Unknown
நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைக்கெட்ட மாந்தர்களை நினைத்துவிட்டால்...

25 வருடம் கழித்து தீர்ப்பு வருகிறது ஆம் குற்றம் தான், இருந்தால் என்ன குற்றம் இழைத்தவர்கள் கோடீசுவர இந்தியர்கள் என்பதால் போனா போகுதுனு இரண்டாண்டு கால சிறை தண்டனை விதித்திருக்கிறது இந்திய நீதி மன்றம், இதில் வேடிக்கை இது தான் தீர்ப்பு வந்த சாய்ங்காலமே குற்றம்புரிந்த அனைவருக்கும் பிணை விடுதலை, பிறகென்ன அந்த நல்லவர்கள் (நயவஞ்சகர்கள்) கொன்றது இந்தியாவின் ஒற்றை கலங்கரை விளக்கான, இந்தியாவின் வல்லரசு கனவை நினைவாக்க பிறந்த ஒற்றை விடிவெள்ளியான, இந்தியாவின் பாதுகாப்பில் ஊழல் செய்த, தமிழீழ மக்களின் குரவளையை அறுத்த காங்கிரசின் தலைவர் ராஜீவ் காந்தியைவா? இல்லையே உழைப்பை மட்டுமே நம்பி, உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து போன வெறும் 8000 சாமானிய இந்தியர்கள் மன்னிக்க இந்தியா என்ற நிலப்பரப்பில் வாழ்வதால் இந்தியர்களாக ஆக்கப்பட்ட இந்தியர்களை தானே, இதுக்கு இரண்டு ஆண்டே ரொம்பக் கூட...

அப்ப போபாலில் விசவாயு தயாரிக்க அனுமதி வாங்காமல், எந்த ஒரு பாதுகாப்பு விதிமுறையையும் சரிவர பின்பற்றாமல், Union Carbide யால் இயக்கி வந்த அந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட விசவாயு கசிவால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்ட 2 லட்ச பொது மக்களுக்கும் இது தான் நீதியா? என்று நீங்க யோசிச்சாலோ,கேட்டாலோ, இது தான் பதில்,


இந்தியாவுல எப்பவுமே முதலாளிக்கு ஒரு நீதி, உழைப்பாளிக்கு ஒரு நீதி... அதிகாரம் படைச்சவனுக்கு ஒரு நீதி, அன்றாடங்காய்ச்சி ஒரு நீதி... அரசியல்வாதிக்கு ஒரு நீதி, அடிமை இந்தியனுக்கு ஒரு நீதி...

இது தான் இந்தியா! இது தான் இந்திய மக்களாட்சி!!!


ஒரு கொசுறு செய்தி,

இன்றைக்கும்(வைகாசி 25 ) தமிழக மீனவர்கள்(ஆமாம் அவங்க என்னைக்கும் தமிழக மீனவர்கள் தான் இந்திய மீனவர்கள் அல்ல) சிங்கள் ரானுவத்தால் தாக்கப்பட்டுயிருங்காங்க, தலைதெறிக்க உயிரை காபாற்றிக்கொண்டு ஓடிவந்துயிருக்கிறார்கள் நம் உடன்பிறப்புகள், சீ! இவ்வள்வுதானா நானே இந்தியா ஜிம்பாபேக் கூடப் போய் தொத்துப்போயிருச்சுனு சோகத்தில்யிருக்கேனு சொன்னீங்கனா நீங்க தான் பச்சை தமிழன்! வாழ்க உங்க தேசப்பற்று! ஒளிர்க இந்தியா!!!

இன்னோரு செய்தி, போபால் விசவாயு வழக்கில் முக்கிய குற்றவாளியான Union Carbide ன் இயக்குனர் இந்தியப் பிரிவுத் தலைவர் வாரன் ஆண்டர்சன் இப்போ அமெரிக்க தீவுல Beer அடிச்சிட்டு மல்லாந்து படுத்துக்கிட்டு கனா கண்டுகிட்டுயிருக்கான் காவாளி, அவன ஒரு தடவக்கூட இந்தியா விசாரிக்கவில்லை. ஏன்டானு கேட்கீறிங்களா?

