பதிவுலகமே! வாங்க கொண்டாடுவோம் பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாளை!!!
இன்று வாலிவ கூட்டத்தையே, இரண்டாக பிரிக்கலாம், கவிதை எழுதுபவர்கள் அல்லது கவிதை எழுதாதவர்கள், இன்னொரு வகையும் உண்டு அடுத்தவர்கள் கவிதையை தனதென்று சொல்லி கொள்ளும் இரவல் கவிஞகர்கள், இவர்களை காட்டிலும் ஒரு புதுவகையான ஒரு கூட்டம் இருக்கிறது, தனது மனிததன்மையை இழந்துவிட்டு வெறும் இயந்திரங்களாக இயங்க பழகிவிட்டவர்கள், கவிதைகளை வைத்து என்ன காசு பார்க்கமுடியும் என்னும் அளவுக்கு அவர்களின் மனம் சுரிங்கிபோயிருக்கிற்து.... அவர்களை விட்டுவிட்டு பார்த்தால் நாம் எல்லாருமே கவிதையை சந்தித்திருக்கிறோம்... எல்லோர் மனதுக்குள்ளும் எங்கோ மூலையில் ஒரு கவிதை ஒட்டிக்கொண்டேயிருக்கிறது...
எனது மனதுக்குள்ளும் நிறைய கவிதைகள் உயிர்ப்புடன் இருக்கின்றன. அவைகளில் புரட்சி கவி பாரதிதாசரின் கவிதைகள் அதிகம்.
ஒவ்வொரு முறை அவரது கவிதைகளை படிக்கும் போதும் நான் இன்னொரு உலகத்தில் இருப்பதாகவே உணர்கிறேன்... அவரின் காதல் கவிதைகளை வாசிக்கும் போது மதுவுண்ட வண்டு போல் சொக்கி போயிருக்கிறேன்... அவரின் புரட்சி கவிதைகளை வாசிக்கும் போது நெஞ்சில் தீச்சுடர் எரிவதை உணர்ந்திருக்கிறேன்... அவர் தமிழ் பற்றி பாடி உருகும் ஒவ்வொரு முறையும், உலகத்தீரே! என் தாய் தமிழின் தேன் சுவை புரிகிறதா? என்று கர்வத்தோடு கேட்டிருக்கிறேன்...
கடவுள், மதம், சாதி, ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம் போனற சமுக அவலங்களை தன் கவிதை என்ற சாட்டைக்கொண்டு ஓட ஓட விரட்டிய, சுயமரியாதையையும் தமிழர்விடுதலை எழுச்சியையும் எல்லோர் நெஞ்சங்களிலும் ஊட்டிய, ஒரு உன்னத மனிதனை ஈன்று எடுத்த தமிழினத்தில் நானும் ஒருவன் என்று மார்தட்டிக்கொண்டிருக்கிறேன்...
இப்படி பாவேந்தர் பற்றி எண்ணற்ற உணர்வுகள் உங்களுக்கும் இருக்கும், நம்மில் பலரும் அவர் கவிதைகளின் சுவையில் கரைந்து போனவர்கள் தாம், ஆதலால் பதிவுலக தோழி/தோழர்களே உங்களிடம் தமிழன் என்ற உரிமையோடு ஒரு விண்ணப்பம் வைக்கிறேன், வருகிற 29 ஆம் நாள்(வியாழன் கிழமை) புரட்சிகவி பாரதிதாசரின் 119 வது பிறந்தநாள், அந் நாளை முன்னிட்டு, அவர் கவிதைகளை பாடி, அவர் சிந்தனைகளை பரிமாறி, சுயமரியாதை எண்ணங்கள் பரப்பி, அவரது பிறந்தநாளை கொண்டாடுவோம், உங்களின் வலைப்பூவில் உங்களுக்கு பிடித்த அவரது கவிதைகளையோ, சிந்தனைகளையோ பதியுங்கள்...
இது அந்த உன்னத கலைஞனுக்கு நினைவஞ்சலியாய் இருக்கட்டும், நம் தமிழின் சுவையும் எட்டு திக்கும் பரவட்டும்....
இந்த முயற்ச்சி பாவேந்தருக்காக மட்டுமல்ல நம் தமிழுக்காகவும்!!!
என்றும் பாவேந்தரின் கவிரசிகன்,
தமிழின் காதலன்,
மோகன்...