ம&#
10
ஆண் அம்மாக்களுக்கு
பாலுட்டவும் முடியாது தான்,
ஆனால்
அவர்களும் அம்மாக்கள் தான்...
நான் கருவுற்ற நாள் தொட்டு;
துயரங்கள் பல கண்டு;
கடைசியாய்
உயிர்வலி சுமந்து;
எனக்கு உயிர் கொடுத்து,
தொப்புள் கொடி அறுப்பதற்குள்
வாரி அணைத்து
முத்த மிட்ட என் அம்மாவுக்கு நிகர்,
அன்றும் இருந்ததில்லை,
இன்றும் இருக்கவில்லை,
என்றும் இருக்க போவதுமில்லை...
இன்றும் இருக்கவில்லை,
என்றும் இருக்க போவதுமில்லை...
நான் துவண்டு விழும்போதும்,
தனித்து அழும் போதும்,
அரவணைத்த கைகள்
அம்மாக்களின் கைகள் தான்...
அதில்
அதிகம் வளையல் கரங்கள் தான்;
ஆனாலும்
தாயுணர்வு கொண்ட ஆண் கைகளும் இருக்க தான் செய்தது...
இதோ இந்த நொடி,
எங்கோ ஒரு மூலையில்,
தனித்து அழும் போதும்,
அரவணைத்த கைகள்
அம்மாக்களின் கைகள் தான்...
அதில்
அதிகம் வளையல் கரங்கள் தான்;
ஆனாலும்
தாயுணர்வு கொண்ட ஆண் கைகளும் இருக்க தான் செய்தது...
இதோ இந்த நொடி,
எங்கோ ஒரு மூலையில்,
தாயிலந்த தன் பிள்ளைக்காக,
சமையல் என்ன
சமையல்கட்டே தெரியாத ஓர் ஆண்,
வேர்க்க, விருவிருக்க
தன் பிள்ளையின் பசி தீர்க்க,
உப்போ, காரமோ இல்லாமல்
பாசம் ஊற்றி;
நேசம் சேர்த்து
பருப்போ? சாம்பாரோ?
வைத்துக் கொண்டுயிருக்க கூடும்
என் தந்தையை போல்....
சமையல்கட்டே தெரியாத ஓர் ஆண்,
வேர்க்க, விருவிருக்க
தன் பிள்ளையின் பசி தீர்க்க,
உப்போ, காரமோ இல்லாமல்
பாசம் ஊற்றி;
நேசம் சேர்த்து
பருப்போ? சாம்பாரோ?
வைத்துக் கொண்டுயிருக்க கூடும்
என் தந்தையை போல்....
அன்னையின் பக்கத்தில்
அழகாய் நடு படுக்கையில் (Berth) தூங்கும் குழந்தை,
உறுதியாய் உருண்டுவிழாது
என தெரிந்திருந்தும்,
ஊர் திரும்பும் வரை
உறக்கம் தவிர்த்து
சிவந்த கண்களோடு
குழந்தையை பார்த்தபடி
பயணிக்கும் என் மச்சானை போல்...
அழகாய் நடு படுக்கையில் (Berth) தூங்கும் குழந்தை,
உறுதியாய் உருண்டுவிழாது
என தெரிந்திருந்தும்,
ஊர் திரும்பும் வரை
உறக்கம் தவிர்த்து
சிவந்த கண்களோடு
குழந்தையை பார்த்தபடி
பயணிக்கும் என் மச்சானை போல்...
அவநம்பிக்கைகளாலும், தொடர் தோல்விகளாலும்
துவண்டு, விரக்தி கொண்டு
நம்பிக்கையிழந்த எனக்கு
தன் தோள் கொடுத்து,
கடைசி வார்த்தை வரை புலம்பவிட்டு
தன் மடி சாய்த்து
உறங்க வைக்கும்
என் நன்பனை போல்....
துவண்டு, விரக்தி கொண்டு
நம்பிக்கையிழந்த எனக்கு
தன் தோள் கொடுத்து,
கடைசி வார்த்தை வரை புலம்பவிட்டு
தன் மடி சாய்த்து
உறங்க வைக்கும்
என் நன்பனை போல்....
தன் பிள்ளையின் பொறியியல் படிப்புக்காக
தன் சுயத்தை விட்டுக் கொடுத்து,
எல்லோரிடமும் கடன் கேட்டு நிற்கும்
என் மாமாவை போல்...
எல்லோரிடமும் கடன் கேட்டு நிற்கும்
என் மாமாவை போல்...
சம்பளம் கம்மி தான் என்றாலும்
என் பையன் கை நிறைய சம்பாதிக்கிறான் என்று
எப்போது பார்த்தாலும்
மூன்று முறை சொல்லும்
அந்த எல்.ஐ.சி கார சித்தாப்பாவை போல்....
தன் பிள்ளை புதுதுணிவுடுத்த
14 மணி நேரம் வேலை பார்த்து
சம்பாதித்த மொத்த பணத்தை கொடுத்துவிட்டு,
கைலியோடு நிற்கும்
14 மணி நேரம் வேலை பார்த்து
சம்பாதித்த மொத்த பணத்தை கொடுத்துவிட்டு,
கைலியோடு நிற்கும்
அந்த பெயர் தெரியாத அண்ணணைப் போல்....
இதோ இந்த நொடி
எங்கோ ஒரு மூலையில்
ஏதோ ஓர் வழியில்,
சில ஆண்கள்
அம்மாக்களாய் அவதரித்துக் கொண்டுயிருக்கலாம்...
அப்படி
தாய்மையை பொது உணர்வாய்
புரிந்துக் கொண்ட
அந்த
ஆண் அம்மாக்களுக்கு
என்
அன்னையர் தின வாழ்த்துக்கள்...
என்றும் அம்மாக்களுடன்,
அடங்கா தமிழன்