காரணம் 1: “எனது சுயநலமும், இந்தியாவின் களவாணித்தனமும்”
இந்த தொடர் பதிவுகளில், முதல் பதவில் நான் ஒப்புக்கொண்டது போல் எனது சிரிப்பை எந்த காரணத்தினால் தொலைத்தேன் என்று யோசித்தபோது, முதல் காரணமாய் எனக்கு தோன்றியது “எனது சுயநலமும், இந்தியாவின் களவாணித்தனமும்” தான்…
தலைப்பே வில்லங்காமயிருக்கே… கண்டிப்பா இது பிரிவிணைவாதம்தான் அல்லது இவன் ஒரு தேசதுரோகி என்று முடிவுகட்டியவர்கள், அப்படியே இந்த வலை சன்னலை மூடிவிட்டு உங்கள் தேசவெறியை மன்னிக்க தேசபக்தியை காட்டவே கண்டுபிடிக்கபட்ட கிரிக்கேட் விளையாட்டையோ? திரையில் மட்டுமே நாட்டுக்காக உயிரை குடுக்கும் உங்கள் கதாநாயகரகளையோ? ரசிக்க சென்றுவிடும் படி கேட்டுக்கொள்கிறேன்….
இந்த முன்னெச்சரிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் பதிவை படித்துவிட்டு குத்துது குடையுது என்றால் நான் பொறுப்பள்ள..
முதலில் ஒன்றை தெளிவுபடுத்துகிறேன், இந்த நிலபரப்பில் அல்லது இந்த நாட்டில் பிறந்திருக்கிறேன், இந்த அரசிடமிருந்து தான் எனது கல்வி, உணவு, உறவிடம் மற்றும் உடையை, எனதோ அல்லது எனது பெற்றோரின் உழைப்புக்கொண்டு பெற்றுயிருக்கிறேன் ஆதலால் இது என் தாய் நாடு நான் விரும்பாவிட்டாலும், ஆனால் இந்த ஒரு காரணத்திற்காகவே நான் இந்தியாவை விமர்சிக்கவே கூடாது என்று சொன்னாலோ, இந்தியா தனது பிராந்திய வல்லாதிக்க ஆசைக்காகவும், இந்திய மற்றும் பன்னாட்டு நிருவனங்களுக்காகவும் “யாரை வேண்டுமானாலும் கொன்றுகுவிக்கலாம்(தனது சொந்த குடிமகன்கள் உட்பட), அவர்களின் நிலங்களிலிருந்து விரட்டி அடிக்கலாம்” அல்லது “இனப்படுகொலை செய்ய துணைபோகலாம்”, அதை நான் வேடிக்கைமட்டுமே பார்க்கவேண்டும் என்று சொன்னால், கண்டிப்பாக என்னால் அப்படியிருக்க முடியாது, நான் விமர்சிப்பேன், ஒருவேளை இந்தியாவின் அரசையும், அரசு இயந்திரங்களையும் எதிர்த்தால் மட்டுமே நீதியென்றால் அதற்கும் தயார் நான்…
உடனே வாந்தியெடுக்காதீர்கள் நான் தேசதுரோகியென்று, இல்லை நீ அப்படித்தான் என்றால் எனக்கு ஒரு பிரச்சனையுமில்லை….
சரியா? அப்படி எங்க இந்தியா அதுவும் 2020 ல் வல்லரசா ஆகப்பொற இந்தியாவுக்கும் உனக்கும் என்ன தான் பிரச்சனை? னு கேட்கிறீங்களா?
அந்த வல்லரசு கனவு தான் எனக்கு பயமே, ஒவ்வொரு வருசமும் பட்டினியாலும், போதிய ஊட்டசத்து குறைவினாலும் சாகிற குழந்தைகளுக்கு ஊட்டசத்துள்ள உணவு கூட குடுக்க முடியாத இந்தியா, எல்லா இந்தியர்களுக்கும் பேதமில்லாத ஒரே கொப்பையில் டீ குடிக்க வைக்கமுடியாத சாதி பார்க்கிற இந்தியா, விவசாய்கள் மாங்கொட்டையை அரைச்சு திண்ணு, வயிறு வீங்கி, சாகிற அளவுக்கு பசுமை புரட்சி செஞ்ச, செய்ற இந்தியா, கடவுள் பெயராலும், மதத்தின் பெயராலும் நித்தம் நித்தம் சிறுபான்மை மக்களை கொல்ற பாசிஸ்ட்டுகளை ஒன்னுமே செய்யாத இந்தியா…. எதுக்கு வல்லரசு ஆகனும்?
யோவ்! இதெல்லாம் இன்னைக்கு நேத்துக்கு இருக்கிற பிரச்சனையில்ல ரொம்ப காலமா இருக்குது, உன்னோட சிரிப்புக்கும் இந்தியாவுக்கும் என்ன பிரச்சனைனு மட்டும் சொல்லு? னு கோபடுறீங்களா?
சரிவிடுங்க! நாமோ, நம்மள சார்ந்தவங்களோ பாதிப்படையாதவரைக்கும் எதுவுமே பிரச்சனையில்லை, எல்லாமே ஒரு செய்தி தான்….
நீ யோக்கியன் தான்! பிரச்சனையை சொல்லு? னு திரும்பவும் கோபடுறீங்களா?
ஐயோ! நான் எப்படி யோக்கியன் ஆவேன்? எனது உயிரான தமிழ் மொழியை தாய் மொழியாய் பேசுற, என் பழக்கவழக்கங்களையும், பண்பாட்டையும் கொண்டுள்ள எமது தொப்புள்கொடி உறவுகளான தமிழீழ தமிழர்களை கொத்து கொத்தாய் கொன்று குவித்தார்களே கொத்து குண்டுகளால், தாய் பார்க்கவே குழந்தையின் தலையை சிதைத்தார்களே அந்த சிங்கள் வெறியர்கள், அம்மணமாய் எமது சகோதர, சகோதிரிகளை ஓட விட்டு பின் துப்பாக்கிகளால் சுட்டு சுட்டு ஏதோ கேளிக்கை விளையாட்டு போ எக்காளம்யிட்டார்களே அந்த ஈவு இரக்கமற்றவர்கள், சுதந்திறத்திற்காகவும், சுயநிர்ண உரிமைகாகவும் வீருகொண்டு போராடிய தமிழிணத்தை முள் வேளிக்குள் அடைத்து பிச்சையெடுக்கும் படி மாற்றிவைத்திருக்கானே அந்த புத்தனை வணங்கும் பாசிஸ்ட் ராஜப்க்சே… இப்படி என் கண்ணெதிரே நடக்கும் அத்தனையும் வெறுமனே பார்த்துக்கொண்டு ஒண்ணுமே செய்யாத நான் எப்படி யோக்கியனாவேன். என் இனம் என்பதை தவிர்த்துவிட்டு பார்த்தாலும் போன அத்தனை உயிர்களும் மனிதர்கள் தானே…அதற்காகவாது வீதியிறங்கி போராடியிருக்க வேண்டாமா? குறைந்த பட்சம் ஒரு கண்டன போராட்டத்தில் கூட கலந்து கொள்ளவில்லையே,வெறும் மெளணங்களோடும், கண்ணீரோடும் அத்தனையையும் வேடிக்கை மட்டுமே பார்த்திருக்கிறேனே, இது பச்சை சுயநலம் தானே…
சரி புரியிது உன்னோட வேதனை! ஆன இதற்கு இந்தியா என்ன பண்ண முடியும்?
வாங்க! இந்த கேள்விக்காக தான் காத்திட்டுயிருந்தேன், நான் சுயநலவாதி என்னை விடுங்க, ஆனா நான் பிறந்த அதே தமிழ்நாட்டில் தன் உடல் கருக்கி போராட்ட சுடர் எற்றினானே தியாகி முத்துகுமார் அவனது தற்கொடைக்கும், அவனது இறுதி கடிதத்தில் அவன் கேட்ட கேள்விகளுக்கு “ராஜீவ்காந்தியைக் கொன்றார்கள் என்ற சொத்தை வாதத்தை வைத்துக்கொண்டு, சில தனிநபர்களின் பலிவாங்கல் சுயநல நோக்கங்களுக்காக ஒரு பெரும் மக்கள் சமூகத்தையே கொன்று குவிக்கத் துடிக்கிறது இந்திய அதிகார வர்க்கம்”
“விடுதலைப்புலிகள் தீவிரவாதிகள் அதனால்தான் சண்டை என்கிறது. ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்கிறது. ராஜீவ்காந்தி ஒரு கவுன்சிலரோ, மாவட்டச் செயலாளரோ அல்ல. அவரை ஏற்கனவேஒருமுறை கொலை செய்யும் முயற்சி இலங்கையில் நடைபெற்றிருந்த போதும் அந்தக் கொலைகாரன் விசாரிக்கப்படவில்லை. ராஜீவ்காந்தியைக் கொல்ல முயன்ற அந்த சிங்கள வீரன் ஆகியோரையும் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இணைத்துக்கொண்டு மறுபடியும் விசாரிக்கப்பட வேண்டும் என்பது என் கோரிக்கைகளில் ஒன்று” இந்தியாவிடம் பதில் என்ன?
முத்துகுமாரை தொடர்ந்து எத்தனை உயிர்கள் தியாகம் செய்யப்பட்டன, என்ன செய்தீர்கள் நீங்கள்? நான் சொல்லட்டுமா?
மானவர்கள் போராடினார்கள், கல்லூரிகளுக்கு விடுமுறைவிட்டீர்கள்…
வக்கீல்கள் போராடினார்கள், நீதிமன்றத்தை புறக்கணித்தார்கள், அவர்கள் அனைவர் மண்டையும் நீதிமன்றத்திற்குள்ளேயே உடைத்தீர்கள்…
அனைத்து சட்டமன்ற உறிப்பினர்களும் ஒன்றுகூடி இரண்டு முறை தீர்மானம் போட்டு டெல்லி பாராளுமன்றத்திற்கு அனுப்பபட்டதே என்ன கிழித்தீர்கள்…
பிரணாப்முகர்ஜியையும், கிருஷ்ணாவையும் மரியாதை நிமித்தமாக கொழும்புக்கு பயணம் போகச்சொன்னீர்கள், அவர்களும் போயி டீ,காபி குடித்துவிட்டு ராஜபக்சேவின் நலம் விசாரித்துவிட்டு வந்தார்கள், சீ!!! கேவலமா இல்லையா?
இலங்கைக்கு ராணுவ தளவாடங்களை எமது தமிழ் மண்ணில் முழமாகவே எமது உறவுகளை அழிக்க எடுத்து சென்றீர்கள்…
இது எல்லாவற்றுக்கும் பரிசாக பொன்சேகாவிடமோ, ராஜ்பக்சேவிடமோ, மட்டும் அல்லாமல் இலங்கையின் நாடாளுமன்றத்திலே சிங்கள அரசின் பாதுகாப்புதுறை அமைச்சரே,” இந்திய அரசின் முழுமையான துணைதரவை(ஆதரவை)ப் பெற்ற பின்னரே தாங்கள் போரை முன்னெடுத்தோம்” மற்றும் “விடுதலை புலிகளுக்கு எதிரான இந்த போரில் இந்தியா உதவவில்லையென்றால் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றுயிருக்க முடியாது” JAI HO INDIA என்று பாராட்டு பத்திறமே பெற்றுவிற்றீர்கள்…
கேவலமாக இல்லையா? உலக நாடுகளே ஒன்று கூடி இலங்கை அரசையும், அதன் அதிபரையும் குற்றவாளி கூண்டில் ஏற்ற முடிவு பண்ண போது, நீங்களே பகைவர்கள் என்று ஒப்புக்கொண்ட பாகிஸ்தானுடனும், சைனாவுடனும் கைகோர்த்து இலங்கையை ஐ.நா வில் காபாற்றீனிர்களே, இதற்கு என்ன அர்த்தம்?
உங்கள் பிராந்திய வல்லாதிக்கத்திற்காகவும், வெளியுறவு கொள்கை எனும் வெங்காயத்திற்காகவும் ஒரு இனத்தையே அழித்துவிட்டீர்களே!!!
உங்களுக்கு மானுட உணரவே கிடையாதா?
சிறிதளவேனும் குற்றயுணர்ச்சி இல்லையா?
உங்களுக்கு எப்படியிருக்கும்?
இது வரை 300க்கு மேற்பட்ட தமிழக மீனவர்கள்(இந்தியர்கள்) சிங்கள ராணுவத்தால் கொள்ளப்பட்டுள்ளார்கள் ஆனால் நீங்கள் இப்போதும் ராஜபக்சேவோடு பல் இளிக்கிறீர்கள், சைனாவையோ, பாக்கிஸ்தானையோ அனுமதிக்காதே, நாங்கள் 500 கோடி இல்லை 1000 கோடி தருகிறோம் என்று இலங்கையிடம் கெஞ்சி கூத்தாடுகிறிர்கள்…கயவர்கள் நீங்கள்…
என்ன பேச்சே காணோம், ICC தரவரிசை (RANK) பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவா இப்படியெல்லாம் பண்ணுதுனு கேட்கிற அறிவாளி அல்லது அப்பாவி இந்தியர்களே, உண்மை இதுதான், இப்படி தான் இந்தியா, வரலாற்றில் மிகப்பெரிய பிழையைச் செய்துவிட்டு , ஒரு இனப்படுகொலைக்கு மிகப்பெரிய காரணமாகி இரத்தகறையோடு நிக்கிறது உங்கள் இந்தியா…
இப்போது சொல்லுங்கள் தோழிகளே, தோழர்களே…
இந்தியா பண்ணது, பண்ணிக்கொண்டுயிருப்பது களவாணித்தனம் தானே?
அல்லது
ஒரு தமிழனாய் இந்தியாவில் இருக்கும் வரை நான் எப்படி சிரிப்பது???
சிரிப்பை தேடும்,
சிரிப்பை தொலைத்தவன்…
(அல்லது)
சிரிப்பை தொலைத்தவர்கள்…
தேடல் தொடரும்….
பின் குறிப்பு:
இந்த பதிவு எழுத உதவியாயிருந்த பதிவுகளும்,வலைப்பூக்களும் உங்கள் பார்வைக்காக,
1) நான் தமிழனா? இந்தியனா? - கை.அறிவழகன்
Adanga tamila ungalin unarvu purigirathu, India done historic blunder regarding Srilanka.. I really feel for you guys. But tamils will raise to the occasion once again and claim their rights. I was waiting for the day to happen!!!!!
வருகைக்கு நன்றி,
//India done historic blunder regarding Srilanka.. I really feel for you guys. But tamils will raise to the occasion once again and claim their rights. I was waiting for the day to happen!!!!!//
உங்கள் நம்பிக்கையான வார்த்தைகளுக்கு நன்றி,ஆனாலும் என் நெஞ்சில் ஒரு சூன்ய அமைதியும், 6.5 கொடி தமிழர்கள் இருந்தும் ஒன்னுமே பண்ணவில்லையே என்ற குற்றயுணர்ச்சியும் அப்படியே தான் இருக்கிறது... ஆனால் உலகளாவிய தமிழர்களின் போராட்டங்கள் நம்பிக்கை தருகிறது அது போல் விரைவில் தமிழகத்திலும் சந்தர்ப்பவாதிகளின் கைகளில் சிக்காமல் தமிழீழத்திற்காக மாபெரும் போராட்ட களம் உருவாக வேண்டும், அதில் என் பங்கு இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்...
தோழர் மோகன்,
இந்தியா இன்னும் ஈழத்தமிழர்களின் கழுத்தறுக்க என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு சில உதாரணங்கள் இந்த கட்டுரைகள். முடிந்தால் படித்துப்பாருங்கள்.
http://www.tamilcanadian.com/tamil/index.php?cat=44&id=810
http://www.tamilcanadian.com/tamil/index.php?cat=7&id=801