இந்திய பெரு முதலாளிகளுக்கும், தரகு முதலாளிகளுக்கும், அரசியில்வாதிகளுக்கும் நல்லாவே தெரியும், பெரும்பாலான இந்தியர்கள் எது நடந்தாலும்(இந்தியாவின் கிரிக்கெட் தோல்வியையும், புதுப்பட ரிலிசையும் தவிர்த்து) மனசுல வச்சுக்காம மறந்துறுவாங்கனு, அதே போல எவ்வளவு அடிச்சாலும் தாங்குற ரொம்ப நல்லவுங்கனும் நல்லாவே தெரியும் அந்த அறிவாளிகளுக்கு...

ஏதோ சில விளங்காத பையபுள்ளைக பாதிக்கபட்டவங்களோடு சேர்ந்து எதிர்வினையோ, புரட்சியோ, போராட்டமோ நடத்தினா, கருணைக்கடல் இந்திய அரசு தன்னுடைய நாய்படையை மன்னிக்க காவல் படையை ஏவி விட்டு சும்மா பட்டைய கிளப்பிருவாக, நாமும் அந்த நிகழ்வ அடுத்த நாள் செய்திதாள்ல படிச்சிட்டு சே! பாவம்யில்ல னு உதட்ட சுழிச்சிட்டு ராவணன் படத்துக்கு எப்ப முன்பதிவு(ரிசர்வேசன்) தொடங்குதுனு இந்திய நாட்டோட மிகமுக்கிய பிரச்சனையை கூட்டமா சேர்ந்து விவாதிச்சுட்டுயிருப்போம்....

சே! மெய்சிலிர்க்குது உலகத்தோட மிகப்பெரிய மக்களாச்சியோட ஒரு குடிமகன் நானு நினைக்கிறபோது.... பேஷ்! பேஷ்! ரொம்ப நன்னாயிருக்கு!!!

த்தூ!!!


கொஞ்சம் கூடவா நமக்கு சுரணையில்லாம போச்சு, இது எப்படி நீதியாகும், லட்ச லட்சமா சாமானியன் செத்தாலும் குற்றம் செய்தவன விசாரிக்க கூட செய்யாது நம்ம நீதிதுறை, அப்படியே தண்டனைக் குடுத்தாலும் காலையில இரண்டு வருட சிறை, சாய்ங்காலம் பணை விடுதலை, சீ! கேவலமாயில்ல, பகுத்தறிவு அற்ற விலங்குகள் கூட ஏத்துக்காது இப்படி ஓர் கேவலத்தை நீதியென்று, ஆனால் இந்தியர்களாக ஆக்கப்பட்ட நாம் ஏற்போம்! ஏன் என்றால் நாம் மெத்த படித்தவர்கள்! அடிமை வாழ்க்கையை ரசிப்பவர்கள்! சக மனிதனை சுரண்டுவதும், சுயநலமும் மனித இயல்புகள் என்று நம்பும் நல்லவர்கள்! எல்லாவற்றுக்கும் மேலாக இனப்படுகொலையே நடந்தாக்கூட, இலவசங்களையும் சலுகைகளையும் வாங்கிட்டு "மன்னிப்போம்! மறப்போம்!!!" என்ற உயர் கொள்கை கொண்ட சுத்தமான தியாகிகள்!!! நாம்

நிச்சியமாய் மகாகவி,

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தர்களை நினைந்துவிட்டால்!!! 


இப்படிக்கு,
ஒரு பாமரன்


தொடர்புடைய கட்டுரைகள்:

8000 பேரை பலி கொண்ட போபால் கொடுமையும் ராஜீவ் காந்தி மரணமும் 

அழியாத் துயரம் போபால் - 25 ஆண்டு கடந்தும் தொடரும் அவலம் 

நேற்றைய செய்தி

1 Response
  1. பெயரில்லா Says:

    http://www.yarl.com/forum3/index.php?showtopic=79644

    இது பற்றி உங்கள் கருத்து என்ன ?


Related Posts with Thumbnails

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner