Mohanraj Murugesan
தோழி/தோழர்களே,

சூரியனிலிருந்து வெடித்து சிதறிய நாள் தொட்டு பூமி மாறிக் கொண்டே தான் இருக்கிறது, நாமும் கூட தான் மாறிக் கொண்டே இருக்கிறோம், ஒவ்வொரு காலம் தொட்டும் நம் உணவு மாறியிருக்கிறது, நம் உடை மாறியிருக்கிறது, ஏன் நம் உடல் அமைப்பே மாறியிருக்கிறது, ஆனால் மாறாத ஒன்று உண்டு, அது காதலிப்பது, அன்று காதலித்தோம், இன்று காதலிக்கிறோம் நாளையும் காதலிப்போம்....
கடவுள் இல்லாது போனாலும் கவலையில்லை ஆனால் காதல் இல்லாது போனால், காதல் தொலைத்து பின் எதை வாங்க? காதல் மட்டும் இல்லாது போனால் களவி ஏது , கவிதை ஏது, கலை ஏது??? இப்படி காதலின் அருமை எனக்கே புரிகிறதுயென்றால் சங்க தமிழனுக்கு என்ன தெரியாதா? வீரம் ஒரு கண் என்றால் காதல் மரு கண் அவனுக்கு, ஆதலால் தான் ஒன்றல்ல இரண்டல்ல 401 காதல் கவிதைகள் தொகுத்திருக்கிறான் குறுந்தொகை எனும் பெயர் கொண்டு, இனி வரும் பதிவுகளில் ஒவ்வொரு சங்க கால குறுந்தொகை காதல் கவிதையையும் அதன் எளிய உரையோடும் முடிந்தால் என்னுரையோடும் பகிர்ந்துக் கொள்ளப் போகிறேன், இது என் சிறு முயற்சி, காதலுக்காகவும் காதலர்களுக்காகவும்...இனி காதல், காதல், காதல் மட்டுமே....

என்றும் காதலுக்காக,

காதலுடன்,

தோழன் மோகன்...



முதல் பாடல்:

குறிஞ்சி – தலைவன் கூற்று

கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமம் செப்பாது, கண்டது மொழிமோ;

பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,

செறி எயிற்று, அரிவை கூந்தலின்

நறியவும் உளவோ, நீ அறியும் பூவே.

- இறையனார்

எளிய உரை:

நீயே சொல் வண்டே…

பார்த்துப் பார்த்து தேன் தேடி வாழும்

அழகிய இறக்கை வண்டே

எனக்காகப் பொய் சொல்லாமல்

பார்த்ததைச் சொல்,

மயில் போன்றவள், அழகான பற்களுடைய

அந்தப் பெண்ணின் கூந்தலைவிட

அதிக வாசனையுள்ள பூ உள்ளதா சொல்…


என்னுரை:

இந்தப் பாடல்தான் இறையனார் எழுதிக்குடுக்க தருமி வாங்கீட்டுப் போய் வம்புல மாட்டிக்கிட்டது.இந்த பாடல் படி பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மனம் உண்டு, ஆனால் நக்கீரரின் வாதப்படி, பூக்கள் சூடுவதாலோ வாசனை திரவியங்கள் பயன்படுத்துவதாலோ தான், பெண்களின் கூந்தலுக்கு மனம் உண்டு... எது எப்படியோ இது ஓர் அருமையான காதல் கவிதை, இருந்தாலும் எனக்கு இறையனார் சொல்வது தான் சரியெனபடுகிறது... உங்களுக்கு???
3 Responses
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  2. தங்களின் பதிவு, ஆர்வத்தை தூண்டுகின்றது. இப்போதையக் காலக் கட்டத்தில் குறுந்தொகை என்பது தமிழ் இலக்கியமாக இருப்பினும், அதைப் புரிந்துக் கொள்ள தனியாக தமிழ்வகுப்புப் பயிற்சி எடுக்கவேண்டி வருமோ எனும் தயக்கம் நிறைய பேருக்கு உள்ளது. வழக்கு தமிழில் தாங்கள் அளிக்கும் எளிய உரை வரவேற்கத்தக்கது.
    குறிப்பு: இப்பதிவினை ta.indli.com பதிவு செய்தீர்களா...? மறவாமல் இன்ட்லியின் வாக்குப் பட்டையினை இணைக்கவும். தமிழ்வெளி, தமிழ்10, தமிழ்பெஸ்ட்..... போன்ற தளங்களிலும் இணைத்தீரேயானால், பெரும் வரவேற்புடன் அனைவரிடமும் சென்றடையும்.


  3. தங்களின் முதல் வருகைக்கு நன்றி தோழர்,உங்கள் மேலான கருத்துக்கும் நன்றி, நீங்கள் குறிப்பட்டது போல் இன்ட்லி, தமிழ்10 வாக்குப் பட்டைகளை சேர்த்துவிட்டேன், தகவலுக்கு நன்றி...நீங்கள் குறிப்பிட்டது போல் எல்லோருக்கும் சென்றால் மகிழ்ச்சி தான்...

    உண்மை தான் நானும் கூட முதலில் சங்க இலக்கியம் வாசிக்கும் ஆசை வந்த போது கொஞ்சம் பயந்து தான் போனேன் சங்க இலக்கிய சொற்களை பார்த்து, எனக்கு பெரிதும் உதவியது சுஜாதாவின் புத்தகமும்,எம் தமிழ் காதலும் தான்...


Related Posts with Thumbnails

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner