Unknown
பதிவுலகமே தோள் கொடுங்கள்!!!

முன் குறிப்பு:
இதோ, இந்த வார இளம் எழுத்தாளர் தோழி புவனா, புவனா எனது அருமை தோழி மட்டுமல்ல எனது அன்பு தங்கையும் கூட, இவள் பல வகைகளில் தனித்துவம் வாய்ந்த ஆளுமை, இவளின் எழுத்துகளையும், சமுக அக்கறைகளை பார்க்கும் போது இளைய சமுதாயத்தின் மீது நம்பிக்கை அதிகமாகிறது, இவளின் முதல் மழலை கிருக்களில் இருந்து இந்த "முதல் முயற்சி" கட்டுரை வரை இவளின் எழுத்துக்கள் அடைந்து வரும் பரிணாம வளர்ச்சியை பார்க்கும் போது மிகவும் வியப்பாகவும், பெருமிதமாகவும், நம்பிக்கையாகவும் இருக்கிறது, இது போல் புவனாவின் எழுத்துக்கள் தொடர்ந்து அடுத்த அடுத்த தளத்திற்கு நகர வேண்டும் என்ற ஆசையோடும் அவளின் எழுத்துக்கள் பெண்ணின் சமுக அவலங்களை அகற்ற பயண்படவேண்டும் என்ற வாஞ்சையோடும் இணையத்திற்கு அறிமுகம் செய்கிறேன், பதிவுலகமே தோள் கொடுங்கள்!!!

முதல் முயற்சி 

ஆடுவோமே பள்ளு பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமே” என்று எவ்வளவு ஆனந்தத்துடன் பாரதி பாடினானோ ! அதே அளவு ஆனந்தத்தை நானும் உணர்ந்தேன் பெண்ணிற்கு 33 % இடஒதுக்கீடு கிடைத்த அன்று.ஆம் இந்த கனவு எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு நினைவாகி இருக்கிறது. இவ்வளவு காலதாமதம் அவசியம் தானா ? என்னை பொறுத்தவரை இந்த காலதாமத்திற்கு ஒரு வகையில் நாம் தான் காரணம். நம்மிடம் இருக்கும் மிகப் பெரிய தவறு நாம் கூடி அமர்ந்து நம்முடைய பிரச்சனைகளை விவாதிப்பதில்லை.பெண்தோழிகள் ஒன்று கூடினால் பெரும்பாலும் திரையில் வரும் கதாநாயகியின் நிறத்தையும், அழகையும், இல்லையென்றால் தொலைக்காட்சியில் அழுதுவடியும் பெண்களையும், பெண்களையே இழிவு படுத்தும் தொடர்களையும் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஏன்? நாம் பொதுவுடைமையை விவாதிக்க கூடாதா? என்றுக் கேட்டால் இந்தக் கேள்விக்கு எந்தப் பெண்ணாலும் பதில் கூறமுடியவில்லை. நம்மிடையே உள்ள கழைகளை நாம் கூடி தான் கலைய வேண்டும். இனியாவது நாம் ஒன்று கூடி நம் பிரச்சனைகளை விவாதித்து ஒரு தீர்வு காணலாம் என்ற உந்துதலில் தான் இந்தக் கட்டுரை எழுதியுள்ளேன். என் பயணத்திற்கு இந்த கட்டுரை ஒரு முதல் முயற்சியாக இருக்கட்டும் . . . . . . . . . . . . .


நம் பெண்கள் சமூகத்தில் தான், ஒரு பெண்சிசு ஜனனம் எடுப்பதற்கே பெரிய போராட்ட்த்தை எதிர்கொள்கிறது.இயற்கையாக ஒரு பெண்சிசு கருவானாலும் அந்தசிசு இந்த பூமியில் பிறக்கலாமா ? இல்லையா என்று முடிவெடுக்கும் அதிகாரம் ஆண்கைகளில் தான் உள்ளது. இப்பொழுது யாரும் கள்ளிப் பால் ஊற்றி பெண்சிசுவை கொலைச் செய்வயதில்லை. ஆனால் ஒரு தாய் சுமப்பது பெண்குழந்தை என்பது உறுதியானால் அவளை நடத்தும் முறை மாறிவிடுகிறது. இதில் அவலம் என்னவென்றால் பல நேரங்களில் ஒரு பெண்ணின் மனதை நோகடிப்பது மற்றொரு பெண் தான். குழந்தையில் இந்த பேதம் ஏன் ? என்று எனக்கு இன்று வரை விளங்கவில்லை. அன்று சங்க காலத்தில், அதிக குழந்தைசெல்வங்கள் இருந்த காலத்தில் கூட தனக்கு மகள் பிறந்த செய்தியை, “என் சமூகத்தையே மேம்படுத்த வீரத் திருமகள் பிறந்து விட்டாள் என்று மார் தட்டி சொன்ன உங்கள் வீரம் எங்கே போனது ? ”

இடைக்காலத்தில் நாம் இழ்ந்த கல்வி என்னும் அறிவு தாகத்தை எப்படியோ போராடிப் பெற்றுவிட்டோம்.ஆம் இப்பொழுது பெரும்பாலும் பெண்கள் படிக்க ஆரம்பித்துவிட்டனர்.ஆனால் இன்னும் தனக்குத் தகுந்த பாடத்தை தகுந்த இடத்தில் தேர்ந்தேடுக்கும் உரிமை பல இடங்களில் பெண்களுக்கு நிராகரிக்கப்படுகிறது. சில நேரங்களில் பெண்களுக்கு கொடுக்கப்படும் உரிமைகளையும் அவர்கள் சரியாகப் பயன்படுத்தி வெற்றிப் பெற தவறிவிடுகின்றனர்.

இன்று எந்தவிதபாகுபாடும் இல்லாமல் ஆறு வயது சிறுமி முதல் அறுபது வயது பெண்கள் வரை சந்திக்கும் ஒரே கொடுமை “ பாலியியல் கொடுமை ”.பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் , வேலை செய்யும் இடங்களிலும், பேச்சின் மூலமோ அல்லது செய்கையினாலோ பல பெண்கள் இந்தக் கொடுமையை அனுபவிக்கின்றனர்.

அக்னிக் குஞ்சொன்று கண்டேண் – அதை
அங்கொரு காட்டில் பொந்திடை வைத்தேன் ;
வெந்து தணிந்து காடு ; தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ ?

எங்கே போனது அந்த அக்னி குஞ்சு ?

இன்றும் அது நமக்குள் எரிந்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அந்த வீரத்தைத் தட்டி வளர்ப்பதற்கு தான் இங்கே யாரும் இல்லை .அனைத்துப் பொற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை இந்த மோசமான சமூகத்திடம் இருந்து காப்பதாக எண்ணி அவர்களின் அழகிய சிறகுகளைப் பறித்து விடுகின்றனர். இதைவிட அவர்களிடம் உள்ள வீரத்தை வளர்த்து தன்னை எந்த சூழ்நிலையிலும் காப்பாற்றிக் கொள்ளும் வழியை கற்றுக் கொடுக்கலாம் இல்லையா ? ஆண்சமுகம் பெண்களை போகப் பொருளாக மட்டுமே நினைக்கும் இந்த மனோபாவம் மாற வேண்டும்.

பலஇடங்களில் பெண்களின் வாய்கள் திறக்கப்படுதே

இல்லை. ஆண்மகன் தன் கருத்தை தெரிவிக்கும் பல இடங்களில் பெண்ணின் கருத்துக்கு மதிப்பே இல்லாமல் போய் விடுகிறது.அதையும் மீறி தன் கருத்தை தெரிவிக்கும் ஒரு பெண்ணுக்கு இந்த சமுகம் சுட்டும் பட்டங்கள் “அடங்காதவள், திமிர்பிடித்தவள் ” .


இந்த நவீன உலகத்தில் பெண்கள் , ஆறே நாளில் முகம் வெளுக்கும் , பிரகாசம் அடைவீர்கள் என்பதை நம்பி ரசிக்கும் அளவுக்கு தன் இயற்கை நிறத்தை ரசிப்பதேயில்லை. பல பெண்கள் மனதில் இது பெரிய தாழ்வுமனப்பான்மையை வளர்கிறது.இன்னும் சில பெண்கள் தங்களது வெற்றிக்கு தன் திறமையை நம்புவதைவிட தங்கள் வெளிப்புறத் தோற்றத்தை மிகவும் நம்புகிறார்கள்.

பெண்ணில் வாழ்ந்து, பெண்ணுடன் வாழ்ந்து வெற்றிக் கொண்டு மேன்மை அடைந்துள்ள இந்த சமுகம் , அத்தகைய பெண்ணையே அடக்கி ஆள வேண்டும் என்று எண்ணிக் கொண்டு இருக்கிறது. நம்முடைய ஆற்றலை உலகிற்கு பறைசாற்ற இதைவிட நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது.

பெண்கள் அன்னங்களாம்
ஆம் அன்னங்கள்தான்
பாலிலிருந்து தண்ணீரைப்
பிரிதெடுக்கும் அன்னங்களல்ல
பாலிலிருந்து விஷத்தையே
பிரித்தெடுக்கும் வித்தியாசமான அன்னங்கள் !

நமக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை உடைத்தெறிந்து பெண்சமூகமே ஒன்று சேருவோம்
புதுயுகம் படைப்போம்

வாருங்கள் ,

வென்றுவிடும் தூரத்தில் தான் வானம்.

என்றும் அன்புடன்,
உங்களில் ஒருத்தி,
தோழி புவனா
3 Responses
  1. " நாம் பொதுவுடைமையை விவாதிக்க கூடாதா? "

    Pothuudamai annaivarukkum pothuvaanathu thaan athai pera murchikka tholi kalai thratta entha eluthugal muthal adi aga iruppathil perumai kollattum.


  2. Unknown Says:

    உங்கள் கருத்துக்கு நன்றி - புவனா


  3. தங்கை புவனாவிற்கு,
    நல்லத் தொடக்கம். எழுத்து நடையும் நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.
    இந்த காலக் கட்டத்தில் "பெண்ணியம்" என்ற சொல் அதிகமாக கேட்கின்றது. ஆனால் அதன் அர்த்தம் எனக்கு புரிய மாட்டேன்கின்றது. அதைப் பற்றி கொஞ்சம் விளக்கமாக தொடர்ந்து எழுதினால் நன்றாக இருக்கும்.
    பதிவு உலகத்திற்கு வரவேற்கிறேன்!


Related Posts with Thumbnails

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner