உன் விழிகள்
விழிகளெனும் விசித்திரங்கள்
தாக்கியப் பொழுது
வார்த்தைகள் வசப்படவில்லை
உவமைகள் உரியதாயில்லை
ஆனால்
உள் உணர்வோ
கவி செய்கிறது
கற்பனை கொள்கிறது,
சங்கீதம் பாடுகிறது,
சங்கடங்கள் தருகிறது
ஏய் தங்கதழலே,
உன் விழிகளெனும்:
வேல் அம்புகள்,
செய்யும் காயம்,
ரத்தம் சிந்தும் ரணங்களல்ல...
ரகசியமாய் தாக்கும்
சந்தோச கஷ்டங்கள்...
மினசாரமும் உன் விழியும்
சொந்தங்களோ?
ஒருமுறை தாக்கினாலும்
உயிர் கரைக்கிறது...
ஏய் ஊமைபெண்ணே,
உன் விழிகள் பேசுவதால்
வாய் திறக்க மாட்டாயோ???
ஏய் ரதியே,
விழிகளோ அவைகள்
சொல்! உண்மை சொல்
விழிகளா அவைகள்
இல்லை இல்லை
விண்மீன்கள் அவைகள்
வாள் சண்டைகற்ற
வைர துண்டுகள் அவைகள்;
கற்பனை தூண்டும்
காந்தங்கள் அவைகள்;
அழகின் கருவறைகள் அவைகள்;
அதிசியத்தின் அதிசியங்கள் அவைகள்;
உதிரம் உதிராவிட்டாலும்
உள்ளத்தை கசக்கி பிழியும்
உத்திக் கற்ற உண்மை
விழிமலர்கள் அவைகள்;
தென்றலின் தீண்டலில்
பொசுக்கென்று
பூத்த மல்லிகை பூவின்
இதழ்கள் உன் விழிமடல்கள்....
கருணையும் கர்வமும்
கலந்த பொண்மணிகள்
உன் கண்மணிகள்;
என்ன செய்தான்
இல்லை
எப்படி செய்தான்
பிரம்மன்
இப்படி ஓர் பேரழகு
உனக்கு மட்டும்...
உன் விழியின்
ஒவ்வொரு அணுவையும்
என் உயிராகவே
உணர்கிறேன்...
இப்போது அல்ல
எப்போதும் சொல்வேன் கண்ணே
அவைகள் விழிகளல்ல
விழிகளே அல்ல...
அருமையான கவிதை பதிவு...
உங்களுக்கு ஓட்டு போட்டாச்சு..
தமிளிஷில் என் பதிவும் வந்திருக்கிறது அதற்கும் ஒரு ஓட்டு போடுங்கள்....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_08.html
வருகைக்கு நன்றி தோழர் rk guru, கண்டிப்பாக உங்கள் பதிவை படிக்கிறேன்...
//மினசாரமும் உன் விழியும்
சொந்தங்களோ?
ஒருமுறை தாக்கினாலும்
உயிர் கரைக்கிறது...//நன்றாக இருக்கிறது... தொடர்ந்து எழுதுங்கள்... புதிய வாழ்வு எப்படி இருக்கிறது?
வருகைக்கு நன்றி தோழர், எனக்கும் மிகவும் பிடித்த வரிகள் அவைகள்... நீங்கள் அப்படி என்றாவது உணர்ந்தது உண்டா?
கண்டிப்பாக தொடர்ந்து எழுதுகிறேன்... நீங்களும் தொடர்ந்து வாருங்கள், பின்னோட்டம் இடுங்கள்...
புதிய வாழ்க்கை மிகவும் அருமையாகயிருக்கிறது தோழரே, உங்கள் பரிவுக்கு நன்றி, பதிவுலகில் எனக்கு பதிவுகளால் பரிச்சியம் ஆகும் முதல் தோழர் நீங்கள் தான், மிக்க மகிழ்ச்சி:) உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? நீங்களும் மென்பொருள் நிறுவனத்தில் தான் இருக்கிறீர்களா?