இனி நான் என் செய்யேன்?
என் ஹார்மோன்களின்
வெள்ள பெருக்கு...
ஏன் அப்படி?
அவள் கண்சிமிட்டலை
கண்டுவிட்டேன்....
இது என்ன
இப்படி ஓர் பேரொலி?
இது என்
இதய துடிப்பு
மன்னிக்க
இதய வெடிப்பு
இது எதனாலோ?
அவள் புன்னகை
பூ பூத்துவிட்டாள்...
என்ன அது
ஒப்பாரி?
என் மூளைசெல்கள்
மூர்ச்சையாகிவிட்டன
இதற்கு
மூலம் யாரோ?
அவளே
அதோ
அந்த கடைகண்ணின்
கதிர்வீச்சு...
அங்கு என்ன
கைதட்டல் ஒலிகள்
அதுவும் நுரையீரலில்...
இதற்கும்
அவள் தான் காரணமோ?
பிறகு அவளே தான்
அவள்
மட்டுமே தான்...
அதோ
அவள் சுவாசித்து அனுப்பிய
மூச்சுக்காற்றை
முயன்று பிடித்துவிட்டதாம்
மூக்கு
அதற்கு தான் இத்தனை
ஆர்ப்பாட்டம்...
ஏய்! ராஜகுமாரி,
வைர விழியாள்
வாள் சண்டை செய்தாய்
என் விழியோடு;
தாங்கி கொண்டேன்...
தொடமுடிந்த தூரத்தில்
தொடமுடியாமலும்;
தொடமுடியாத தூரத்தில்
தொடவிட்டும்;
மாயங்கள் செய்தாய்
என் கைகோடு
தாங்கி கொண்டேன்...
என் ஒரு மைல் பேச்சுக்கு
ஒரு பொன்
முறுவல் சிந்திவிட்டு
என் உதடு உறையச் செய்தாய்
அப்போதும்
தாங்கி கொண்டேன்...
ஆனால்
இப்போது
உள் நின்றும்
உயிர் குடித்தால்
இனி நான் என் செய்யேன்???