Unknown

பச்சை என்கிற காத்து - மிகச் சிறந்த பதிவு(படம்) - ஓர் அறிமுகம்

"கருப்பு எமது அடையாளம்" என்று கம்பீரமாய், உறுதியான இயக்குனர் கீராவின் குரலோடு தொடங்கியது "பச்சை" படத்தின் படம், அந்த நொடியிலிருந்து படம் முடியும் வரை கீரா மற்றும் அவரின் குழுவின் உழைப்பு பிரம்மிக்கவைக்கிறது, இது கீராவின் முதல் படம் என்பதை நம்ப கொஞ்சம் தயக்கமாக இருந்தது, படத்தின் பங்களிப்பார்கள் பெயர் போடுவதே மிக நேர்த்தியாய் அனைத்துமே தனித் தமிழில் மட்டுமே இருந்தது, ஒரு இடத்தில் கூட ஆங்கிலம் இல்லை, இதற்காகவே கீராவுக்கு ஒரு பூங்கொத்து...

"பச்சை செத்துட்டான்" இது தான் முதல் வசனம், தண்ணி அடித்துவிட்டு சலம்பிக் கொண்டு வரும் ஒரு விடலை பையனின் கண்களாய் காமிரா ஒப்பாரி பாடலோடு தள்ளாடி தள்ளாடி நிலை கொள்கிறது பிணமான பச்சையின் முகத்தில், இந்த தருணத்தில் இருந்து நிமிர்ந்து உட்காரும் ரசிகனுக்கு இறுதி வரை ரசிப்பதற்கும், நெஞ்சை நிறப்புவதற்கும் நிறைய இருக்கிறது பச்சையில்...

                                       

பச்சை என்ற கிராமத்து கடை நிலை அரசியல் தொண்டனின் கதை தான் படம், பச்சையாக நாயகன் வாசகர் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார், அவரின் நடிப்பு பிரம்மிப்பாய் இருக்கிறது அதுவும் இது அவருக்கு முதல் படம் என்றும் எண்ணும் போது, இவருக்கு வாய்ப்புகள் சரியாய் அமைந்தால் மிகச் சிறந்த நடிகராய் வருவார், அவருக்கு ஒரு சிறப்பு பூங்கொத்து, அவரே போல் பட்த்தில் வரும் அனைவருமே வாழ்ந்திருக்கிறார்கள் காரணம் எந்த ஒரு கதாபாத்திரமும் சித்தரிக்கபட்ட ஒன்றல்ல எல்லாமே உண்மை கதாபாத்திரங்கள் ஆம் படமே உண்மை சம்பத்தை மையமாக கொண்டது தான்...


இந்த படம் இறுக்கமான ஆவண படமோ, பிரச்சார படமோ அல்ல எதார்த்தமான கிராமத்து வாழ்க்கை, லந்து, நையாண்டி, காதல், வன்மம், அரசியல் போன்றவைகளின் அழகிய பதிவு, இதை மிக நன்றாய் செய்திருக்கிறார் கீரா, அதற்கு மிகச் சரியாக தோள் கொடுத்திருக்கிறார்கள் அவரின் பட கலைஞ்கர்கள்...

பாடலாசிரியர் சாவீக்கும் இசையமைப்பாளர் ஹரிபாபுக்கும் சிறப்பு பூங்கொத்து கொடுத்தே தீரவேண்டும், பாடல்கள் மக்கள் இசையில் மிக நேர்த்தியாக இருக்கிறது, ஒளிபடைப்பு தனி கவனம் பெருகிறது, காதலிக்கும் போது குழுமையாகவும் வன்மத்தின் போது சீற்றமாகவும் சரியாய் பதிவு செய்யபட்டுயிருக்கிறது அதற்காகவும் ஒரு பூங்கொத்து பச்சைக்கு...

இது நாம் சாதரணமாய் ஒரு முறை பார்த்து விட்டு கடந்து செல்கிற ஒரு மசாலா படம் இல்லை, நம் நெஞ்சில் தங்கிநிற்கும் ஒரு நிணைவு, நடிகையின் தொப்புளையும், நடிகனின் மிகைப்படுத்தபட்ட ஹீரோயிஷத்தையும், குத்து பாட்டையும் நம்பி படம் எடுக்கும் இந்த காலத்தில் நம்மை போன்ற மக்களின் ரசனை மீது நம்பிக்கை வைத்து இப்படி ஒரு மிக சிறந்த பதிவை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் கீரா...

                                            

அந்த கலைஞனின் நம்பிக்கையை கண்டிப்பாய் பாராட்ட வேண்டும், ஆகவே உறவுகளே ஒரு 3 மணி நேரம் ஒதுக்கி ஒரு முறை இந்த பச்சை என்கிற காத்தை சுவாசித்து விட்டு வாருங்கள், நெஞ்சம் நிறையும்....


நிறைந்த நெஞ்சத்தொடும்,

பாராட்டுகளோடும்,

தோழன் மோகன்...
Related Posts with Thumbnails

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner