Unknown


தனியாய் தனிமையில் சிந்திக்கிறேன்...

தனிமை இனிமையானதா இல்லை கொடுமையானதா?
எனக்கென்னவோ? நமக்கெல்லாம் பழக்கமானது
என்றே தோன்றுகிறது....

ஏன் இப்படிப் பட்ட வாழ்க்கை?

ஏன் இந்த தொலைவு, நமக்கும், அனைத்துக்கும்?

நமக்கு என்ன இல்லை?
அல்லது
நமக்கு என்ன இருக்கிறது?

இநத வாழ்க்கை போலியா? உண்மையா?

பணம் மட்டுமே வாழ்க்கையா?
அல்லது
பணத்துக்குகாக மட்டுமே வாழ்க்கையா?

நிம்மதி என்பது,
தேடிச்செல்வதா?
நாடிவருவதா?
இல்லை
நாமே முடிவு செய்வதா?

உங்கள் அனைவருக்கும் அந்த ஒன்று சரி
ஆனால் எனக்கு அது தவறு...
அவ்வளவு தானே
இதற்கு எதற்கு என்னை தனிமைபடுத்தினீர்கள்?

நான் உங்களையும் மாற்றிவிடுவேன் என்ற பயமா?
இல்லை
நான் உங்களைப்போல் மாறமறுக்கிறேன் என்ற திமிரா?

இந்த தனிமை
உருவானதா?
உருவாக்கபட்டதா?

என்னிடம் கேள்விகள்
முழுவதும் கேள்விகளே....
உங்களிடமாவது
பதில்கள் உண்டா?

ஒன்றை மறந்தேன்
மனிதன் தானே பணத்தை படைத்தான்
மாற்றியில்லையே???

                கேள்விகளோடும்,
                தனிமையோடும்,
             ஒரு தனி மனிதன்....
7 Responses
  1. பெயரில்லா Says:

    பணம் தானே வாழ்க்கையை தீர்மானிக்கிறது.என்ன பேசி என்ன.


  2. Unknown Says:

    வருகைக்கு நன்றி... பணம் முக்கியம் என்பதில் ஐயமில்லை ஆனால் அது மட்டுமே முக்கியம் அது இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று நினைக்கும் இன்றைய பொதுபுத்தியை தான் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறேன்...வெட்டி பேச்சு எதற்கும் உதவாது தான் ஆனால் ஆரோக்கியமான விவாதம், அதனிலிருந்து உருவாகும் மாற்று சிந்தனை கண்டிப்பாக வீண் அல்ல...இதில் உங்கள் கருத்தென்ன


  3. ungkal thanimai thaniththiruvaaka amainthaal ellam viliththuk kollum . so thanimai thaniththuvamaaka sinthippom. anaiththum vasappatum/ nalla pathivu.


  4. People make you alone in two occasions. 1) When you do the things they dont want to do.
    2) When you do the things which they cant do.


  5. Unknown Says:

    மதுரை சரவணண்,ஆதி வருகைக்கு நன்றி...மதுரை சரவணண் உங்கள் பின்னோட்டத்துக்கு நன்றி ஆனால் உங்கள் கருத்தை என்னால் முழுதும் புரிந்துகொள்ள முடியவில்லை,மன்னிக்க..முடிந்தால் தமிழில் மருமுறை பின்னோட்டம் ஈடுக...பதிவை பற்றி உங்கள் கருத்தை பதிந்ததுக்கு மிக்க நன்றி...
    ஆதி ஒத்துக்கொள்கிறேன், அந்த ஈரு தருணங்களிலும் தனிமை உருவாக்கபடுகிறது..எனது கேள்வி ஏன் என்பதே?எதற்கு அந்த பொதுபுத்தி? ஏன் ஒரு சிரு மாற்றத்தைக்கூட எற்க முடியவில்லை நம்மால்? எதாவது ஒரு காரணம் கற்பித்து நாம் ஏன் மாற்றத்திலிருந்து விலகுகிறோம்? திரும்பும் என்னிடம் கேள்விகளே?....


  6. "ஒன்றை மறந்தேன்
    மனிதன் தானே பணத்தை படைத்தான்
    மாற்றியில்லையே???" -அருமையான வரிகள் தோழரே...!!!


  7. Unknown Says:

    வருகைக்கு நன்றி தோழரே, எனக்குமே பிடித்த வரிகள் அவைகள், மிகவும் ஆழமாய் சிந்திக்கவேண்டிய வரிகள்...


Related Posts with Thumbnails

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner