பதிவுலகமே தோள் கொடுங்கள்!!!
முன் குறிப்பு:
இதோ, இந்த வார இளம் எழுத்தாளர் தோழர் சரவணகுமார், தோழர் எனது ஆருயிர் நண்பர், மனிதம் போற்றும் பண்பாளர், செக்கு மாட்டு சிந்தனைகளில் சிக்காத சிந்தனையாளர், இதுவரை பேச்சாலும், செயலாலும் மட்டும் தன் சக மனிதர்களை சிந்திக்க செய்த தோழர் முதல் முறையாக பேனா பிடித்திருக்கிறார், அதற்கு தளம் அமைத்து கொடுத்ததற்கு பெருமை கொள்கிறேன். தோழர் தொடர்ந்து தன் எழுத்தானி கொண்டு சிந்தினை பரப்ப வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டு பதிவுலகத்திற்கு அறிமுகம் செய்கிறேன், பதிவுலகமே தோள் கொடுங்கள்!!!
எந்திரனும் கழிவ றைகளும்!!!
உழக தமிழர்களின் உயிர்துடிப்பாம் "எந்திரன் - தி ரோபட்" அக்டோபர் முதல் நாள் உலகெங்கிலும் அதன் வெற்றி பயணத்தை தொடங்கயிருக்கிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் சுமார் 160 கோடி ரூபாய் செலவில் உலக தமிழர்களின் பெருமையை நிலைநாட்ட இந்த படத்தை தயாரித்துள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகவும் கோலாகலமாக நடத்தபட்டது, இதில் களந்து கொள்வதற்காக பெரும்பாலான தமிழ்திரையுலக நட்சத்திரங்கள் வானில் மின்னிக் கொண்டே ஆகாய மார்க்கமாக மலேசியாவிற்கு பயனித்தன. இதற்கான செலவு எவ்வளவு என்பது தெளிவாக தெரியவில்லை, சுமார் 500 பேர் விமான பயணம், தங்கும் வசதிகள், நிகழ்ச்சி செலவு ஆக மொத்தம் சுமார் 5 கோடி ரூபாய் செலவாகியிருக்கும், இது போல் இந்த தனி சிறப்புவாய்ந்த படத்திற்கு எத்தனை விளம்பரங்கள், நிகழ்வுகள் மற்றும் செய்திகள் ஏற்படுத்தபட்டுள்ளன என்பதை பட்டியல் போடவே முடியாது. இருந்தாலும் இதோ சில,
மூன்று நாட்கள் இசை வெளியீடு தொகுப்பு விழா சன் தொலைகாட்சியில்
மீண்டும் எப்படி தொகுத்தோம் என்று ஓர் மறு ஒளிபரப்பு
பட டிரெயிலர் வெளியீட்டு விழா
குமரி முதல் சென்னை வரை "எந்திரன் ரத உலா"
முன்பதிவு செய்திகள், அதனுடன் தொடர்பு உடைய நிகழ்வுகள்
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்...
நன்பர்களே இணையத்திலிருந்து தெரிந்து கொண்ட தகவலின் படி சுமார் 2500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் உலகெங்கிலும்.திரையிடப்படுகிறதாம் எந்திரன்.
இணையத்தில் ஒரு கணக்கு அடித்து சொல்கிறது முதல் மூன்று நாட்களுக்கு உள்ளாகவே சுமார் 500 கோடி ரூபாய் வசூலாகிவிடும் என்று, முதல் வாரத்தில் மட்டும் மொத்த வசூல் சுமார் 1600 கோடியை தொட்டுவிடுமாம், சென்னையில் மட்டும் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்படுகிறதாம்.
ரூபாய் 160 கோடி முதலீடு இட்ட படத்திற்கு முதல் வாரத்தில் மட்டும் 1600 கோடி வருமானம் என்றால் இது எல்லாம் யாருடைய பணம், தயாரிப்புக்கு பயன் படுத்தபட்ட 160கோடியை சேர்த்தும் அனைத்தும் தமிழ்நாட்டில் இருந்து தானே சம்பாதிக்கபட்டது.
இந்த 160 கோடியும் வெளிநாடுகளில் விதைக்கபட்டு படமாக்கபட்டுயிருக்கிறது ஆனால் இது தமிழ்நாட்டில் மட்டும் அறுவடை செய்யப்போகும் வருமானம் மூதலீட்டை காட்டிலும் பத்து மடங்கு, இது மட்டுமல்ல "எந்திரன்" என்ற தமிழ்பெயருக்காய் 10 ஆயிரம் வரிச்சலுகையும் பெறுவார்கள்.
இந்த 1600 கோடி ரூபாயும் ஒருவரிடமிருந்து பெறப்போவதுயில்லை, நம் ஒவ்வொருவரிடமிருந்தும் பெறப்படயிருக்கிறது, அது அனைத்தும் நம் பணம்.
இது ஒருபக்கம் இருக்கட்டும் நான் உங்களிடம் மற்றும் சில தகவல்களை பரிமாறி கொள்ள விரும்புகிறேன்.
நாம் அனைவரும் வசிக்கும் இந்தியா உலக சுகாதர தரவரிசையில் எவ்வளவு பின்தங்கி உள்ளோம் தெரியுமா? அது மட்டும் அல்ல சமீபத்திய ஓர் ஆய்வின் படி ஆப்பிரிக்காவில் உள்ள சில நாடுகளை காட்டிலும் ஏழைகள் அதிகமாக வசிக்கும் நாடாக இந்தியா மாறியிருக்கிறது. இது மட்டும் அல்லாமல் பன்றி காய்ச்சல் போன்ற தொற்று நோய்களினால் சுமார் 110 நபர்கள் இறந்துயிருக்கிறார்கள். அவ்வளவு எதற்கு நமது ஊரில் உள்ள பள்ளிகளில் சுத்தமான, சுகாதாரமான, தேவையான அளவிற்கு கழிப்பிட வசதிகள் இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை என்று தான் சொல்லவேண்டும்.
நமது நகரங்களின் சந்துகளில், சாலை ஓர மரங்களின் அருகில் சிறுநீர் கழிக்காதவர்கள் உண்டா என்றால் இல்லை என்பது தான் பெரும்பாலானவரின் பதில்.
இந்த சுகாதார முறைகேட்டினால் .அதிகம் பாதிக்கபடுபவர்கள் பெண்கள் தான்.
நம் தமிழகத்தை பொருத்த வரையில் 4078 மேல்நிலை பள்ளிகள் உள்ளன, இதில் இருபாலர் பயிலும் பள்ளிகள் 3001, இதில் எத்தனை பள்ளிகளில் சுத்தமான கழிவ
பெரும்பாலும் கிராமபுற பள்ளிகளில் திறந்த வெளி கழிப்பிடம் தான்
இங்கு படிக்கும் பெண்கள் குறிப்பாக மேல்நிலை பள்ளியில் படிப்பவர்களுக்கு இயற்கையாக வரும் சில பிரச்சனைகளால் அந்த நாட்களில் பள்ளிக்கு செல்வது இல்லை, இப்போது சில வசதிகள் இருந்தும் கூட அவர்கள் உடை மாற்றி கொள்வதற்கும், ஓய்வெடுத்து கொள்வதற்கும் தனி அ
இது ஒரு புறம் இருக்க, பேருந்துகளில் நெடுந்தூரம் பயணம் செய்யும் பெண்களின் நிலை ஆண்களின் நிலையை விட மிகவும் மோசம். ஊருக்கு வெளியில் இயற்கை உபாதைகளுக்காக பேருந்து நிருத்தப்படும், அங்கு எந்த வித பாதுகாப்பு வசதியும் இருக்காது, இது மட்டும் அல்லாமல் சூரியன் வருவதற்கு முன்பாகவே எல்லாத்தையும் முடித்து விட வேண்டிய கட்டாயத்தில் தான் இன்றும் நிறைய சகோதிரிகள் இருக்கிறார்கள் தமிழ்நாட்டில்.
இப்படி சரிவர கழிவுகள் வெளியேராத காரணத்தினால் இந்திய பெண்களுக்கு விரைவாக சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது என்பது நாம் அறிய வேண்டிய உண்மை.
நமது ஊரில் உள்ள பள்ளிகள், பேருந்து நிலையங்கள் மற்றும் திரையரங்குகளில் சுத்தமான கழிப்பிடம் இருக்கிறதா? கழிவ
இருக்கட்டும் சுத்தமான தண்ணீர் கிடைக்கிறதா? இல்லை என்பது தான் ஒரே பதில்...
இப்போது மறுபடியும் எந்திரனை யோசித்து பாருங்கள், நம்மால் ஒரு 2 1//2 மணி நேரம் பொழுதுபோக்கிற்காக எடுக்க படும் படத்திற்கு ரூபாய் 1600 கோடி வருமானம் ஒரு வாரத்தில் ஈட்டி தர முடியும் என்றால், நம் வீட்டு பெண்கள், சகோதரிகள், குழந்தைகள், ஏன் நமக்காக கூட ஓர் சுத்தமான, சுகாதாரமான சூழ்நிலையை நாம் ஒன்று கூடி உருவாக்காமல் இருப்பது ஏன்?, ஏன் நாம் ஒன்று கூடி படம் மட்டும் தான் பார்க்க வேண்டுமா என்ன? கொஞ்சம் மாற்றி பார்கலாமே, நம்மால் கண்டிப்பாக ஒரு சுத்தமான சுகாதாரமான சூழ்நிலையை உருவாக்க முடியும், குறைந்த பட்சம் எந்திரனுக்காய் அடிக்க பட்ட பெலஃஸ்(flex) பேனர்களையும் சவரோட்டிகளையும் சுகாதார கழிவ
சிந்தியுங்கள் தோழர்களே! தோள் கொடுங்கள் தோழிகளே!!!
என்றும் உங்களில் ஒருவன்,
மானுடத்தின் காதலன்,
உங்கள் சரவணகுமார்
முந்தைய அறிமுகங்கள்:
இலங்கை வாழட்டும் - இளம் எழுத்தாளர்கள் அறிமுகம் - 1
முதல் முயற்சி - இளம் எழுத்தாளர்கள் அறிமுகம் - 2