாழ்க்கை முடிவுகளை ஆண்கள் தான் முடிவு செய்கிறார்கள் இன்றும்;

வேலைக்கு போகலாம் ஆனால் வீட்டு வேலைகளையும் கட்டாயம் செய்தாக வேண்டும்;

கண்டிப்பாக சுதந்திரம் உண்டு ஆனால் அது எவ்வளவு தூரம் என்பதை ஆண் தான் முடிவு செய்கிறான்...

இப்போதும் பெரியாரே, மீசைக் கொண்ட பேடி பயல்கள், ஒரு பெண்ணை வண்புணர்ந்தால், அவள் தான் கெட்டு போனவள் அந்த நாய் மக்கள் அனைவரும் தன் ஆண்மையை நிருபித்தவர்கள், கெடாதவர்கள்...

நா கூட கூசுகிறது, இன்றும் வரதட்சனை என்று தன்னையும், தன் மானத்தையும் விற்று பிளைக்கிறார்கள் மீசை முறுக்கி கொண்டே!!!

விலைக்கு வாங்க பட்டவன் தானே பிறகென்ன வீராப்பு துணி துவைக்க மாட்டேன், சமையலில் மட்டும் அல்லாமல் எதிலும் உதவி செய்ய மாட்டேன் என்று, உண்மையில் பிச்சைக்காறர்கள் என்று பச்சை குத்தியிருக்க வேண்டும் அவர்கள் நெற்றியில்....

சரி தானே பெரியாரே???

இன்னும் ஓர் சிந்தனையை விதைத்துவிட்டீர்கள்,

உங்களின் தடி சத்தம் கேட்கிறது இன்னும் பலமாக, நீங்கள் மூட்டிய சுய மரியாதை தீ இன்னும் மூர்க்கமாய் எரிய தொட்ங்கியிருக்கிறது, கேள்விகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என் தேடல்கள் போல், சிந்தனையும், மானுடமும் வழிக் காட்ட இன்னும் வேகமாய் பயணிக்கிறேன் நீங்கள் வித்திட்ட பொது நல பாதையில்....

என்றும் பொது நல பாதையில்,
பெரியாருடன்,
ஓர் கருஞ்சட்டைக்காரனாய் மோகன்
7 Responses
  1. Thamizhan Says:

    இத்தனை வயதாகி விட்டது ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்று அக்கறையுடன் சொன்னார்கள்,அவர்களுக்குச் சொன்னீர்களே ஒரு பதில்,அது பொது நலத்தின் முத்திரை!

    என்னதான் சிக்கன்மாகச் செலவு செய்தாலும் எனக்கே தினம் 20ரூபாய் செலவாகிறது. அது பொது மக்கள் பணந்தானே!அதற்கு வேலை செய்ய வேண்டாமா?


  2. subra Says:

    அய்யா அவர்கள் வாழ்ந்த கால கட்டத்தில் நானும்
    வாழ்தேன் என்று நினைக்கும்போது மிகவும்
    பெருமையாக இருக்கிறது .பதிவு மிகவும் அருமை
    வாழ்த்துக்கள் .


  3. பெயரில்லா Says:

    //உங்களது 95 வருட வாழ்க்கையில் 70 வருடம் பொது நலத்தோடு தொன்று ஆற்றியிருக்கிறீர்கள்
    8,20,000 மைல்கள் சுற்றுபயணம் செய்திருக்கிறீர்கள்
    சுய சிந்தனையும், சுய மரியாதையும் இந்த தமிழினம் பெற வேண்டி, நீங்கள் ஆற்றிய அத்தனைச் சொற்பொழிவுகளையும் ஒலிப்பதிவு நாடவில்(cassette) பதிவு செய்திருந்தால் அது 2- ஆண்டுகள், 5- மாதங்கள், 11- நாள்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருக்கும்... //
    //பெரியரே இன்று பெண்கள் நிலை தெரியுமா? //


    //பெண்களுக்கு பிறக்க உரிமையிருக்கிறது (சில கிராமங்கள் தவிர்த்து) ஆனால் அவர்களின் வாழ்க்கை முடிவுகளை ஆண்கள் தான் முடிவு செய்கிறார்கள் இன்றும்;
    கண்டிப்பாக சுதந்திரம் உண்டு ஆனால் அது எவ்வளவு தூரம் என்பதை ஆண் தான் முடிவு செய்கிறான்//
    //இன்றும் வரதட்சனை என்று தன்னையும், தன் மானத்தையும் விற்று பிளைக்கிறார்கள் மீசை முறுக்கி கொண்டே!//
    நீங்கள் இத்துணை பாடு பட்டபின்னும் தமிழக பெண்கள் நிலை இப்படி இருப்பது தாங்கள் கொடுத்த உழைப்புக்கு அவமானம்.
    பகுத்தறிவு சிந்தனையாளர் ஆனதால் மறுபிறவியில் நம்பிக்கை இல்லை; இறைவனையும் இரைஞ்ச முடியாது. ஆனால் நம்பிக்கை வைத்து உள்ளோம் - மீண்டும் ஒரு பெரியார் தோன்றுவார், தங்கள் பணியைத்தொடருவார் என்று.


  4. Unknown Says:

    வருகைக்கு நன்றி தமிழன்,
    //என்னதான் சிக்கன்மாகச் செலவு செய்தாலும் எனக்கே தினம் 20ரூபாய் செலவாகிறது. அது பொது மக்கள் பணந்தானே!அதற்கு வேலை செய்ய வேண்டாமா?//உங்கள் பின்னோட்டத்தின் பொருளை என்னால் புரிந்துக் கொள்ள முடியவில்லை மன்னிக்க... எல்லொரும் கண்டிப்பாக உழைத்து தான் ஆகவேண்டும், உழைப்பவுனுக்கே ஊதியம், ஆனால் அந்த உழைப்பு தனக்காக இல்லாமல் சமுகத்திற்க்காக இருப்பது சிறப்பு, இதுவே எனது புரிதல்....


  5. Unknown Says:

    சுப்ரா வருகைக்கும் பின்னோட்டத்திற்கும் நன்றி!
    மகிழ்ச்சி தான் பெருமை தான் அய்யா அவர்கள் வாழ்ந்த கால கட்டத்தில் நானும் வாழ்தேன் என்பது ஆனால் இன்று நமக்கு மிகப் பெரிய பொருப்பு இருக்கிறது முனபை காட்டிலும் இப்போது சுயநலமும் சுரண்டலும் மேலோங்கி உள்ளது நம் சமுகத்தில் அதை வேர் அறுக்க வேண்டும் பெரியாரிய பார்வையில், தொடர்ந்து இயங்குவோம்....


  6. Unknown Says:

    பெயரில்லா, வரலாற்றை கொஞ்சம் புரட்டி பாருங்கள், அல்லது உங்கள் பாட்டியிடம் கேட்டு பாருங்கள் அன்று பெண்கள் எப்படி இருந்தார்கள் என்று, அப்போது தான் புரியும் பெரியார் என்ற ஆளுமையின் தியாகம் எவ்வளவு தூரம் பெண்களை சீர்தூக்கியிருக்கிறது என்று, அந்த வரிகளின் மைய கருத்து நாம் அனைவரும் பெண் விடுதலை பெற பெரியார் அமைத்த பாதையில் இன்னும் அடைய வேண்டிய மைல்கல்கள் நிறைய இருக்கிறது என்பதே தவிர நீங்கள் திரிப்பது போல எந்த அவமானமும் இல்லை...


  7. Unknown Says:

    // பகுத்தறிவு சிந்தனையாளர் ஆனதால் மறுபிறவியில் நம்பிக்கை இல்லை; இறைவனையும் இரைஞ்ச முடியாது. ஆனால் நம்பிக்கை வைத்து உள்ளோம் - மீண்டும் ஒரு பெரியார் தோன்றுவார், தங்கள் பணியைத்தொடருவார் என்று//
    இது உங்கள் நம்பிக்கை, ஆனால் நான் தெளிவாகவே இருகிறேன், பெரியார் இனி ஒரு போதும் பிறக்க போவது இல்லை ஆனால் அவர் என்னை போன்ற இள நெஞ்சங்களின் விதைத்த சிந்தனை விதைகள் என்றும் மறைய போவதுயில்லை, பெரியாரிய பாதை தொடரும் உலகத்தில் கடைசி மனிதனுக்கு சமத்துவம் கிடைக்கும் வரை, முடிந்தால் உங்கள் தோள் கொடுங்கள் அதை விடுத்து மேலோகத்தில் இருந்து யாராவது பொத்தென்று குதித்து உங்களை காபாற்றி விடுவார் என்று மூட நம்பிக்கை கொள்ளாதீர்கள், சிந்தியுங்கள்...

    தோழமையுடன்,
    மோகன்


Related Posts with Thumbnails

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner