என் ராஜகுமாரியே,
அதை,
மேலே தூக்கியெரிந்து
பின்
கைதட்டி விட்டு, பிடிக்கிறாய்...
அதை,
மெல்லமாகவும்,
அழுத்தமாகவும்
அமுக்கி ஆனந்தம் கொள்கிறாய்...
அதை,
விட்டு வீசி எறிவது போல்,
நாடகம் செய்கிறாய்,
அதை
உண்மையென நம்பி
பதறி, இடறி விழுகிறேன்....
அதை
பார்த்த மாத்திரத்தில்
மொத்த பல்லும் தெரிய
முத்து முத்தாய் சிரிக்கிறாய்....
நான் என் மீது படிந்த
தூசிதட்டி; சின்னதாய் முறைக்கையில்....
முகம் சுருங்கி,
மழலை போல்
மன்னிப்புக் கேட்கிறாய்,
அதை கையில் பிடித்தப் படியே!!!
நானும் மன்னித்து கொண்டே எழுகிறேன்....
நீயோ?
உன் முதுகு காட்டிக்கொண்டே
கலைமானாய் துள்ளி துள்ளி
அதை,
உன் இரு கைக்கும்
பந்தாடியபடி பவணிபோகிறாய்....
எனக்கு தெரியும்,
அதை,
எப்படியும் சிதைக்கமாட்டாய்
சின்னாபின்னாமாக்கமாட்டாய்,
சிற்றோடையிலும் வீசியெறியமாட்டாய்...
என்று...
ஆனால் தூயவளே,
உண்மை சொல்
ஏன் “அதோடு” இப்படி விளையாடுகிறாய்
அது....
நான் உனக்கு தந்த
“என் இதயம்” என்பதனால?
இப்படிக்கு,
இதயம் சமர்பித்த,
இதயமற்ற,
உன் ராஜகுமாரன்
(மோகன்)