Unknown
இதோ  இந்த நொடியில் கூட பல கோடி மனிதர்கள் புன்னகைக்கக்கூடும், அது காரணமேயில்லாதாதகவும் இருக்கக்கூடும், காரணம் கருதியும் இருக்கக்கூடும், சிரிக்க வேண்டுமே என்று சிரிக்கவும் வாய்ப்பிருக்கிறது, சிரிக்கவே கூடாதென்று வாய்பொத்தி, பின்பு முடியாமல் விழுந்து, புரண்டு, கண்ணில் நீர் வர சிரிக்கும் சூழலும் அமையக்கூடும், எப்படியோ நம்மில் யாரோ ஒருவரோ, ஒரு கூட்டமோ சிரித்துக்கொண்டே இருக்கிறது எப்போதும்….


நாம் எல்லோருமே மகிழ்ச்சியாய் சிரித்துக்கொண்டே இருக்கவே நினைக்கிறோம், ஆசைப்படுகிறோம், ஏதாவது செய்து எல்லோரையும் சிரிக்கவைக்கே முயற்சிக்கிறோம், நம் முயற்சியில் நமக்கு பிடித்தவர்கள் சிரித்துவிட்டால் துள்ளிக்குதிக்கிறோம், உலகத்தையே மறந்து போகிறோம், அந்த சில நொடிகள் தேவனாகிறோம் அல்லது தேவதையாகிறோம். நமக்கு புன்னைகையில்லாத உலகத்தை கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது, பொதுவாக புன்னகையில்லாமல் உம் என்று இருக்கும் மனிதர்களை நாம் ஏற்றுக்கொள்வதில்லை….இப்படி புன்னகைக்கு நிறையவே நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.


என் கேள்வி உண்மையிலே புன்னகை அவ்வளவு முக்கியமா?
நம்மை சுற்றி வாழும் எந்த விலங்கும் எப்போதும் புன்னகை செய்வதில்லை அல்லது புன்னகை என்ற உணர்வே அவைகளுக்கு இருப்பதில்லை…
அப்படியென்றால் புன்னகை முக்கியமில்லையா?

அட போடா! பைத்தியக்காரா! நாம் மனிதர்கள் அவைகள் விலங்கள் அதனால் தான் எப்படி.. என்கிறிர்களா…
அறிவாளிகளே! புரிந்துக்கொள்ளுங்கள், மனிதனும் விலங்கே, நாமும் அவைகளிள் ஒரு கூட்டமே…
போடா கிருக்கு!!! இந்த பூமி எங்களுக்காக கடவுள் படைத்தது, அனைத்து உயிரினங்களும் எங்களுக்கு சேவைச்செய்யவே படைக்கப்பட்டன என்று மல்லுக்கு வரும் கடவுள் நம்பிக்கையாளர்களே, பொறுங்கள், எப்படியும் நீங்கள் இந்த பூமியை அழித்தால் உங்கள் கடவுள் “ஜீ..பூம்..பா…” போட்டு மற்றொரு பூமி படைத்துதருவார், அவருக்கு தேவையெல்லாம் அதிக பட்சம் 7 நாட்கள் தானே…

ஆதலால் என்னோட பிரச்சனைக்கு வாருங்கள்,
புன்னகை அவ்வளவு முக்கியமா?
சரி இப்போதைக்கு இப்படி ஒப்புக்கொள்வோம்…
மனிதனுக்கு புன்னகை முக்கியம், மகிழ்ச்சியை வெளிப்படுத்த, நம்பிக்கையை உண்டாக்க, அன்பைச் சொல்ல, ஏன் உடம்பை ஆரோக்கியமாய் வைத்துக்கொள்ளக்கூட…

சிரி இப்போ அடுத்த கேள்வி?
எல்லா புன்னகையும் முக்கியமானவையா? மகிழ்ச்சியை வெளிப்படுத்துவையா?
அன்பை சொல்பவையா???

ஐயோ!!! முடியல.. ஆமாம் சாமி… என்றால்

தமிழீழத்தில் எமது தமிழினத்தின் மீது மிகப்பெரிய இனப்படுகொலையை நடத்திவிட்டு, அந்த படுகொலையின் மொத்த பங்கும் எனக்கே என்று பறைசாற்றி, இலங்கையின் ராசாவாக  மூடிசுட்டிக் கொண்டு, வரும் தேர்தலில் எமது கூட்டணி ஜெய்த்தே தீரும் என்று முத்துப்பல் தெரிக்கும் @#$!@# ராஜபக்சே வின் புன்னகை எவ்வளவு முக்கியம்? எப்படிபட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது?

தன் மனைவிக்கும், துனைவிக்கும் பிறந்த பிள்ளைகளில் ஆரம்பித்து தமது பேரன்/பேத்தி களை உள்ளடக்கி, இனி மேல் பிறக்க போகும் கொள்ளு பேரன்/பேத்திகள் முதல்க்கொண்டு கணக்கு பார்த்து தமிழ்நாட்டையும், பதவியையும் பிரித்து கொடுத்துவிட்டு, காசுக்காகவோ, சாதிக்காகவோ, இலவசத்துக்காகவோ ஒட்டு போடப்பொற நாய்க நீங்க!!! என்று நம்மை எல்லாம் பார்த்து ஏளனமாய் சிரிக்கும் @#@%$%^!$ கலைஞகரின் சிரிப்பு, எவ்வளவு முக்கியம்? எந்த வகையை சார்ந்தது???

என்ன பேச்சே காணோம்? ஏன் இந்த மெளனம்???
சரி விடுங்க, சிந்திச்சா கடவுள் கண்ண குத்திரும்….

இவ்வளவு சொல்றியே அப்படி உனக்கும் சிரிப்புக்கும் என்ன தான் பிரச்சனை, என்கிறிர்களா?


அந்த சிரிப்பு தான் பிரச்சனை, கொஞ்ச காலமாமே எனக்கு சிரிப்பே வரதில்லை, அப்படியே தப்பி தவறி சிரிச்சாலும் அது உண்மையா மனசிலிருந்து வந்த மாதிரியில்ல, சும்மா சிரிக்கனுமேனு சிரிச்ச மாதிரியிருக்கு, இதை பார்த்துவிட்டு என்னை உண்மையா நேசிக்கிறவங்க வருத்தபடுறாங்க, “என்ன தான் டா ஆச்சு?” னு கேட்கறாங்க… அப்புறம், என்னை சுத்தியிருக்கிற பச்சை தமிழர்களோ “Where is your Smile டா?”(உன் சிரிப்பு எங்கே?) கேட்கிறாங்கா?

இவ்வளவு பாசமாக விசாரிக்கும் போது, எனக்காக இல்லையென்றாலும் அவுங்களுக்காகவாது என்னுடைய சிரிப்பை தேடலாமென்று முடிவுபண்ணிட்டேன், அதான் அதை தேடுறதுக்கு முன்னாடி அது முக்கியமா என்று யோசிச்சது தான் இந்த முதல் பதிவு…இனி வரும் பதிவுகள் ஏன்? எதற்கு? எப்படி? இந்த சிரிப்பு என்னையோ/நம்மையோ விட்டு பிரிந்துபோனது, அதை எப்படி தேடுவது பற்றித்தான்... இனிமே முழுசா தேடல் தான்..

ஆதலால்,

எற்கனவே சிரிப்பை கண்டுபிடித்தவர்கள் வழிக்காட்டுங்கள்…
என்னைப்போல் தொலைத்தவர்கள், கை சேருங்கள் தேடுவோம் சிரிப்பை!!!

                                                                        இப்படிக்கு,
                                                                        சிரிப்பை தேடும்,
                                                                        சிரிப்பை தொலைத்தவன்…
                                                                                    (அல்லது)
                                                                        சிரிப்பை தொலைத்தவர்கள்…
தேடல் தொடரும்….



Unknown


தனியாய் தனிமையில் சிந்திக்கிறேன்...

தனிமை இனிமையானதா இல்லை கொடுமையானதா?
எனக்கென்னவோ? நமக்கெல்லாம் பழக்கமானது
என்றே தோன்றுகிறது....

ஏன் இப்படிப் பட்ட வாழ்க்கை?

ஏன் இந்த தொலைவு, நமக்கும், அனைத்துக்கும்?

நமக்கு என்ன இல்லை?
அல்லது
நமக்கு என்ன இருக்கிறது?

இநத வாழ்க்கை போலியா? உண்மையா?

பணம் மட்டுமே வாழ்க்கையா?
அல்லது
பணத்துக்குகாக மட்டுமே வாழ்க்கையா?

நிம்மதி என்பது,
தேடிச்செல்வதா?
நாடிவருவதா?
இல்லை
நாமே முடிவு செய்வதா?

உங்கள் அனைவருக்கும் அந்த ஒன்று சரி
ஆனால் எனக்கு அது தவறு...
அவ்வளவு தானே
இதற்கு எதற்கு என்னை தனிமைபடுத்தினீர்கள்?

நான் உங்களையும் மாற்றிவிடுவேன் என்ற பயமா?
இல்லை
நான் உங்களைப்போல் மாறமறுக்கிறேன் என்ற திமிரா?

இந்த தனிமை
உருவானதா?
உருவாக்கபட்டதா?

என்னிடம் கேள்விகள்
முழுவதும் கேள்விகளே....
உங்களிடமாவது
பதில்கள் உண்டா?

ஒன்றை மறந்தேன்
மனிதன் தானே பணத்தை படைத்தான்
மாற்றியில்லையே???

                கேள்விகளோடும்,
                தனிமையோடும்,
             ஒரு தனி மனிதன்....
Unknown


என் ராஜகுமாரியே,
அதை,
     மேலே தூக்கியெரிந்து
     பின்
கைதட்டி விட்டு, பிடிக்கிறாய்...
அதை,
     மெல்லமாகவும்,
     அழுத்தமாகவும்
     அமுக்கி ஆனந்தம் கொள்கிறாய்...

அதை,
     விட்டு வீசி எறிவது போல்,
     நாடகம் செய்கிறாய்,
     அதை
     உண்மையென நம்பி
     பதறி, இடறி விழுகிறேன்....
     அதை
     பார்த்த மாத்திரத்தில்
     மொத்த பல்லும் தெரிய
     முத்து முத்தாய் சிரிக்கிறாய்....

     நான் என் மீது படிந்த
     தூசிதட்டி; சின்னதாய் முறைக்கையில்....
     முகம் சுருங்கி,
     மழலை போல்
     மன்னிப்புக் கேட்கிறாய்,
அதை கையில் பிடித்தப் படியே!!!

     நானும் மன்னித்து கொண்டே எழுகிறேன்....
     நீயோ?
     உன் முதுகு காட்டிக்கொண்டே
     கலைமானாய் துள்ளி துள்ளி
அதை,
     உன் இரு கைக்கும்
     பந்தாடியபடி பவணிபோகிறாய்....

எனக்கு தெரியும்,
அதை,
     எப்படியும் சிதைக்கமாட்டாய்
     சின்னாபின்னாமாக்கமாட்டாய்,
     சிற்றோடையிலும் வீசியெறியமாட்டாய்...
     என்று...

ஆனால் தூயவளே,
உண்மை சொல்
     ஏன் “அதோடு இப்படி விளையாடுகிறாய்
     அது....
     நான் உனக்கு தந்த
     “என் இதயம் என்பதனால?
                                                இப்படிக்கு,
                                                இதயம் சமர்பித்த,
                                                இதயமற்ற,
                                           உன் ராஜகுமாரன்
                                           (மோகன்)
Unknown


ஐயோ!!!

எங்களை கொன்று கொன்று

குவிக்கிறார்களே,

இதை கேட்க எந்த நாதியுமில்லையா???


ஐயோ!!!

என் தாய் பார்க்க

என் தந்தை பார்க்க

என் தமையன் பார்க்க

என் மார்பகங்களை

இச்சைக் கொண்டு

கசக்கி பிழியும்

இந்த சிங்களவனின்

கை அறுக்க யாருமில்லையா???”


ஐயகோ!!!

என் கண்ணெதிரே

கொத்துக் குண்டுகளால்

என் ஒரு வயது கண்மணியின்

உடல் சிதைத்த

இந்த இனப்படுகொலைகாரர்களை

இன்னும் ஒன்றும் செய்யாது

வேடிக்கைப் பார்க்கும்

நீங்களும் மனிதர்கள்தானா???”


ஐயோ!!!

எமக்காகவும்,

எமது மண்ணுக்காகவும்,

எமது மானத்திற்காகவும்

உயிர் நீத்த

பெண்புலிகளின் பிணங்களை

ஆடை அகற்றி, புணர்ந்து

அவர்களின் யோனிகளில்

குண்டு வைத்துத் தகர்த்த

சிங்கள வெறி நாய்களின்

தலை சீவ எவருக்கும் கைகள் ல்லையா?

குறைந்தபட்சம்

இந்த அரச பயங்கரவாதத்தைக்

கேட்க கூட நாக்கில்லையா???”


ஐயகோ!!!

எங்கள் காவல் தெய்வங்களை

பயங்கரவாதிகள் என்று பட்டம் கட்டி,

தடைசெய்ய பட்ட

ரசாயன குண்டுகள் வீசி,

கொன்று குவித்த பின்,

இரும்பு கம்பி வேலிக்குள்

ஒரு குவளை தண்ணீருக்காகவும்,

ஒரு கை அரிசி சோற்றுக்காகவும்,

எம்மை சிங்களவனிடம்

கையேந்தும் படி செய்துவிட்ட

சிங்களப் பேரினவாதத்தையும்,

அதன் தலைவர்களையும்,

குற்றவாளி கூண்டில் ஏற்ற

ஒருவர் கூடயில்லையா???”


இப்படி நித்தமும்,

என் செவிப்பறையில்

தமிழீழத் தமிழர்களின் அழுகுரல்கள்

கேட்டுக் கொண்டேயிருக்கின்றன


என் சக தாயக தமிழர்களே!

என் சக மனிதர்களே!


என்ன பதில் வைத்திருக்கிறிர்கள் அவர்களின் அழுகுரலுக்கு?

எப்படி சமாதானம் சொல்ப் போகிறிர்கள் அவர்களின் துயரங்களுக்கு?

எது கொடுத்து நிறை செய்வீர்கள் அவர்களின் இழப்புகளுக்கு?

உங்கள் சட்டைப் பிடித்துக் கேட்கிறேன்?

சொல்லுங்கள்???


இதோ,

இன்னோரு அறைகூவல்

கண்ணீரோடும்,

கடைசி நம்பிக்கைகளோடும்,

அதே திசையிலிருந்து……….


எம் தாயக தமிழக உறவுகளே,

மானுடம் போற்றும் மனிதர்களே,

நாங்கள் தமிழர்களாய் பிறந்தது தவிர

வேறெந்த தவறும் செய்யவில்லை

ஆதலால்,

நீங்கள் இருக்கும் திசைநோக்கி

உயிர் உருக கேட்கின்றோம்,

எங்கள் இனம் காக்க,

எங்கள் உயிர் காக்க,

எங்கள் மானம் காக்க,

இனியேனும்

எமக்காக ஏதாவது செய்யுங்களேன்!!!


இப்படிக்கு,

இத்தனை அழுகுரல்கள் கேட்டும் ஒன்றும் செய்ய இயலா கோபங்களோடும்,

இத்தனை பெரிய இனப்படுகொலையை வேடிக்கை மட்டுமே பார்த்த

குற்ற உணர்ச்சிகளோடும்,

ஒரு அடிமைத் தமிழன்

Related Posts with Thumbnails

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner