நானொரு வெயில் காதலன்!!!
வெயில் என்றவுடனே வேர்வை, புழுக்கம், அனல் காற்று, தாங்கவே முடியாத வெட்கை போன்ற ஏதாவது ஒன்றோ பல உணர்வுகளோ நம்மில் பலரிடம் தோன்றுகிறது... உச்சி வெயிலில் உங்கள் நண்பரிடமே, வா, வெயிலில் விளையாடலாம் அல்லது வெயிலில் பேசிக்கொண்டே நடக்கலாம் என்று சொல்லுங்கள், அவ்வளவுதான்,"உனக்கேன்ன பைத்தியமா என்றே கேட்பார்?"
உடனே கேளுங்கள், "சூரியன் மட்டும் இல்லையென்றால் பூமியே பிறந்திருக்காது தெரியுமா?"
சற்றே முழிப்பார், விடாதீர்கள் அடுத்த கேள்வியையும் கேட்டுவிடுங்கள், "சூரியனின் வெப்ப கதிர்கள் மட்டும் பூமிக்கு வருவது நின்றுப் போனால் மனிதன் மட்டுமல்ல அனைத்து உயிர்களும் அழிந்துபோகும் என்றாவது தெரியுமா?"
உங்கள் நண்பர் கொஞ்சம் சுதாரித்து எல்லாம் தெரியும் ஆனாலும் வரமுடியாது, வெயில்ல போனா வேர்க்கும், வேர்த்தா வாடை வரும், நான் வரலைனு சொன்னா...
ஒரு பொன்முறுவல் சிந்திவிட்டு நிதானமாகச் சொல்லுங்கள்,
வேர்வை வெளியேருவது உடலுக்கு நல்லது,
உடல் வேர்பதற்க்கும் உடல் ஆராக்கியத்திற்க்கும் நேரடி பங்குண்டு,
உடலிருந்து வெளியேரும் வேர்வைக்கு வாடைக் கிடையாது, ஆனால் நம் தோலில் இருக்கும் பாக்டீரியா போன்ற நுன்கிருமிகளாலும், அழுக்காலும் தான் வேர்வைக்கு வாடை சேர்க்கின்றன என்ற அறிவியலையும் சேர்த்துச் சொல்லுங்கள்,
வாயடைத்துப் போவார் உங்கள் நண்பர் என்று தானே நினைப்பீர்கள்,
இல்லை அவர் உடனே தனது வஜ்ராயூதத்தை பயன்படுத்துவார், அது "வெயிலால் என் உடல் நிறம் கருத்துபோயிரும்" என்பதல்ல "நான் கருப்பாகிவிடுவேன்" என்பதே அது...
ஒன்றை நன்றாக கவனியுங்கள் இந்த இடத்தில் நான் என்ற சொல்லுக்கு வெறும் தோலின் நிறம் மட்டும் தான் குறிப்பு அப்படியானால் "மனிதன் என்பவன் வெறும் தோலின் நிறம் தானா?" அப்படித்தான் என்றால் நிறத்தை அடையாளம் காண்கிற கண்மனியே கருப்பு தானே, அப்ப கருத்துபோயிருவேனு ஒரு மனிதன் பதறுவதுக்கும், பயப்படுவதுக்கும், வெட்கபடுவதுக்கும் என்ன காரணம்?
அறிவியல், உலகின் முதல் மனிதன் கருப்பு தான் என்று ஆணித்தரமாய் நிருபித்திருக்கிறதே, ஆப்பிரிக்காவின் கருப்பின மக்களே நம் அனைவருக்கும் மூதாதையர்கள் எனும் போது எங்கிருந்து குதித்தது இந்த நிற வித்தியாசப்படுத்துதல், மனிதன் தான் வாழ்ந்த இடத்தில் எவ்வளவு அளவு அவனுடைய தோல், சூரியனின் புறஊதா கதிர்களை(UV rays) உள்வாங்கி, எந்த அளவு மெலானின்(Melanin) தயாரிக்கிறதோ அந்த அளவே தோலின் நிறத்தை முடிவுசெய்கிறது என்று நிருபிக்கப்பட்டு, நம் புத்தகங்களிலும் பதிக்கப்பட்டு, நாம் அதை படித்த பிறகும் கூட அறிவில்லாமல் "கடவுளே! என்னை ஏன் கருப்பா படைச்ச?" என்று கேட்கிறோமே, நாம் சிந்தனை திறன் உள்ள மனிதர்கள் தானா? எனக்கு சந்தேகம் தோன்றுகிறது???
ஜீன்களும் நம் தோலின் நிறத்தை முடிவுச்செய்வதில் ஒரு முக்கிய பங்குயிருக்கிறது அதனால் தான் நாங்கள் கருப்பாய் இருப்பதால் வெள்ளை பெண்ணையோ/பையனையோ தேர்வு செய்கிறோம் என்று சாக்கு சொல்லும் அறிவிளிகளே, அறிந்து கொள்ளுங்கள்! நமது தோலின் நிறத்தை முடிவு செய்வது ஒரு ஜீனல்ல பல ஜீன்கள் , ஒரு குழந்தை பெண் வயிற்றில் கருவுற்றவுடன் தாயிடமிருந்தும், தந்தையிடமிருந்தும் தன் நிறத்தை முடிவு செய்கிற பல ஜீன்களை பெறுகிறது, அதில் எந்த ஜீன் மற்றவைகளை விடுத்து வெளிப்படுகிறதோ அந்த ஜீன் தான் அந்த குழந்தையின் நிறத்தை முடிவு செய்கிறது, அது அடர் கருப்பிலிருந்து வெளிர் வெள்ளை வரை எதுவாகவும்யிருக்கும், இது தான் அறிவியல், பிறகு அந்த குழந்தை வளரும் சூழலில் இருக்கும் தட்ப வெட்ப நிலை ஜீன்களால் உருவான நிறத்தை தக்கவைக்கவும், கொஞ்சமாக கூட்டவும் குறைக்கவும் ஒரு பெரிய காராணியாகிறது, இப்படித்தான் நம்முடைய தோலின் நிறம் முடிவாகிறது, இல்லை இல்லை நான் Fair and Lovely யோ Fairness cream யையோ தடவி என் தோலின் நிறத்தை வெள்ளையாக்கிவிடுவேன் என்று நம்புகிறீர்களா? அப்படியானால் நீங்கள் முட்டாள் தான் காரணம் தோலின் நிறத்தை எந்த களிம்பும்(cream) நிரந்தரமாக மாற்ற முடியாது, எவ்வளவு தான் உங்கள் தோல் ஜொலித்தாலும் அது தற்காலிகம் தான், இதை காட்டிலும் பெரிய உண்மை நாம் ரொம்பவே பேணிக் காக்கும் இந்த தோல் கண்டிப்பாக பொலிவுயிலக்கும். சுருங்கும், எதை கண்ணாடியில் பார்த்து ஆனந்த கூத்தாடிநோமோ அந்த தோல் பார்க்கவே அருவெருப்பாக மாறும்.... இது தான் நாம் மறந்த உண்மை...
ஆக தோல் நிறத்தை காரணம் காட்டி வெயிலை காதலிக்காமல் இருக்கிறதுக்கு எந்த அறிவியல் உண்மையும் இல்லை, அப்ப எங்குயிருக்கு சிக்கல்?
அது ஒரு உளவியில் சிக்கல்..
அதன் ஆரம்ப புள்ளி நம்மை 300 ஆண்டுகளாக ஆண்ட பரங்கியர்கள்(பிரிட்ஷ்காரர்கள்) வெள்ளையர்கள், ஆளப்பட்ட நாம் கருப்பர்கள் என்ற ஆண்டான் அடிமை உளவியல்...
ஆனால் இன்றைய காலகட்டத்தில் வெள்ளைத் தோல் தான் அழகு, கவர்ச்சி என்ற சீல் பிடித்த எண்ண ஒட்டத்திற்க்கு மிகப்பெரிய காரணம் நம்மள சுத்தியிருக்கிற அனைத்து ஊடகங்களும், இதுல விதிவிலக்கேயில்லாம எல்லா ஊடகமும் முன்னிருத்திற ஒரே விடயம் அழகுனா தோலின் நிறம், அதுவும் வெள்ளைத் தோல் தான் அழகு, கவர்ச்சி என்ற சீல்ப்பிடித்த எண்ணத்தை தான், அதுவும் பையன் கூட கருப்பாயிருக்கலாம் ஆனா பொன்னு கட்டாயமா வெள்ளையாவோ/சிவப்பாவோ தான் இருக்கனும், இது தான் சட்டம் அந்த குப்பை வியாபாரிகளுக்கு...இந்த கீழ்தரமான வியாபார யுக்தி தான் இந்த சிக்கலில் ஒரு மிகப்பெரிய காரணி, அப்போ இது மட்டும் தான் சிக்கலா? இல்லை இதோட நீட்சீயா சமுக சிக்கலும் இருக்கு...
கொடுத்த பஜ்ஜியை மிச்சம்வைக்காம சாப்பிட்டுவிட்டு,"எல்லாம் சரி தான் ஆனா பொன்னு கொஞ்சம் கலர்(நிறம்) கம்மியா இருக்கிறதால ஒரு 10 பவுனு கூட போட்டுடிங்கனா, முடிச்சுறலாம்(பேரத்தை, கல்யாணத்தை அல்ல)" னு நாக் கூசாம கேட்கிறாங்களே ஒரு பெண், அது தன்னோட அம்மாதா என்றாலும் அத பார்த்துக்கிட்டு மண்ணுமாதிறி உட்காருந்துட்டு இருக்கானே அந்த இன்ஜினேயர்(பொறியியல்)மாப்பிள்ளை இவங்க தான் அந்த சிக்கல், இந்த மாதிறி பிறவிகளுக்கு நன் கேட்கிற ஒரே கேள்வி, "மனித மலம் திங்குறதுனால சீ!னு நீங்க ஒதுங்கிற பன்னிக் கூட இப்படி தோலோட நிறத்த பார்த்து தன்னோட துணையே தேர்தெடுக்கிறதுயில்ல? மெத்த படிச்ச நீங்கயெல்லாம் அப்படி செய்றீங்களே? அப்ப நீங்க பன்னிக்கு கீழவா? நீங்களே சொல்லுங்க?
சும்மா கோர்ட்டும் சூட்டும் போடறதுனாலயோ, இல்ல உயர்தர புடவை கேட்டுறதுனாலயோ நாம நாகரீக மனிதர்களாக் ஆகிடறதுயில்ல, எந்த நிற பேதம்யில்லாம அவளையோ/அவனையோ சக மனிதனா பார்கிறதுல தான்யிருக்கு நம்முடைய நாகரீகம், இல்லை இன்னும் வெள்ளைத் தோல் தான் அழகுனு நினைச்சீங்கனா, நீங்கள எல்லாரும் பனிக்கரடிய தான் கட்டிக்கனும் என்ன தயாரா?
அகத்தின் அழகு தான் முகத்தின் அழகு! உள்ளம் கருப்பாயிருந்து வெளிய வெள்ளையாயிருக்கிறதுல பெரிய வித்தியாசமில்லை!!!
கட்டி வைரம் கருப்பு தான், கார்மேகமும் கருப்பு தான், ரோம பேர்ரசர்களை கட்டிப்போட்ட கிளியோபாட்ரா கருப்பு தான், கருப்பு கேவலமில்லை கருப்பு தாழ்வானதுயில்லை, உண்மை இது தான், இந்த உலகத்தில் இயற்கையை பொறுத்தவரைக்கும் எதுவுமே கேவலம்யில்லை, நம்ம அத கேவலமா பார்க்காத/நினைக்காத வரைக்கும்...
வெயிலும் அப்படித்தான், மழையை போல வெயிலும் அழகானது, அருமையானது இன்றிமையாதது , மழைய காதலிக்கிறது போல வெயிலையும் காதலிக்கலாம், எந்த பேதமும் பார்க்காத மனசுயிருந்தா? எனக்குயிருக்கு நான் வெயில் காதலன் தான், நீங்க???
என்றும் வெயிலின் காதலனாய்,
தோழர் மோகன்...
பி.கு: இந்த பதிவை எழுத எனை தூண்டிய தோழி சந்தனமுல்லையின் பதிவு இங்கே அந்த பதிவையும் படியுங்கள்...