Unknown
பதிவுலகமே தோள் கொடுங்கள்!!!

முன் குறிப்பு:
இதோ, இந்த வார இளம் எழுத்தாளர் தோழர் சரவணகுமார், தோழர் எனது ஆருயிர் நண்பர், மனிதம் போற்றும் பண்பாளர், செக்கு மாட்டு சிந்தனைகளில் சிக்காத சிந்தனையாளர், இதுவரை பேச்சாலும், செயலாலும் மட்டும் தன் சக மனிதர்களை சிந்திக்க செய்த தோழர் முதல் முறையாக பேனா பிடித்திருக்கிறார், அதற்கு தளம் அமைத்து கொடுத்ததற்கு பெருமை கொள்கிறேன். தோழர் தொடர்ந்து தன் எழுத்தானி கொண்டு சிந்தினை பரப்ப வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டு பதிவுலகத்திற்கு அறிமுகம் செய்கிறேன், பதிவுலகமே தோள் கொடுங்கள்!!!

எந்திரனும் கழிவ றைகளும்!!!
உழக தமிழர்களின் உயிர்துடிப்பாம் "எந்திரன் - தி ரோபட்" அக்டோபர் முதல் நாள் உலகெங்கிலும் அதன் வெற்றி பயணத்தை தொடங்கயிருக்கிறது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் சுமார் 160 கோடி ரூபாய் செலவில் உலக தமிழர்களின் பெருமையை நிலைநாட்ட இந்த படத்தை தயாரித்துள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகவும் கோலாகலமாக நடத்தபட்டது, இதில் களந்து கொள்வதற்காக பெரும்பாலான தமிழ்திரையுலக நட்சத்திரங்கள் வானில் மின்னிக் கொண்டே ஆகாய மார்க்கமாக மலேசியாவிற்கு பயனித்தன. இதற்கான செலவு எவ்வளவு என்பது தெளிவாக தெரியவில்லை, சுமார் 500 பேர் விமான பயணம், தங்கும் வசதிகள், நிகழ்ச்சி செலவு ஆக மொத்தம் சுமார் 5 கோடி ரூபாய் செலவாகியிருக்கும், இது போல் இந்த தனி சிறப்புவாய்ந்த படத்திற்கு எத்தனை விளம்பரங்கள், நிகழ்வுகள் மற்றும் செய்திகள் ஏற்படுத்தபட்டுள்ளன என்பதை பட்டியல் போடவே முடியாது. இருந்தாலும் இதோ சில,

மூன்று நாட்கள் இசை வெளியீடு தொகுப்பு விழா சன் தொலைகாட்சியில்
மீண்டும் எப்படி தொகுத்தோம் என்று ஓர் மறு ஒளிபரப்பு
பட டிரெயிலர் வெளியீட்டு விழா
குமரி முதல் சென்னை வரை "எந்திரன் ரத உலா"
முன்பதிவு செய்திகள், அதனுடன் தொடர்பு உடைய நிகழ்வுகள்
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...

நன்பர்களே இணையத்திலிருந்து தெரிந்து கொண்ட தகவலின் படி சுமார் 2500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் உலகெங்கிலும்.திரையிடப்படுகிறதாம் எந்திரன்.

இணையத்தில் ஒரு கணக்கு அடித்து சொல்கிறது முதல் மூன்று நாட்களுக்கு உள்ளாகவே சுமார் 500 கோடி ரூபாய் வசூலாகிவிடும் என்று, முதல் வாரத்தில் மட்டும் மொத்த வசூல் சுமார் 1600 கோடியை தொட்டுவிடுமாம், சென்னையில் மட்டும் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படுகிறதாம்.

ரூபாய் 160 கோடி முதலீடு இட்ட படத்திற்கு முதல் வாரத்தில் மட்டும் 1600 கோடி வருமானம் என்றால் இது எல்லாம் யாருடைய பணம், தயாரிப்புக்கு பயன் படுத்தபட்ட 160கோடியை சேர்த்தும் அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்து தானே சம்பாதிக்கபட்டது.

இந்த 160 கோடியும் வெளிநாடுகளில் விதைக்கபட்டு படமாக்கபட்டுயிருக்கிறது ஆனால் இது தமிழ்நாட்டில் மட்டும் அறுவடை செய்யப்போகும் வருமானம் மூதலீட்டை காட்டிலும் பத்து மடங்கு, இது மட்டுமல்ல "எந்திரன்" என்ற தமிழ்பெயருக்காய் 10 ஆயிரம் வரிச்சலுகையும் பெறுவார்கள்.

இந்த 1600 கோடி ரூபாயும் ஒருவரிடமிருந்து பெறப்போவதுயில்லை, நம் ஒவ்வொருவரிடமிருந்தும் பெறப்படயிருக்கிறது, அது அனைத்தும் நம் பணம்.

இது ஒருபக்கம் இருக்கட்டும் நான் உங்களிடம் மற்றும் சில தகவல்களை பரிமாறி கொள்ள விரும்புகிறேன்.

நாம் அனைவரும் வசிக்கும் இந்தியா உலக சுகாதர தரவரிசையில் எவ்வளவு பின்தங்கி உள்ளோம் தெரியுமா? அது மட்டும் அல்ல சமீபத்திய ஓர் ஆய்வின் படி ஆப்பிரிக்காவில் உள்ள சில நாடுகளை காட்டிலும் ஏழைகள் அதிகமாக வசிக்கும் நாடாக இந்தியா மாறியிருக்கிறது. இது மட்டும் அல்லாமல் பன்றி காய்ச்சல் போன்ற தொற்று நோய்களினால் சுமார் 110 நபர்கள் இறந்துயிருக்கிறார்கள். அவ்வளவு எதற்கு நமது ஊரில் உள்ள பள்ளிகளில் சுத்தமான, சுகாதாரமான, தேவையான அளவிற்கு கழிப்பிட வசதிகள் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை என்று தான் சொல்லவேண்டும்.

நமது நகரங்களின் சந்துகளில், சாலை ஓர மரங்களின் அருகில் சிறுநீர் கழிக்காதவர்கள் உண்டா என்றால் இல்லை என்பது தான் பெரும்பாலானவரின் பதில்.

இந்த சுகாதார முறைகேட்டினால் .அதிகம் பாதிக்கபடுபவர்கள் பெண்கள் தான்.

நம் தமிழகத்தை பொருத்த வரையில் 4078 மேல்நிலை பள்ளிகள் உள்ளன, இதில் இருபாலர் பயிலும் பள்ளிகள் 3001, இதில் எத்தனை பள்ளிகளில் சுத்தமான கழிவ றைகள் உள்ளன.
பெரும்பாலும் கிராமபுற பள்ளிகளில் திறந்த வெளி கழிப்பிடம் தான்

இங்கு படிக்கும் பெண்கள் குறிப்பாக மேல்நிலை பள்ளியில் படிப்பவர்களுக்கு இயற்கையாக வரும் சில பிரச்சனைகளால் அந்த நாட்களில் பள்ளிக்கு செல்வது இல்லை, இப்போது சில வசதிகள் இருந்தும் கூட அவர்கள் உடை மாற்றி கொள்வதற்கும், ஓய்வெடுத்து கொள்வதற்கும் தனி அ றைகள் ஏதும் இல்லை,

இது ஒரு புறம் இருக்க, பேருந்துகளில் நெடுந்தூரம் பயணம் செய்யும் பெண்களின் நிலை ஆண்களின் நிலையை விட மிகவும் மோசம். ஊருக்கு வெளியில் இயற்கை உபாதைகளுக்காக பேருந்து நிருத்தப்படும், அங்கு எந்த வித பாதுகாப்பு வசதியும் இருக்காது, இது மட்டும் அல்லாமல் சூரியன் வருவதற்கு முன்பாகவே எல்லாத்தையும் முடித்து விட வேண்டிய கட்டாயத்தில் தான் இன்றும் நிறைய சகோதிரிகள் இருக்கிறார்கள் தமிழ்நாட்டில்.

இப்படி சரிவர கழிவுகள் வெளியேராத காரணத்தினால் இந்திய பெண்களுக்கு விரைவாக சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது என்பது நாம் அறிய வேண்டிய உண்மை.

நமது ஊரில் உள்ள பள்ளிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் திரையரங்குகளில் சுத்தமான கழிப்பிடம் இருக்கிறதா? கழிவ றை
இருக்கட்டும் சுத்தமான தண்ணீர் கிடைக்கிறதா? இல்லை என்பது தான் ஒரே பதில்...

இப்போது மறுபடியும் எந்திரனை யோசித்து பாருங்கள், நம்மால் ஒரு 2 1//2 மணி நேரம் பொழுதுபோக்கிற்காக எடுக்க படும் படத்திற்கு ரூபாய் 1600 கோடி வருமானம் ஒரு வாரத்தில் ஈட்டி தர முடியும் என்றால், நம் வீட்டு பெண்கள், சகோதரிகள், குழந்தைகள், ஏன் நமக்காக கூட ஓர் சுத்தமான, சுகாதாரமான சூழ்நிலையை நாம் ஒன்று கூடி உருவாக்காமல் இருப்பது ஏன்?, ஏன் நாம் ஒன்று கூடி படம் மட்டும் தான் பார்க்க வேண்டுமா என்ன? கொஞ்சம் மாற்றி பார்கலாமே, நம்மால் கண்டிப்பாக ஒரு சுத்தமான சுகாதாரமான சூழ்நிலையை உருவாக்க முடியும், குறைந்த பட்சம் எந்திரனுக்காய் அடிக்க பட்ட பெலஃஸ்(flex) பேனர்களையும் சவரோட்டிகளையும் சுகாதார கழிவ றைகளின் கதவுகளாக மாற்றுவோமே?

சிந்தியுங்கள் தோழர்களே! தோள் கொடுங்கள் தோழிகளே!!!

என்றும் உங்களில் ஒருவன்,
மானுடத்தின் காதலன்,
உங்கள் சரவணகுமார் 

முந்தைய அறிமுகங்கள்:
இலங்கை வாழட்டும் - இளம் எழுத்தாளர்கள் அறிமுகம் - 1
முதல் முயற்சி - இளம் எழுத்தாளர்கள் அறிமுகம் - 2
16 Responses
  1. இந்திரனுக்கும் இதுக்கும் என்ன எழவு சம்பந்தம் இருக்கு// வசதி இல்லாட்டி அரசாங்கத்தை எதிர்த்துப் போராடு. எந்திரன் படம் எதுக்கடி இதெல்லாம் சரி ஆய்டுமா.


  2. மேற்கொண்டும் எழுதுங்கள்.


  3. Unknown Says:

    LK எதுக்கு கோவபடுறிங்க, கட்டுரையில் எந்த இடத்தில் எந்திரனை எதிர்க்க சொல்லியிருக்கு, அதே மாதிரி எந்த இடத்தில் எந்திரனை எதிர்தா இது சரியா ஆயிரும்னு எழுதிருக்கு, கட்டுரையை முழுசா படிங்க நண்பரே, கட்டுரையின் மைய கேள்வியை யோசித்து பாருங்கள் உங்களுக்கே புரியும் இந்திரனுக்கும் இந்த எழவுக்கும் சம்பந்தம் இருக்கா இல்லையா என்று?
    தொடர்ந்து விவாதிக்கலாம்


  4. Unknown Says:

    LK எழுதியது // வசதி இல்லாட்டி அரசாங்கத்தை எதிர்த்துப் போராடு//எந்த ஒரு போராட்டமும் வசதியை பெறுவதற்காக இல்லை, உரிமையை பெறுவதற்காகவே!!! தன் மக்களுக்கு அடிப்படையான கழிவரை வசதியை நிறைவு செய்யாத அரசை எதிர்த்து போராடு வேண்டும் ஆனால் இந்த கட்டுரையின் மைய கருத்து ஏன் நாம் அனைவரும் ஒன்று கூடி இந்த அவலத்தை கலைய கூடாது என்பதே!!! உங்கள் பதில் என்ன நண்பரே?


  5. Unknown Says:

    கக்கு-மாணிக்கம் வருகைக்கும், கருத்தும் நன்றி!!! கண்டிப்பாக இதை பற்றி மேற்கொண்டு எழுத முயற்சிக்கிறேன், தோழர் சரவணகுமாரையும் கேட்டு கொள்கிறேன்!!!


  6. பெயரில்லா Says:

    அட அட. கலக்கல் சிந்தனை. நிங்கள் இன்று எதற்காக பைக்கில் வந்திர்கள்? நிங்கள் பெட்ரோலுக்காக தினமும் செய்யும் செலவு எவ்வளவு தெரியுமா - 30 ரூபாய். யோசித்துப் பாருங்கள். உங்களோடது பைக்தான். கார் வைத்திருப்பவர்களையும் கணக்கிட்டால்? இந்தியாவில் இப்படி பெட்ரோல் மூலமாக ஒரே நாளில் ஆயில் கம்பெனிகள் சம்பாதிக்கும் பணம் மட்டும் சில ஆயிரம் கோடிகளைத் தாண்டும். அதெல்லாம் நமது பாக்கெட்டில் இருந்து உருவப்பட்டவைதானே? எத்தனை பேர் நடந்தும் பஸ்ஸிலும் செல்கிறார்கள்? அவர்களுக்காக நீங்களும் நடந்தோ அல்லது வெளியில் செல்லாமலேயே இருந்தால் இந்தியாவை உலக அரங்கில் உருப்பட வைக்கலாமே. அதே மாதிரிதான் இந்த பெட்டிக்கடை, மரக்கடை, இன்டர்நெட், மொபைல் போன் கம்பெனிகளும். ஒருத்தரும் பிசினெஸ் செய்யக் கூடாது - ஏனென்றால் இந்தியாவில் சுகாதாரம் கெட்டுவிட்டது. கலக்கல் சிந்தனை.

    -முத்து


  7. Unknown Says:

    முத்து, நக்கல் இருக்கட்டும், அடிப்படை தேவைக்கும், ஆடம்பர செலவுக்கும் வித்தியாசம் இருக்கிறதா? இல்லையா? நமக்கும் நம் சமுகத்திற்கும் எவைகள் முதல் தேவை என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோமா இது தான் கேள்வி பதில் சொல்லுங்கள்....
    வனிகம் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன் எனக்கு லாபம் வந்தால் மட்டும் போதும் என்பது எந்த விதத்தில் நியாயம்?
    அப்புறம் ஒரு கொசுறு செய்தி, எனக்கோ. தோழருக்கோ சொந்தமாக இருசக்கர வாகனம்(பைக்) கிடையாது, பேருந்து தான், அப்படியே ஒரு வேளை வாங்கினாலும் எரிநெய் (பெட்ரோல்) பயன்படுத்தும் வாகனங்கள் தவிர்த்துவிட்டு மின்சார வண்டிகளே வாங்க முடிவு செய்திருக்கிறேன்...இது பற்றி தெளிவாக இன்னோறு பதிவில் பார்ப்போம்...


  8. பெயரில்லா Says:

    தோழர் மோகன்,
    //நமக்கும் நம் சமுகத்திற்கும் எவைகள் முதல் தேவை என்பதில் நாம் தெளிவாக இருக்கிறோமா இது தான் கேள்வி பதில் சொல்லுங்கள்//

    அப்படியானால் உங்களுக்கு எதற்கு ஒரு கணினி? இதுவே ஒரு அடிப்படைத் தேவை இல்லையே? வாதம் செய்வதென்றால் எப்படியும் செய்யலாம். கிரிக்கெட் எதற்கு? காமன் வெல்த் கேம்ஸ் எதற்கு? "எப்படியாவது எனக்கு லாபம் வேண்டும்" என்று ஒரு முதலாளி மட்டும் நினைத்து ஒன்றும் ஆகப்போவது இல்லை, மக்களும் நினைக்க வேண்டும். இதே பாணியில்தான் சண் டிவி அதன் மற்ற வெளியீட்டு படங்களையும் செய்தது, ஆனால் அவற்றின் வெற்றி அவர்களுக்கே தெரியும். ஆனால் எந்திரன் படம் அப்படி அல்ல. அவனவனுக்கு பல கஷ்டங்கள், அதிலிருந்து விடுபட ரஜினியின் படங்கள் திருவிழாவாகவே பார்க்கப்படுகிறது. அதை சற்று தரமான தயாரிப்பில் காசாக்குகிறார்கள். நீங்கள் எதிர்பார்க்கும் இந்தியாவின் மானம் இதிலும்தான் இருக்கிறது. ஒரு இந்தியனின் ஏன் தமிழனின் படைப்பு இன்று உலகம் முழுதும் தமிழ் / இந்தியா பற்றி தெரியாதவர்களையும் சென்று அடைகிறது. ஒரு வேளை ஓட்டலில் சாப்பிட்டால் குறைந்தது 100 ரூபாய் ஆகிறது இன்று. அதைப் பற்றி ஒன்றும் சொல்லாதீர்கள், அதையே ஒரு சினிமாவிற்கு இரண்டரை மணி நேர சந்தோஷத்திற்கு என்றால் (அதுவும் ரஜினி படம் என்றால்) சிலருக்கு திடீரென்று சமூக சிந்தனை வருவதைத்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இன்று பலரது விட்டு கழிவறையில் தண்ணீர் வரவில்லை என்றால் கூட அதற்கும் என்திரந்தான் காரணம் என்று சொல்லக் கூசுவதில்லை அவர்களுக்கு. என்னமோ போங்க.

    -முத்து


  9. Unknown Says:

    முத்து, "நாம் அனைவரும், நீங்கள் ஒப்புக் கொண்டது போல் வெறும் 2 1/2 மணி கேளிக்கைகாக இவ்வளவு பெரிய தொகையை கொடுக்க தயாராக இருக்கும் போது, நம் கண் முன்னே அடிப்படை கழிவறை வசதியில்லாத பள்ளிகளை கடந்து போகும் போது ஏன் இதற்காக நம் கேளிக்கைகளை தவிர்த்துவிட்டு இவைகளை சீர் செய்யலாமே என்று ஏன் நமக்கு தொன்றுவதில்லை, இந்த அவலங்களை யாராவது கலைவார்கள், நமக்கு எதற்கு இந்த தலைவலி, ஏற்கனவே நமக்கு 1008 பிரச்சனை, என்று நாம் கடந்து போவது சரியா? ஏன் நாம் எப்போதும் செய்வதை கொஞ்சம் மாற்றி பார்கலாமே அது எந்திரனில் இருந்து தொடங்கட்டுமே" இது தான் கட்டுரையின் கோணம், இதை மனிதில் ஒரு முறை நிறுத்தி மீண்டும் கட்டுரையை வாசித்து விட்டு பின்னோட்டம் இடுங்கள், விவாதிப்போம், அதை விடுத்து //இன்று பலரது விட்டு கழிவறையில் தண்ணீர் வரவில்லை என்றால் கூட அதற்கும் என்திரந்தான் காரணம் என்று சொல்லக் கூசுவதில்லை அவர்களுக்கு.// இப்படி இந்த கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாதை கூறி கட்டுரையின் மையத்தை திரிக்க வேண்டாம் என்று தோழமையுடன் கேட்டுக் கொள்கிறேன்


  10. Rafeek Says:
    இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  11. Rafeek Says:

    ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும் என்ற உங்கள் எதிர்பார்ப்பு புரிகிறது. கட்டுரைக்கான தலைப்பும், எந்திரனை பற்றிய ஆதாரமில்லா.. ஒவர் ஹைப் செய்தியும்.. சொல்ல வந்ததை பின்னால் தள்ளி விட்டது. நீங்களே பாருங்க..யாரச்சும் கழிவறை பற்றிய பின்னூட்டம் போட்டு இருக்காங்களா? ஏன்டா எந்திரனை வம்புக்கு இழுக்குறேன்னுதானே கேட்டு இருக்காங்க. ஒரு கவன ஈர்ப்புக்காக செய்தேன் என்றால் இதைத்தான் சன் டிவியும் மீடியாவும் செய்து கொண்டு இருக்கிறது. சரி கழிவரை விஷயத்திற்கு வருவோம்.. எந்திரன் ஃப்ளக்ஸ் பேனர்ல கதவு வைப்பதுதான் தீர்வா? அட போங்க பாஸு..சரிங்க என்னால முடிஞ்சது ரூ1000 குடுக்க முடியும்.. வேற என்ன செய்யலாம் சொல்லுங்க? இல்ல வெறும் பதிவு மட்டும் போட்டதோடு நிறுத்திக்கலாமா?


  12. Dear Friends,

    Thank you for your comments.

    We all know about rajini sir and his activities for past 20 , 30 years. "Rajini sir, Involving himself on civic activities like planting of trees, cleaning of roads, etc & Welfare activities like blood donation camps on his birthday " this is very great things.

    I am asking one think to the young and energetic people of tamil nadu.
    When we will celebrate our birthday like “Rajini sir did”
    Their family is running a school to help the poor people.
    What about us.

    We have to watch his Real life.

    " We have to Think and Act and get the good results to our society "

    Thanks:
    Saravanakumar.


  13. Unknown Says:

    நண்பர் rafeek நீங்கள் எழுதிய பின்னோட்டம் எனக்கு நிறைய நம்பிக்கை தருகிறது ஆனாலும் சில இடங்களில் நான் முறன்படுகிறேன்,
    // கட்டுரைக்கான தலைப்பும், எந்திரனை பற்றிய ஆதாரமில்லா.. ஒவர் ஹைப் செய்தியும்.. சொல்ல வந்ததை பின்னால் தள்ளி விட்டது.// நான் அப்படி கருதவில்லை காரணம் // ஊர் கூடி தேர் இழுக்க வேண்டும் என்ற உங்கள் எதிர்பார்ப்பு புரிகிறது//
    // யாரச்சும் கழிவறை பற்றிய பின்னூட்டம் போட்டு இருக்காங்களா?// போட்டு இருக்காரே Rafeek என்ற நண்பர்:)
    // ஏன்டா எந்திரனை வம்புக்கு இழுக்குறேன்னுதானே கேட்டு இருக்காங்க. ஒரு கவன ஈர்ப்புக்காக செய்தேன் என்றால் இதைத்தான் சன் டிவியும் மீடியாவும் செய்து கொண்டு இருக்கிறது.// உறுதியாக சொல்வேன் இந்த கட்டுரையில் எந்த இடத்திலும் எந்திரனை வம்புக்கு இழுக்கவில்லை, இணையத்தில் இருக்கும் தகவலை வைத்து நமது நாட்டின் கழிவறை வசதிகளோடு ஓப்பீட்டு உண்மையை உரைக்க செய்திருக்கிறார் தோழர் என்றே நான் கருதுகிறேன்.


  14. Unknown Says:

    நண்பர் Rafeek கூறியது// எந்திரன் ஃப்ளக்ஸ் பேனர்ல கதவு வைப்பதுதான் தீர்வா?// கண்டிப்பாக இல்லை ஆனால் அது ஒரு ஆரம்பம், எப்படி நீங்கள் மனிதநேயத்துடன் ரூபாய் 1000 தர முன் வருகிறீர்களோ அது போல், நீங்கள் சரியாய் புரிந்தது போல் இது ஊர் கூடி தேர் இழுக்கும் செயல் ஆதலால் முதலில் தேர் எதற்காக, யாருக்காக இழுக்க போகிறோம் என்பதை தெளிவுபடுத்துவோம் அதற்கு இந்த ஒரு பதிவு போதாது தொடர்ந்து இது போன்ற பதிவுகளும் விவாதங்களும் தேவை, உங்கள் வலைப்பூவிலும், நண்பர்களிடமும் இதை தொடரலாம், ஒரு குழுவாய் ஒத்த சிந்தனையுடன் நாம் ஒன்றுபட்ட பின் நம் சிந்தனைகளை செயலாக்கலாம், சிந்தனை தான் அடித்தளம் தோழர், இந்த முயற்சிக்கு நீங்கள் தோள் கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.


  15. Unknown Says:

    அண்ணா உங்கள் கட்டுரை சிந்தனையை அறிவுப் பூர்வமாக தூண்டியுள்ளது.வாழ்த்துக்கள் அண்ணா.உங்கள் பயணம் தொடரட்டும்.


  16. குறைந்த பட்சம் எந்திரனுக்காய் அடிக்க பட்ட பெலஃஸ்(flex) பேனர்களையும் சவரோட்டிகளையும் சுகாதார கழிவ றைகளின் கதவுகளாக மாற்றுவோமே? // சிறப்பான கேள்வி... சிந்திக்க வேண்டும்..


Related Posts with Thumbnails

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner