Unknown
எனக்கு தெரிந்தது...உங்களுக்காக...

முன் குறிப்பு,
இந்த பதிவு நான் சுமார் முன்று வருடங்கள் முன் எழுதியது, என் மின்ன்ஞ்சலை தூசி தட்டும் போது கிடைத்த்து, இது ஓர் மீள் பதிவே, அது மட்டுமல்ல நான் எழுதிய முதல் கட்டுரை இது தான்....


தமிழா!!! உன் கற்பனையின் கணம் கண்டு ஒவ்வொரு முறையும்
வியக்கிறேன்,வியந்து கொண்டேயிருக்கிறேன்...
இங்கே நான் உங்களுக்காக விவரிக்க போகும் கற்பனை, நான் அறிந்து வியந்தது மட்டுமல்ல நீங்கள் அறிந்து வியக்கவேண்டும் என்றே விவரிக்கிறேன்...
இங்கு சொல்லபோகும் கற்பனையின் கணம் உணரும் அத்தனை நெஞ்சகளுக்கும் என் தமிழ் வாழ்த்துக்கள்...

இனி கற்பனை பார்ப்போம்,
நாம் அனைவருமே வானமகள் தன் முழுமுகம் காட்டி முத்து முத்தாய் சிரிக்கும் ஒரு பெளர்ணமியை பார்த்திருப்போம்....

இப்படியும் ஓர் பேரழகா? இவளை பெற்றார்களா? இல்லை செய்தார்களா? என்று வியக்க தொன்றும் பெண்களையும் பார்த்திருப்போம்...

ஆனால் தூரமாய் எப்போதுமே துடித்து கொண்டேயிருக்கும் விண்மீனை கவனித்திருக்கமாட்டோம்...
கவனித்திருந்தாலும் பெரிதாய் கவலை கொண்டிருக்கமாட்டோம்...

ஆனால் ஓர் தமிழ் கவிஞன் கவலைகொண்டான் விண்மீன் விட்டு விட்டு துடிக்கும் ரகசியம் தெரிந்தே தீரவேண்டும் என்று தீவிரம் கொண்டான், இமை மூடினான் கற்பனை கண் திறந்தான், காரணம் கண்டு கொண்டான்...
அந்த கவிஞனின் காரணம் அறிய நீங்கள் மூன்று விஷயங்கள் கற்பனை செய்ய வேண்டும்...

ஒன்று: மேலே பெளர்ணமி நிலவு பளபளக்கும் வானம்
இரண்டு: கீழே மானுட தேவதையாய் ஓர் மல்லிகை மலர் போன்ற மங்கையின் முகம்
மூன்று: இரண்டுக்கும் நடுவே புதிதாய் பிறந்த ஓர் விண்மீன்

இப்போது மெதுவாய்
விண்ணிலிருக்கும் "வெண்ணிலாவையும்"
மண்ணிலிருக்கும் "பெண்ணிலாவையும்"
மாற்றி மாற்றி கவனியுங்கள்...
உங்கள் கண்ணை உங்களாளே நம்ப முடியவில்லையல்லவா?
உங்களுக்கே குழப்பம் வருகிறதல்லவா?
"எந்த நிலா? உண்மை நிலா?" என்று
இதே குழப்பம் தான்
இதே பதற்றம் தான் அந்த விண்மீனுக்கும்
"எந்த நிலா? உண்மை நிலா?" என்று
பாவம், அந்த நொடியில் ஆரம்பித்த குழப்பம் தான் இந்த நொடியும் தொடர்கிறது...

இன்று இந்த நொடி வரை விண்மீனால் அறியமுடியவில்லை
"எந்த நிலா? உண்மை நிலா?" வென்று என்கின்றான் அந்த தமிழ் கவிஞன்
அந்த கவிஞன் வெறு யாருமில்லை பொய்யா புலவர் நம் "வள்ளுவன்" தான்...
இந்த கற்பனை வருவது வேரு எங்குமில்லை உலகமே போற்றும் நம் "திருக்குறளில்" தான்...

குறள் எண்:1116

குறள்:
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.


எப்படி கற்பனை கொண்டிருக்கிறான் கவிஞன்!!! சத்தியமாய் நான் கற்பனை கூட செய்தது இல்லை இப்படியெல்லாம் கவிகள் செய்யமுடியுமென்று...
இது போல் தமிழனின் தனிசிறப்பு பதிவு செய்தால் ஓராயிரம் கோடி வளை பதிவுகள் பதித்தாளும் போதாது...

ஆகவே உலக தமிழர்களே நான் முன் வைப்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான்

"நாம் அனைவரும்,
நான் தமிழன் என்று மார் தட்டி கொள்ளவில்லையென்றாலும்
நான் தமிழன்;
என் மொழி தமிழ், என்று சொல்வதில் கேவலம் கொள்ளவேண்டாம்"
ஆங்கிலமே வேண்டாமென்று சொல்லவில்லை தமிழை மறந்துவிடாதீர்கள்...


எற்கனவே தமிழை எழுதவோ? படிக்கவோ? தெரியாத ஒரு தமிழ் தலைமுறையே உருவாக்கிவருகிறோம் சத்தமில்லாமல்...

தமிழை இரண்டாவது மொழியாக வைக்கலாமா? வேண்டாமா? என்று யோசிக்கும் பள்ளிகள் பெருகிவருகின்றன...

ஆதலால் நான் முன் வைப்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான்
"நாம் அனைவரும்,
நான் தமிழன் என்று மார் தட்டி கொள்ளவில்லையென்றாலும்
நான் தமிழன்
என் மொழி தமிழ் என்று சொல்வதில் கேவலம் கொள்ளவேண்டாம்"
ஆங்கிலமே வேண்டாமென்று சொல்லவில்லை தமிழை மறந்துவிடாதீர்கள்...

இங்கு நான் பதித்த அனைத்தும்
எனக்கு தெரிந்தது... உங்களுக்கு தெரியவேண்டியது...

என்றும் உங்களுக்காக,
மோகன்
2 Responses
  1. jeffmanoj Says:

    மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே அருமையான சிந்தனைகள். அருமையான நடை. ஆம்...
    "ஆங்கிலமே வேண்டாமென்று சொல்லவில்லை தமிழை மறந்துவிடாதீர்கள்..."
    மறக்க மாட்டோம் தோழரே தொடர்ந்து எழுதுங்கள்...


  2. Unknown Says:

    வருகைக்கும் உங்கள் நம்பிக்கையான வாழ்த்துக்கும் நன்றி தோழரே.... கண்டிப்பாக தொடர்ந்து எழுதுகிறேன்...


Related Posts with Thumbnails

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner