Unknown
பதிவுலகமே தோள் கொடுங்கள்!!!

முன் குறிப்பு:
இந்த கவிதை நான் எழுதியது இல்லை, என் அன்பு தோழன் சிவக்குமார் எழுதியது. சிவக்குமார், நான் எப்போதும் நம்பும் இளைய சமுதாயத்தை சேர்ந்தவன், கல்லூரி கால வசந்தங்களில் வசித்தாலும் சமுகத்தின் பால் தீராத காதல் கொண்டவன், அவன் எழுத்துக்களை உலகுக்கு எடுத்து போக வேண்டும் என்ற என் ஆசையின் வெளிப்பாடு இது, இனி இது போல் என்னைச் சுற்றி இருக்கும் இளம் எழுத்தாளர்களை இணையத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறேன். அந்த முயற்சியின் தொடக்கமே இது, பதிவுலகமே தோள் கொடுங்கள்!!!


இலங்கை வாழட்டும் 
மானுடம் தின்று
மறுபரிணாமம் ஈனும்
இலங்கை இன்னும்
வாழட்டும்

நீங்கள் பயப்பட வேண்டாம்

இனப் படுக்கொலையை எதிர்த்து
எழும் எங்கள் போராட்டங்கள் எல்லாம்
வருடம் ஒருமுறை நடக்கும்
தேரோட்டம் போல் ஆகிவிடும்

உண்ணாவிரதம் இருந்தோம்
உயிர்கூடக் கொடுத்தோம்
உங்களுக்கென்ன ?

சிரித்து விளையாட
எங்கள் இனத்தின்
இளம் கன்னிகள் !

சிதைத்துப் பார்க்க
எங்கள் இனக்
குழந்தையின் சிற்றுடல் !

இன்னும் என்னவெல்லாம் செய்ய எண்ணம்
எங்களுக்குத் தெரிந்தது
இரண்டு தான்
அஹிம்சை ஒரு வழி
அடிமை ஒரு வழி


இலங்கை இன்னும்
வாழட்டும்

அங்கே தீர்ந்தால் சொல்லுங்கள்

நாங்கள் இருக்கிறோம்
இன்னும் கட்டலாம்
சிலக் கல்லறையை
இனியும் வெடித்துச் சிதறலாம்
சில கருவறையை

_ இ.சிவக்குமார்
5 Responses
  1. sarathy Says:

    Blooms of the war field get manifest through the thoughts of youngesters who shows in realistic way


  2. sarathy Says:

    Blooms of the war field get manifest through the thoughts of youngesters who shows in realistic way


  3. அங்கே தீர்ந்தால் சொல்லுங்கள்

    நாங்கள் இருக்கிறோம்
    இன்னும் கட்டலாம்
    சிலக் கல்லறையை
    இனியும் வெடித்துச் சிதறலாம்
    சில கருவறையை // நெஞ்சைத் தொட்ட வரிகள்


  4. Unknown Says:

    வருகைக்கும் உங்கள் பின்னோட்டத்திற்கும் நன்றி சாரதி.... உண்மை தான் இன்று இளைஞ்கர்களில் சிலர் தங்களை சுற்றி இருக்கும் உலகையும் நிகழ்வுகளையும் உண்ணிப்பாக கவனிக்கிறார்கள், அதற்கு சான்று தான் இந்த கவிதை... கண்டிப்பாக இப்படி சமுக பற்று கொள்ளும் அவர்களுக்கு தோள் கொடுப்பதே நம் பங்கு என்று கருதுகிறேன்!!!


  5. Unknown Says:

    வருகைக்கும், உங்கள் பின்னோட்டத்திற்கும் நன்றி ஆதி.... ஆம் எனக்கும் முதல் முறை படித்த போதே நெஞ்சில் நின்ற வரிகள் அவைகள்...


Related Posts with Thumbnails

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner