இரண்டாம் முற்றுகை
என் இனியவளே, ஓராயிரம் கோடி
வெண்ணிலாக்கள் உடைத்து
பார்க்கடல் ஊற்றி
பளிங்குகல் சேர்த்து
பத்திரமாய்
படைக்கபட்ட
பவளம் தானே
கண்ணே
உன் நிலா முகம்...
சத்தியம் செய்வேன்
கண்ணே
உன் முகத்தோடு
ஒப்பிட்டால்
நிலா
அழகில்லை தான்...
ஏய்! தங்க தழலே,
என் உயிரைக் குடித்தாய்
என் உறக்கம் பறித்தாய்
என் உள்ளம் தின்றாய்
என் உணர்வைக் கொன்றாய்
இவைகள் போதாதென்று;
அமுத அமிலம் தந்தாய்
அருந்தச் சொன்னாய்
அருகில் இருந்தாய்
அநியாய
அழகாய் இருந்த்தாய்.....
அனைத்து சந்தோசங்களும் தந்தாய்...
ஆனால்
ஒரு கண்சிமிட்டல் தான்
கலைந்து போனாய்
கரைந்து போனாய்
காணாமல் போனாய்....
ஆனால்
முழுவதுமாய் நிறைந்தாய்
என் கண்மணிகளில்
பிம்பமாய்;
முழுவதுமாய் உரைந்தாய்
என் உதிரத்தில்
உயிர் துளியாய்;
முழுவதுமாய் கரைந்தாய்
என் நுரையீரலில்
உயிர் காற்றாய்;
எப்படியோ
ஒன்றானாய்
என்
உயிரானாய்.....