என் செல்ல பப்லுக்கு
வான மகளே,
வட்ட நிலவே,
வெள்ளி மலரே,
இயற்கை படைத்த
அழகின் உச்சமே
எப்படி இருக்கிறாய்?
நீ மட்டுமே
பேரழகி என்று
நினைத்திருந்தேன்;
நீ மட்டுமே
அழகின் மொத்தமென்று
மயங்கியிருந்தேன்;
நீ மட்டுமே
ஒரே ஒரு பார்வையில்
உயிர் கரைக்கும்
மின்சாரமென்று
சத்தியம் செய்தேன்...
ஆனால்
இவை அனைத்தையும்
ஒரு நொடியில்
உடைத்துவிட்டாள்
அவள்...
சிறகுகள் மட்டும்
முளைத்திருந்தால்
அவள் தேவதை...
அவள் மட்டும்
விண்ணில் தவழ்ந்துவந்தால்
அவள் வண்ண நிலா...
அவள் மட்டும்
கை அசைத்து காற்றுகிழித்தால்
அவள் தென்றல்...
அவள் மட்டும்
கண்சிமிட்டி நின்றிருந்தால்
அவள் நட்சத்திரம்...
அவள் மட்டும்
முகம் மலர்ந்தால்
அவள் மல்லிகை...
ஏய்! என்னாயிற்று,
ஏன்? மேகத்திரை
போட்டுக்கொண்டாய்
பப்லு
ஓ! கோபமா?
கவலை வேண்டாம்,
உன்னை குழந்தையாய்
பெற்று எடுக்கிறேன்,
உன்னை
கொஞ்சி கொஞ்சியே
உன் ஆசை தீர்க்கிறேன்
போதுமா???