இது தான் கடவுளா?
உங்களை பார்த்து கேட்கிறேன் இது தான் கடவுளா?
ஏன் அந்த கல்லுக்கு இத்தனை ஆரவாரம், ஆடம்பரம், ஆர்பாட்டம்...
ஆப்பிரிக்காவைக் காட்டிலும் அதிய ஏழைகள் வசிக்கும் நாடாக இந்தியா மாறி விட்ட நிலையில் கோடி கோடியாய் கொட்டி கோயிலும், கல்லுக்கு தங்கமும், வைரமும் மாட்டும் உங்கள் செயல் ஆபாசம்யில்லையா?
அரைவயிற்று கஞ்சிக்கு மலம் சுமக்கும் எம் சகோதரர்கள் முன் லிட்டர் லிட்டராய் பாலையும், தேனையும் கல்லின் மீது அபிசேகம் என்று வீணடிப்பது, மனித தன்மையுள்ள செயலா?
இது எல்லாம் கடவுள் செய்ய சொல்ல மனிதன் தான் எமாத்துறானு நீங்க வாதாடினா? ஒரே கேள்வி இத ஏன் உங்க கல்லு மன்னிக்க கடவுள் வேடிக்கை பார்கிறார், ஓ மறந்தே போயிடுச்சு உங்க ஆளு தான் 'அத' எல்லாம் வேடிக்கை பார்த்தாரு இதுயெல்லாம் எம்மாத்திரம்....
கல்ல உடைச்சு சிலையாக்கி, அதுக்கு கோயில் கட்டுற வரைக்கும் ஒரு கீழ் சாதிக்கறார் தொடலாம் ஓ சாமிய!!!
ஆன
மணியாட்டி, மந்திரத்த சொல்லி, மாட்டு மூத்திரத்தை தெளிச்சதுக்கு அப்புறம் ஒரு கீழ் சாதிக்கறார் தொடக்குடாதோ ஓ சாமிய!!!
த்தூ!!! இதுக்கு பேரு தான் கோவிலா???
எனக்கு சமஷ்கிருதம் தெரியாது, உங்களோட கல்லுக்கு தமிழ் தெரியாது, மணியடிக்கிற ஐயருக்கோ இரண்டுமே தெரியாது, காச வாங்கிட்டு ஏதோ ஒளரிட்டு ஒரு அரை முடி தேங்காயைவும், குங்குமத்தையும் தூக்கி எறிஞ்சிட்டு போயிராரு, இதுக்கு பேரு அர்ச்சனையாம்? இத பண்ணலைனா கோயிலுக்கு வந்த புண்ணியம் சேராதாம்....
எவ்வளவு பெரிய முட்டாள்தனம்...
நானும் சரி, அவனும் சரி அந்த கல்லதான் கும்பிடுறோம். நான் எனக்கு தெரிஞ்ச மாதிரி கும்பிடுறேன் அவன் அவனுக்கு தெரிஞ்ச மாதிரி கும்பிடுறான், நானும் ஹிந்து அவனும் ஹிந்துங்குற அப்புறம் எதுக்கு அவனுக்கு மட்டும் "பூநூல்", தான் மேல் சாதினு காட்டிக்கவா?
சீ!!!
வர்ணாசிரமே(சாதி) நான் தான் படைச்சேனு சொல்லும் கடவுளும்!
சக மனிதனை, சாதி, மத, நிற பேதம்யில்லாமல் மனிதனாய் பார்க்க, மதிக்க கற்றுத்தறாதா மதமும்!
இருந்தேன்ன! இறந்தேன்ன!!!
தோழிகளே, தோழர்களே...
இன்னும் நேரம்யிருக்கிறது, சிந்தனைச் செய்யுங்கள்...
நம்மில் அனைவருக்கும் கடவுள் பக்தி என்பதே நம்ம அம்மாவோ, அப்பாவோ சின்ன வயசுல இருந்து இப்படி கும்பிடு, இத வேண்டிக்க, அத வேண்டிக்க... இத செய்யலனா சாமி கண்ண குத்திடும், அத செய்யலனா அல்பாய்சுல போயிருவனு நம்ம கிட்ட திரும்ப திரும்ப சொல்லி, பயமுறித்தி, ஆசைக்காட்டி உண்டாக்கின ஒரு பழக்கம் தானே!!!
அதனால செக்கு மாடு போல நமக்கு போட்டுக்கொடுத்த வட்டத்துக்குள்ளயே சுத்திக்கிட்டு இருக்காம, நம்முடைய பழைய பொது புத்திகளையும், கற்பிதங்களையும் ஒதுக்கி வச்சுட்டு, சுதந்திரமா சிந்தனைச் செய்யலாமே ?
அந்த சிந்தனைக்கு முதல் புள்ளியாய், உண்மையிலேயே இது தான் கடவுளா? னுங்கற இந்த கேள்வி அமையட்டும் அல்லது அந்த புள்ளி எதுவாவேணாலும் இருக்கட்டும்
ஆனா சிந்திக்கனும்! காரணம் சிந்தனை செய்கிறவன் தான் மனிதன்!!! நீங்க???
நண்பரே போபால் குறித்த உங்களின் பதிவு போபால் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நன்றி. http://bhopal-public.blogspot.com/2010/07/blog-post_25.html
வருகைகும், என் கட்டுரையை வெளியிட்டமைக்கும் நன்றி, உங்கள் முயற்ச்சி வெற்றியடைய என் பங்களிப்பு உங்களுக்கு எப்போதும் உண்டு...