Mohanraj Murugesan

காதலே வாழ்க்கையாய்...

நான் ஒரு காதல் கதை சொல்லப்போறேன், வசன கவிதையில், இது என்னுடையதுமட்டுமல்ல, உங்களுடையதாகவும் இருக்கலாம், யாருடையாதகவும் இருக்கலாம், ஆனால் இது ஒரு காதல் கதை, காதலின் கதை...

கதையின் கதாநாயகனாகிய
நான்,
ஒரு பொறியியல் கல்லூரி மாணவன்
சாரி
டமிலில சொல்லனும்லஎ
இஞ்ஜினேரிங்க் காலேஜ் சுடன்ட்
பச்சை தமிழர்களுக்காக, செம்மொழி தமிழில் கீழே
"Enginnering College Student"

நான் நல்லா Dance ஆடுவேன்
எல்லாம் அவளை Impress பண்ணதான்...

அவள்

அவள் ஒன்றும் நிலாமகளல்ல,
நிச்சியமாய் தேவதையுமல்ல,
ஒரு சாதாரண பெண் தான்
ஆனால்
ஏதோ என்னமோ?
எனக்கு மட்டும்...
அவள் ஒரு நிலாமகள்,
நிச்சியமாய் ஒரு தேவதை,
சத்தியமாய் பேரரழகி...

அவள் ஒரு குழந்தை
என் குழந்தை,
எப்போதும் என் கரம் பற்றி
தோள் சாய்ந்து தான் நடப்பாள்,

எப்போதெல்லாம் முடியுமோ
அப்போதெல்லாம்
என் மடி சாய்ந்து
என் கரம் பற்றி தான்
தூங்குவாள் குழந்தை போல்...

அப்போதெல்லாம் நினைப்பேன்....
அவளை அப்படியே
அள்ளியெடுத்து குழந்தை போல் கொஞ்ச முடியாதாயென்று....

இப்படியே போனது 4 வருடம்,

கல்லூரியில் எல்லோரும்
முடிவு கட்டீனார்கள்
நாங்கள் காதலர்களென்று
நானும் தான்...

ஆனால்,

கல்லூரியின் கடைசி நாளில்,
கைக் கொடுத்தால்,
கட்டி அணைத்தால்,
கண்ணீர் சிந்திவிட்டு....
கலைந்துப் போனாள்,
கரைந்துப் போனாள்,
காணாமல் போனாள்...

அதே இடத்தில் நின்றிருந்தேன்
கண்ணீருடன் வெகு நேரமாய்,
அதே கண்ணீருடன் நகர்ந்துவந்தேன்
நடைபிணமாய்...ஆறு வருடம் கழிந்துவிட்டது...
அவள் பற்றி ஒரு தகவளுமில்லை...
நான் மட்டும்
அதே காதலுடனும், கண்ணீருடனும்
அந்த நாள் வரை...

அன்று,
ஒரு 7 வயது தேவதையை பார்த்தேன்,
கண்ணில் மரண பயத்துடன்...
ஆசையாய் அருகில் சென்று தொட்டேன்
அலறி அடித்துக் கொண்டு ஓடி மறைந்தாள்....

விசாரித்தேன்;

தமிழீழத்தில் செஞ்சொலை காப்பகத்தில்
வளர்ந்தவளாம் அவள்...
தன் கண்முன்னே
தன் சக நன்பர்கள்
கொத்துக் குண்டுகளால் கொலைச் செய்யபட்டதை
பார்த்துயிருக்கிறாள் அவள்
பிறகு என் செய்வாள்...

அவளுக்கு எப்படி புரியவைப்பேன்
விமானம் என்பது
குண்டுகள் வீசி கொலைச் செய்யும் கொலைக்கருவியல்ல...
மக்கள் பயணிக்க பயண்படும் பயணக்கருவி என்று...

சொல்லுங்கள் நண்பர்களே...
அவளுக்கு எப்படி புரியவைப்பேன்
விமானம் என்பது
குண்டுகள் வீசி கொலைச் செய்யும் கொலைக்கருவியல்ல...
மக்கள் பயணிக்க பயண்படும் பயணக்கருவி என்று...

2 மாதம் போராடி
என்னவள் எப்படி
என் மடி சாய்ந்து
என் கரம் பற்றி தூங்குவாளோ?
அப்படி தூங்கவைத்தேன் அவளை...

அப்போது புரிந்துதது
காதல் என்பது என்ன?
நம் காதலின் தேவை யாருக்கு என்று?

இதோ என் மடி மீது உறங்குகிறாளே
இந்த பச்சிளம் குழந்தை
இவளுக்கு நிச்சியமாய் தேவை நம் காதல்...

அதோ, தன் ரத்தம் சிந்தி வளர்த்த
பிள்ளையின் மிதி வாங்கி
நத்தை போல் ஊர்ந்து வருகிறார்களே
முதியோர் இல்லம் நோக்கி,
அந்த முதிர்ந்த குழந்தைகள்
அவர்களுக்கு சத்தியமாய் தேவை நம் காதல்...

பார்வையிழந்தாலும், பிச்சையெடுக்காமல்
தான் படித்ததை, எனை எழுதச்சொல்லி
வக்கீலுக்கு படிக்கிறானே
என் தோழன், அவன் நம்பிக்கைக்கு
தேவையாயிருக்கிறது நம் காதல்...

மாவட்டத்தில் முதல் மதிப்பெண்
இருந்தால் என்ன
கூலி மவன் தானே
படிச்சு என்ன கிழிச்சிற போரேனு?
கேலிக்குள்ளாக்கபடும் ஒவ்வொரு மாணவனுக்கும்
தேவை நம் காதல்...

ஆதலால்
இனி
நம் காதலை தம் தம் காதலிகளுடன் நிப்பாட்டிக்கொள்ள வேண்டாம் நண்பர்களே...

ஏற்ற தாழ்வுகளின்றி
சக மனிதர்கள் அனைவரையும் காதலிப்போம்...

நாம் வாழ கரி அமில வாயு உண்டு
ஆக்சிஜன் தரும்
பொது நல குணம்கொண்ட மரங்களை காதலிப்போம்...

எந்தவித எதிர்பார்ப்புகளுமேயின்றி
நம்மை தூக்கிச் சுற்றும்
இந்த மண்மண்டலத்தை காதலிப்போம்...

இதோடு கூட நிப்பாட்ட வேண்டாம் நண்பர்களே....

பால்வெளி கடப்போம்
அண்டம் முழுக்க
நம் காதல் நிரப்புவோம்...

நான் காதலித்தேன் அவளை
காதலிக்கிறேன் என் சக மனிதர்களை
காதலிப்பேன் உலகத்தை...

ஆதலால் தோழிகளே, தோழர்களே...

இனி நம் கல்லரைகளில் இப்படி எழுதி வைப்போம்


இங்கு
தன் காதலில் தோற்றாலும், ஜெயித்தாலும்
உலகத்தையே காதலித்த
ஓர் காதலன் அல்லது காதலி உறங்கிக் கொண்டுயிருக்கிறான்/ள் என்று...

இப்படிக்கு.
காதலையே வாழ்க்கையாய் கொண்ட ஓர் காதலன்...
தோழன் மோகன்....
2 Responses
 1. காதலையே வாழ்க்கையாய் கொண்ட ஓர் காதலனை நான் காதலித்து கொண்டிருப்பதால்
  அவன் வழி நடக்கிறேன் அவனையும் காதலிக்கிறேன் அனைத்தையும் காதலிக்கிறேன் ...


 2. அன்பின் தேவையை உன் அழகான வரிகள் சரியான வழியில் சொல்கின்றன.
  நல்லதோர் சமுக பார்வையும் அன்பின் அவசியத்தையும் தெளிவு படுத்துகிறாய்...
  மடந்தை முதல் மண்ணுலகம் வரை காதலிப்பதால் அன்பு எத்தனை பெரியது என்று புரிய வைக்கிறாய் ..

  மிக நன்று ..
  தொடருங்கள் தோழரே ......


Related Posts with Thumbnails

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner