Unknown
இந்திய தமிழர்களே, எப்போதும் வேடிக்கை மட்டுமே பாருங்கள்!!!


இந்திய தமிழர்களே,
நலமா?
உங்களுக்கேன்ன
நன்றாக திங்க இலவச அரிசி,
உண்ட களிப்பு நீங்க இலவச தொலைக்காட்சி,
நேரம் போக்க இளைய தலைவலியின் 50 தாவாது படம்,
வெட்டி பேச்சு பேச குஷ்புவின் அரசியில் வருகை,
போதா குறைக்கு செம்மொழி மாநாடு..

ரொம்பவே நல்லாயிருக்கிறீர்கள்...

நாங்கள் தான்,
சம உரிமைக்காய்
அறவழியில் அணிதிரண்டோம்;
அப்படியே எறித்தான் சிங்களவன்...

எதிர்வினையாய் ஆயுதம் ஏந்தினோம்
பயங்கரவாதிகள் என்றது இந்தியா,
நீங்களும் வாய்மூடி ஆதரித்தீர்கள்
உங்கள் மண்ணில் வைத்து
ஒரு களவாணி உயிரை காவுகொண்டதற்காக?

சுதந்திரம் வேண்டி
சிங்களவன் மீது போர் தொடுத்தோம்,
இந்தியா சிங்களவனின் இறையாண்மையைக்காக்க
அள்ளி அள்ளி கொடுத்தது
குண்டுகளையும், தோட்டாக்களையும்
தமிழ்நாட்டின் தரைவழியே...

சிங்களவன்
மூன்றே நாளில் முடித்துவிட்டான்
ஒரு மாபெரும் இனப்படுகொலையை,
நீங்களோ
ஏற்கனவே காசு, சாதி, மதத்தினால்
முடிவாகியிருந்த தேர்தல் முடிவுகளை
பிடித்து முட்டிக்கொண்டு இருந்தீர்கள்...

உங்கள் பத்திரிக்கைகளோ
போர் முடியும் வரை ஆருடம் சொன்னார்கள்
முடிந்தப்பின்,
போராளிகளை குற்றவாளியாக்கி
ராஜபக்சேவே நாயகன் ஆக்கினார்கள்...
"இலங்கை ரத்னா" என்ற ஒரு விருதுக்காக
இன்று வரை முதல் பக்கத்தில் ராஜபக்சேக்கு
கட்டம் கட்டி நக்கி பிளைக்கிறார்கள்....

உங்கள் தமிழின தலைவரே(துரோகி)
தந்தி குடுத்தார், தபால் போட்டார்
திடீரெண்டு ஒரு வேலை உண்ணாவிரதம்(த்தூ)
இருந்து போரையே நிறுத்திவிட்டதாக சொல்றாறு..
வெங்காயம்....

இதோ,
இனப்படுகொலை நடந்து
ஒரு ஆண்டு முடிவடைந்துவிட்டது




இப்போதும் கூட
சுடவில்லையா குற்றயுணர்ச்சி உங்களை ,
சொட்டு ஈரமில்லாமல வற்றிப்போனது உங்கள் மனிதநேயம்..
ஓ மறந்துவிட்டேன்...
மனிதர்களுக்கு தானே குற்றயுணர்ச்சியும், மனிதநேயமும்...
ஒரு மூதாட்டிக்கு மருத்துவத்தை மறுத்த
உங்களிடம் எதிர்பார்த்தது
என் குற்றம் தான்...

இந்திய தமிழர்களே,

நன்றாய் நினைவில் கொள்ளுங்கள்,
நாங்கள் தன்மானம் உள்ளவர்கள்,
மாற்றானுக்கு மண்டியிடாதவர்கள்,
விடுதலைக்காக உயிர் துறக்கும் மாவீரர்கள்,
உறுதியாய் வென்றேடுப்போம்
தமிழீழ தாயகத்தை!!!

அதுவரை
இப்போது போல்
எப்போதும் வேடிக்கை மட்டுமே பாருங்கள்...

                                   வேதனைகளுடனும்,
                                   நாளைய நம்பிக்கைகளுடனும்,
                                   தன்னுயிர் போகினும் தன் உரிமைகள் இழக்காத,
                                   ஒரு தமிழீழ தமிழன்...

நான் ஒரு இந்திய அடிமை தமிழனாய் தான் இந்த பதிவை எழுத முயற்சித்தேன், ஆனால் ஒரு எழுத்துக்கூட எழுத முடியவில்லை, எனக்கு என்ன தகுதியிருக்கு தமிழீழ தமிழர்களை சமாதானப்படுத்த நானும் தானே எல்லோரோடும் சேர்ந்து வேடிக்கைப்பார்த்தேன், ஆதலால் ஒரு மாற்றாய், தமிழீழத்தில் சிங்களவனின் இனப்படுகொலையாலும், இந்தியா மற்றும் உலக வல்லாதிக்க சக்திகளின் வஞ்சனையாலும், ஐக்கிய சபையின் கண்டுக்கொள்ளா போக்காலும், இதை அனைத்தையும் தமிழ்நாட்டு தமிழர்கள் வேடிக்கை பார்த்த விரக்தியாலும் பிடிக்கப்பட்ட ஒரு தமிழனாய் இந்த நாளை அனுகமுயற்சித்தேன்... அதில் உண்டான உணர்ச்சிகளே இந்த பதிவு, இப்படித்தான் ஈழ தமிழர்கள் நினைக்க தொடங்கிவிட்டார்கள் என்பதல்ல நான் நிறுவ விரும்புவது, தாய் தமிழகம் என்று நம்மை நம்பின அந்த ஈழ சகோதரர்களில் சிலருக்காவது இந்த உணர்ச்சிகள் அல்லது கோபம் இருக்கம் என்பதே நான் நிருவ விரும்பியது... ஈழ விடுதலை பயணம் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்துயிருக்கிறது என்பது உண்மையே ஆனால் பயணம் தடைபடாது, ஈழ தமிழர்கள் என்றும் தனது விடுதலையை விட்டுக்கொடுக்காதவர்கள், அவர்களின் போர்முறை வேண்டுமானால் மாறலாம் ஆனால் இலக்கு தமிழீழ தாயகமே! ஆதலால் இந்த முயற்சி நம்மை சுயவிமர்சனத்துக்கு உள்ளாக்கவே மற்றும் இப்போது நான் உங்கள் முன் வைக்கும் கேள்வி, நாம் நம் தமிழின சகோதரர்களுக்கு இந்த சூழலில் தோள்குடுக்கப் போகிறோமா அல்லது எப்போதும் போல் எதாவது சொல்லி வேடிக்கை  மட்டுமே பார்க்கப் போகிறோமா?

                                              தோள்குடுத்து போராட விரும்பும்,
                                              ஒரு அடிமைத் தமிழன் மோகன்....
6 Responses
  1. எங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கு, போன வருடமே நாங்கள் கண்டு கொள்ளவில்லை, ஒரு வருடம் கழித்தா நாங்க கண்டுக்கப் போறோம். தமிழன் நிலை அறிந்தது தானே


  2. இந்திய தமிழன் Says:

    இந்திய தமிழர்கள் மட்டுமா உண்டு தொலைகாட்சி பார்த்து களித்துகொண்டிருக்கிறார்கள்? இலங்கையில் கூட அப்படிப்பட்ட தமிழர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இளைய தலைவலியின் ஐம்பதாவது படம் இலங்கையில் கூட தான் வெளியடப்பட்டது, அங்கும் கூடத்துக்கு குறைவில்லையே...

    சாப்பிட உணவோ சுதந்திரமோ இல்லாமல் முகாம்களில் அடைத்துவைக்க பட்டிருக்கும் தமிழனா இந்த இந்திய தமிழனை பார்த்து கவிதை நடையில் பதிவு போடா போகிறான்? இந்த பதிவு போட்ட இலங்கை தமிழன் கூட எல்லா சுகங்களையும் அனுபவித்துக்கொண்டு எங்கோ போராட்ட களத்திற்கு அப்பால் ஒளிந்துகொண்டு தான் எங்களை பார்த்து பதிவு/கவிதை எழுதுகிறான். இன்று இனைய தளத்தில் வக்கனையாய் இந்திய தமிழர்களை பார்த்து கவிதை/பதிவு போடும் எல்லா இலங்கை தமிழர்களும் பிரபாகரன் பின்னால் நின்று போராடி இருந்தால் பிரபாகரனை யாராலும் வென்றிருக்க முடியாது... அனால் நீங்களெல்லாம் வாய்ச்சொல் வீ(ண)ரர்களாக இருந்ததனால் தானே இவ்வளவு இழப்பும்? உங்களுக்கென்ன அருகதை இருக்கிறது இந்திய தமிழர்களை பார்த்து தூற்றி பேச?
    புலிகள் ஆயுதம் தூக்கிய பொது அவர்களுக்கு ஆயுதம் கொடுத்து அதை பிரயோகிக்க பயிற்சியும் கொடுத்தது யார்? இநதியா தானே? பிறகு தானே புலிகளுக்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து உதவி கிடைத்தது? இனியாவது வெட்டி பேச்சை குறைத்து செயலில் உங்கள் வேகத்தை காட்டுங்கள்...


  3. பெயரில்லா Says:

    naan ethai amothikkeran.nanum than vedikkai parthukondu irrunthen enra kutrra unaruv enakkum ullathu


  4. //ஓ மறந்துவிட்டேன்...
    மனிதர்களுக்கு தானே குற்றயுணர்ச்சியும், மனிதநேயமும்...
    ஒரு மூதாட்டிக்கு மருத்துவத்தை மறுத்த
    உங்களிடம் எதிர்பார்த்தது
    என் குற்றம் தான்...
    இந்திய தமிழர்களே,

    உண்மைதான்... 'பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்' என்றார் பாரதியார். இங்கே அதுதான் நடந்துகொண்டிருக்கிறது..


    //தன்னுயிர் போகினும் தன் உரிமைகள் இழக்காத,
    ஒரு தமிழீழ தமிழன்...// நெஞ்சைத் தொட்ட வரிகள்..


  5. Unknown Says:

    //ILA(@)இளா கூறியது...
    எங்களுக்கு ஆயிரம் வேலை இருக்கு, போன வருடமே நாங்கள் கண்டு கொள்ளவில்லை, ஒரு வருடம் கழித்தா நாங்க கண்டுக்கப் போறோம். தமிழன் நிலை அறிந்தது தானே//
    இளா எதை மனத்தில் வைத்து இதை எழுதினீர்கள் என்று தெரியவில்லை ஆனால் ஒரு இனத்தின் பேரழிவை ஒரு சாதாரண தொலைக்காட்சி நிகழ்ச்சி போல் கடந்து போகும் உங்கள் எண்ணத்தை நினைத்தால் என் மனது வலிக்கிறது....

    இந்திய தமிழரே ஒரு முறை கோவம்கோள்ளாமல் முழு கட்டுரையையும் படியுங்கள், நானும் ஒருஅருவெருக்கதக்க அடிமை இந்திய தமிழன் தான்... அவர்கள் என்ன செய்தார்கள் இவர்கள் என்ன செய்தார்கள் என்பதை விட்டுவிட்டு மனத்தில் கைவைத்து சொல்லுங்கள் ஒரே நாளில் 50000 மனிதர்கள்(உங்களுக்காகவே தமிழர் என்ற சொல்லை தவிர்த்து இருக்கிறேன்) கொல்ல பட்ட போதுஇந்திய தமிழனாக மார்தட்டி நீங்கள் என்ன செய்தீர்கள் அல்லது என்ன செய்ய முடிந்தது என்பது தான் இந்த பதிவின் மைய கேள்வி, இதற்கு பதில் சொல்லுங்கள்....
    முதலில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை குறிக்கும் போது தமிழீழ தமிழர்கள் என்று குறிப்பிடுங்கள் அவர்களை நோக்கி உங்கள் கேள்விகள் நீளும் முன், தாய் மண் விட்டு பிரிவு துயரில் வாழும் அவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளுங்கள் இந்த உலகத்திலே தாய் மண் விட்டு அகதிகளாய் வாழும் துயர் போல் வேறு எதுவும் இல்லை, இதை புரிந்து கொள்ள கொஞ்சம் புலம்பெயர் தமிழீழ தமிழர்கள் பதிவுகளை வாசித்து பாருங்கள் புரியும்... இந்தியனாய் அல்ல மனிதனாய் சுயவிமர்சனம் செய்யுங்கள்....


  6. Unknown Says:

    தோழர் முத்து மற்றும் பெயரில்லா வருகைக்கு நன்றி
    முத்து உண்மை தான் //'பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்' என்றார் பாரதியார். இங்கே அதுதான் நடந்துகொண்டிருக்கிறது.. //


Related Posts with Thumbnails

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner