
“ஐயோ!!!
எங்களை கொன்று கொன்று
குவிக்கிறார்களே,
இதை கேட்க எந்த நாதியுமில்லையா???”
“ஐயோ!!!
என் தாய் பார்க்க
என் தந்தை பார்க்க
என் தமையன் பார்க்க
என் மார்பகங்களை
இச்சைக் கொண்டு
கசக்கி பிழியும்
இந்த சிங்களவனின்
கை அறுக்க யாருமில்லையா???”
“ஐயகோ!!!
என் கண்ணெதிரே
கொத்துக் குண்டுகளால்
என் ஒரு வயது கண்மணியின்
உடல் சிதைத்த
இந்த இனப்படுகொலைகாரர்களை
இன்னும் ஒன்றும் செய்யாது
வேடிக்கைப் பார்க்கும்
நீங்களும் மனிதர்கள்தானா???”
“ஐயோ!!!
எமக்காகவும்,
எமது மண்ணுக்காகவும்,
எமது மானத்திற்காகவும்
உயிர் நீத்த
பெண்புலிகளின் பிணங்களை
ஆடை அகற்றி, புணர்ந்து
அவர்களின் யோனிகளில்
குண்டு வைத்துத் தகர்த்த
சிங்கள வெறி நாய்களின்
தலை சீவ எவருக்கும் கைகள் இல்லையா?
குறைந்தபட்சம்
இந்த அரச பயங்கரவாதத்தைக்
கேட்க கூட நாக்கில்லையா???”
“ஐயகோ!!!
எங்கள் காவல் தெய்வங்களை
பயங்கரவாதிகள் என்று பட்டம் கட்டி,
தடைசெய்ய பட்ட
ரசாயன குண்டுகள் வீசி,
கொன்று குவித்த பின்,
இரும்பு கம்பி வேலிக்குள்
ஒரு குவளை தண்ணீருக்காகவும்,
ஒரு கை அரிசி சோற்றுக்காகவும்,
எம்மை சிங்களவனிடம்
கையேந்தும் படி செய்துவிட்ட
சிங்களப் பேரினவாதத்தையும்,
அதன் தலைவர்களையும்,
குற்றவாளி கூண்டில் ஏற்ற
ஒருவர் கூடயில்லையா???”
இப்படி நித்தமும்,
என் செவிப்பறையில்
தமிழீழத் தமிழர்களின் அழுகுரல்கள்
கேட்டுக் கொண்டேயிருக்கின்றன…
என் சக தாயக தமிழர்களே!
என் சக மனிதர்களே!
என்ன பதில் வைத்திருக்கிறிர்கள் அவர்களின் அழுகுரலுக்கு?
எப்படி சமாதானம் சொல்லப் போகிறிர்கள் அவர்களின் துயரங்களுக்கு?
எது கொடுத்து நிறை செய்வீர்கள் அவர்களின் இழப்புகளுக்கு?
உங்கள் சட்டைப் பிடித்துக் கேட்கிறேன்?
சொல்லுங்கள்???
இதோ,
இன்னோரு அறைகூவல்
கண்ணீரோடும்,
கடைசி நம்பிக்கைகளோடும்,
அதே திசையிலிருந்து……….
“எம் தாயக தமிழக உறவுகளே,
மானுடம் போற்றும் மனிதர்களே,
நாங்கள் தமிழர்களாய் பிறந்தது தவிர
வேறெந்த தவறும் செய்யவில்லை…
ஆதலால்,
நீங்கள் இருக்கும் திசைநோக்கி
உயிர் உருக கேட்கின்றோம்,
எங்கள் இனம் காக்க,
எங்கள் உயிர் காக்க,
எங்கள் மானம் காக்க,
இனியேனும்
எமக்காக ஏதாவது செய்யுங்களேன்!!!”
இப்படிக்கு,
இத்தனை அழுகுரல்கள் கேட்டும் ஒன்றும் செய்ய இயலாத கோபங்களோடும்,
இத்தனை பெரிய இனப்படுகொலையை வேடிக்கை மட்டுமே பார்த்த
குற்ற உணர்ச்சிகளோடும்,
ஒரு அடிமைத் தமிழன்…