Unknown
ஆகஸ்டு 15 இந்திய தேசத்தின் அடிமை(கள்) தின விழா

முதலில் இந்தியா தேசமா?

எந்த கடலில் பிடிப்பட்டாலும்
பாகிஸ்தான் மீனவர்கள்
பாகிஸ்தான் மீனவர்களே.....
ஆனால்
இந்திய பெருங்கடலிலே
சிறிலங்கா ராணுவத்தால்
சுட்டுக் கொல்லப் பட்டாலும்
அவர்கள்
தமிழக மீனவர்கள் தான்
இந்திய மீனவர்கள் அல்ல...

சரி, இந்தியாவிற்கு சுதந்திர தின விழா
தேவைதானா?

சில உணர்வாளர்கள்
சில உண்மைகள் பேசினாலே
ஆட்டம் காணும் ஒருமைப்பாடு தான்
இந்திய ஒருமைப்பாடு
எனும் போது
எதற்கு இந்த ஆடம்பரம்.....

தேசிய பாதுகாப்பு சட்டத்தால் மட்டுமே
இனி இந்திய இறையாண்மை
பாதுகாக்கப் படும் எனும் போது
எதற்கு இந்த பகல் நாடகம்...

கிரிக்கெட்டும் சினிமாவும் தான்
இந்தியனை
இந்தியனாய் நினைக்க வைக்கும்
எனும் போது
எதற்கு இந்த போலி தேச பக்தி...


என்னமோ இங்கு
கருத்து சுதந்திரமும்
பொருளாராத சுதந்திரமும்
இருக்கிறது என்று
குத்தாட்டம் போடும் மெத்த படித்தவர்களே...
உங்கள் சட்டை பிடித்து கேட்கிறேன்
காஷ்மீர் மக்களின் சுதந்திரத்தை அங்கிகரிக்காது
தீவரவாதம் செய்யும் இந்தியாவிற்கும்
எந்த அருகதை இருக்கிறது
சுதந்திர தின விழா கொண்டாட???


2 லட்சம் இந்தியர்களை
பலிவாங்கிய போபால் படு கொலைக்கு
2 ஆண்டு சிறை,
மாலையில் பினை என்று
நீதி(தூ!) வழங்கிய இந்திய நீதிமன்றத்துக்கும்
அதை வேடிக்கை மட்டுமே பார்த்த நமக்கும்
எதற்கு சுதந்திர தின விழா???

பழங்குடி மக்களின் நிலம் பரித்தீர்கள்
பின் நீராதரம் பரித்தீர்கள்
அவர்கள் வீட்டு பெண்களின் மானம் பரித்தீர்கள்
இப்போது அவர்களின் உயிர் பரிக்க துணிந்துவிட்டீர்கள்
பன்னாட்டு நிறுவனங்களின்
கால் நக்கி பிழைக்க...
நெஞ்சில் கை வைத்து சொல்லுங்கள்
நக்கி பிழைப்பவர்களுக்கு
எதற்கு சுதந்திர தின விழா???

கிரிக்கட்டில் இந்தியா தோற்றுவிட்டால்
குமறி குமறி அழும் உங்கள்
தேசப் பற்று
ஏன் சாலையில் இரத்த வெள்ளத்தில்
இருக்கும் இந்தியனை பார்த்தால் மட்டும்
பொங்குவதில்லை???

இனி ஒரே சாதியில் கல்யாணம் செய்யக் கூடாது
என்று சட்டம் போட்டாவது
இந்திய அரசால், இந்தியனிடம்
சமத்துவத்தை கொண்டு வர முடியுமா?
முடியாது என்றால்
பின் என்ன மசுருக்கு
நான் நம்ப வேண்டும்
இந்தியர்கள் எல்லாரும் உடன் பிறந்தவர்கள் என்ற உறுதி மொழியை ???

தியாகிகள் இரத்தம் சிந்தி
வாங்கிய சுதந்திரம், கேவலப்படுத்தாதே
என்று வாதாடினால்
உறுதியாய் சொல்வேன்,
பகத் சிங் இப்போது இருந்தால்,
எல்லா இந்திய சுயநலவாதிகளையும்
அவன் தோட்டாக்கள் துளைத்திருக்கும்...


அவன் கண்டிப்பாய் நேசித்திருக்க மாட்டான்
14 வயது சிறுமி பசிக்காகவும், பணத்துக்காகவும்
விபச்சாரத்தில் ஈடுபடும்
இந்த ஒளிரும் இந்தியாவை!!!


சுயமரியாதையும்
சுதந்திர சிந்தனை உடையவனுக்கும் தான்
சுதந்திர தின விழா!
வேண்டுமானால் இப்படி கொண்டாடுவொம்
ஆகஸ்டு 15 - இந்திய தேசத்தின் அடிமை(கள்) தின விழா



இப்படிக்கு,
போலி தேச பக்தியில் சிக்காத,
ஒரு குருஞ்சட்டைக்காரன்....
3 Responses
  1. Unknown Says:

    உங்களுக்கு என் வந்தனங்கள்...


  2. Unknown Says:

    உங்கள் வருகைக்கு, வந்தனங்களுக்கும் நன்றி தோழர்...


  3. Kumar Says:

    அத்தனையும் உண்மை. தற்போது நமது சுதந்திரம் அடகு வைகப்பபட்டுள்ளது...


Related Posts with Thumbnails

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner