Unknown
முன் குறிப்பு: இன்று(ஜீன் 11) நான் எனது முதல் மென்பொருள் நிறுவனத்தில் இருந்து வேலையை  விட்டு கிளம்புகிறேன், எனது நிறுவனம் மற்றும் ஹைதராபாத் நண்பர்களுக்காக எழுதிய கவிதை இது...



இன்று பிரிகிறேன் உங்களிடம் இருந்து!!!


பிரிகிறேன் தோழிகளே,
பிரிகிறேன் தோழர்களே,
பிரிகிறேன் ஹைதராபாத்தே,

எத்தனை கனவுகள்,
எத்தனை நிகழ்வுகள்,
எத்தனை நினைவுகள்,
எத்தனை சிரிப்புகள்,
எத்தனை சன்டைகள்,
எத்தனை சமரசங்கள்,
எத்தனை மொக்கைகள்
இன்னும்
எத்தனை எத்தனையோ....

என் நினைவுகளை உங்களிடம் விட்டு விட்டு
உங்களின் நினைவுகளை என்னோடு ஏற்றிச்செல்கிறேன்...

எவ்வளவு சமாதானம் சொன்னாலும்
நெஞ்சு ஏற்பதில்லை
பிரிவுகளை...

எவ்வளவு மறைத்தாலும்
வழிந்து விடுகிறது
கண்ணீர் துளிகள்...

எவ்வளவு தவறுகள் இருந்தாலும்
முதல் நிறுவன அனுபவம்
முதல் முத்தம் போல்
என்றும் நிறைந்திருக்கும்
அதே ஈரத்துடன்...

விடை குடுங்கள் நன்பர்களே
விடியல் நோக்கிய
என் பயணத்திற்கு,


நட்பை எப்போதும்
தூரங்கள் முடிவு செய்வதில்லை
ஆனால்
நேற்றுவரை உங்கள் அனைவரிடமும்
நான் கண்டு, ரசித்த
சிரிப்புகளும்,
சின்ன சின்ன சன்டைகளும்,
பெரிய அறிவுரைகளும்,
ஆடி மகிழ்ந்த நிகழ்வுகளும்,
அன்பான கண்டிப்புகளும்,
நேசமான பகிர்வுகளும்
மரண மொக்கைகளும்
இனி
நினைவுகள் தான்
எனும் போது...
நிச்சியமாய் வலிக்கிறது நெஞ்சு...

சேர்ந்தவர்கள் பிரிவது
எதார்த்தம் என்றால்
பிரிந்தவர்கள் சேர்வதும்
எதார்த்தம் தானே...

மற்றொரு நாள்
மீண்டும் கைகோர்போம்
மீண்டும் பயணிப்போம்
ஏனென்றால்
எப்போதுமே பயணங்கள்
மட்டும் முடிவதெயில்லை....


என்றும் உங்கள் பயணங்களில் ஒருவன்,
தோழன் மோகன்
7 Responses
  1. உலகம் பெரியது.. வாழ்த்துக்கள். பல இடங்கள் மாறியபின் உங்களது வருத்தம் கம்மியாகிவிடும். நண்பர்களிடம் வாரம் ஒரு முறையாவது பேசிவிடுங்கள். இல்லையெனில் இடைவெளி பெரியதாக நட்பிழக்க வேண்டி வரும்


  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  3. Unknown Says:

    வருகைக்கு, வாழ்த்துக்கும் நன்றி இளா...


  4. ///பிரிகிறேன் தோழிகளே,
    பிரிகிறேன் தோழர்களே, // தோழர் என்பதிலேயே தோழனும் தோழியும் அடக்கம்தானே.. மாற்றியிருக்கலாமே


  5. எவ்வளவு தவறுகள் இருந்தாலும்
    முதல் நிறுவன அனுபவம்
    முதல் முத்தம் போல்
    என்றும் நிறைந்திருக்கும்
    அதே ஈரத்துடன்... // குழந்தைக்குத் தாய் தரும் அதே ஈரத்துடன்... ?!? சரிதானே தோழரே?


  6. Unknown Says:

    ஆதி கூறியது/////பிரிகிறேன் தோழிகளே,
    பிரிகிறேன் தோழர்களே, // தோழர் என்பதிலேயே தோழனும் தோழியும் அடக்கம்தானே.. மாற்றியிருக்கலாமே
    // எனக்கென்னவோ தோழர் என்பதில் தோழனும் தோழியும் அடக்கம் என்று தோன்றவில்லை... தோழர் தோழியர் என்பதே சரியேன நிணைக்கிறேன்... அதை விட முக்கியம் எனக்கு உண்மை நட்பின் கணம் உணர்த்திய என் தோழிகளுக்கு முக்கியத்துவம் குடுக்க நிணைத்தது:)


  7. Unknown Says:

    ஆதி கூறியது //குழந்தைக்குத் தாய் தரும் அதே ஈரத்துடன்... ?!? சரிதானே தோழரே?// மிகச் சரி தோழரே...


Related Posts with Thumbnails

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner