Unknown
எனக்கு தெரிந்தது...உங்களுக்காக...

முன் குறிப்பு,
இந்த பதிவு நான் சுமார் முன்று வருடங்கள் முன் எழுதியது, என் மின்ன்ஞ்சலை தூசி தட்டும் போது கிடைத்த்து, இது ஓர் மீள் பதிவே, அது மட்டுமல்ல நான் எழுதிய முதல் கட்டுரை இது தான்....


தமிழா!!! உன் கற்பனையின் கணம் கண்டு ஒவ்வொரு முறையும்
வியக்கிறேன்,வியந்து கொண்டேயிருக்கிறேன்...
இங்கே நான் உங்களுக்காக விவரிக்க போகும் கற்பனை, நான் அறிந்து வியந்தது மட்டுமல்ல நீங்கள் அறிந்து வியக்கவேண்டும் என்றே விவரிக்கிறேன்...
இங்கு சொல்லபோகும் கற்பனையின் கணம் உணரும் அத்தனை நெஞ்சகளுக்கும் என் தமிழ் வாழ்த்துக்கள்...

இனி கற்பனை பார்ப்போம்,
நாம் அனைவருமே வானமகள் தன் முழுமுகம் காட்டி முத்து முத்தாய் சிரிக்கும் ஒரு பெளர்ணமியை பார்த்திருப்போம்....

இப்படியும் ஓர் பேரழகா? இவளை பெற்றார்களா? இல்லை செய்தார்களா? என்று வியக்க தொன்றும் பெண்களையும் பார்த்திருப்போம்...

ஆனால் தூரமாய் எப்போதுமே துடித்து கொண்டேயிருக்கும் விண்மீனை கவனித்திருக்கமாட்டோம்...
கவனித்திருந்தாலும் பெரிதாய் கவலை கொண்டிருக்கமாட்டோம்...

ஆனால் ஓர் தமிழ் கவிஞன் கவலைகொண்டான் விண்மீன் விட்டு விட்டு துடிக்கும் ரகசியம் தெரிந்தே தீரவேண்டும் என்று தீவிரம் கொண்டான், இமை மூடினான் கற்பனை கண் திறந்தான், காரணம் கண்டு கொண்டான்...
அந்த கவிஞனின் காரணம் அறிய நீங்கள் மூன்று விஷயங்கள் கற்பனை செய்ய வேண்டும்...

ஒன்று: மேலே பெளர்ணமி நிலவு பளபளக்கும் வானம்
இரண்டு: கீழே மானுட தேவதையாய் ஓர் மல்லிகை மலர் போன்ற மங்கையின் முகம்
மூன்று: இரண்டுக்கும் நடுவே புதிதாய் பிறந்த ஓர் விண்மீன்

இப்போது மெதுவாய்
விண்ணிலிருக்கும் "வெண்ணிலாவையும்"
மண்ணிலிருக்கும் "பெண்ணிலாவையும்"
மாற்றி மாற்றி கவனியுங்கள்...
உங்கள் கண்ணை உங்களாளே நம்ப முடியவில்லையல்லவா?
உங்களுக்கே குழப்பம் வருகிறதல்லவா?
"எந்த நிலா? உண்மை நிலா?" என்று
இதே குழப்பம் தான்
இதே பதற்றம் தான் அந்த விண்மீனுக்கும்
"எந்த நிலா? உண்மை நிலா?" என்று
பாவம், அந்த நொடியில் ஆரம்பித்த குழப்பம் தான் இந்த நொடியும் தொடர்கிறது...

இன்று இந்த நொடி வரை விண்மீனால் அறியமுடியவில்லை
"எந்த நிலா? உண்மை நிலா?" வென்று என்கின்றான் அந்த தமிழ் கவிஞன்
அந்த கவிஞன் வெறு யாருமில்லை பொய்யா புலவர் நம் "வள்ளுவன்" தான்...
இந்த கற்பனை வருவது வேரு எங்குமில்லை உலகமே போற்றும் நம் "திருக்குறளில்" தான்...

குறள் எண்:1116

குறள்:
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்.


எப்படி கற்பனை கொண்டிருக்கிறான் கவிஞன்!!! சத்தியமாய் நான் கற்பனை கூட செய்தது இல்லை இப்படியெல்லாம் கவிகள் செய்யமுடியுமென்று...
இது போல் தமிழனின் தனிசிறப்பு பதிவு செய்தால் ஓராயிரம் கோடி வளை பதிவுகள் பதித்தாளும் போதாது...

ஆகவே உலக தமிழர்களே நான் முன் வைப்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான்

"நாம் அனைவரும்,
நான் தமிழன் என்று மார் தட்டி கொள்ளவில்லையென்றாலும்
நான் தமிழன்;
என் மொழி தமிழ், என்று சொல்வதில் கேவலம் கொள்ளவேண்டாம்"
ஆங்கிலமே வேண்டாமென்று சொல்லவில்லை தமிழை மறந்துவிடாதீர்கள்...


எற்கனவே தமிழை எழுதவோ? படிக்கவோ? தெரியாத ஒரு தமிழ் தலைமுறையே உருவாக்கிவருகிறோம் சத்தமில்லாமல்...

தமிழை இரண்டாவது மொழியாக வைக்கலாமா? வேண்டாமா? என்று யோசிக்கும் பள்ளிகள் பெருகிவருகின்றன...

ஆதலால் நான் முன் வைப்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான்
"நாம் அனைவரும்,
நான் தமிழன் என்று மார் தட்டி கொள்ளவில்லையென்றாலும்
நான் தமிழன்
என் மொழி தமிழ் என்று சொல்வதில் கேவலம் கொள்ளவேண்டாம்"
ஆங்கிலமே வேண்டாமென்று சொல்லவில்லை தமிழை மறந்துவிடாதீர்கள்...

இங்கு நான் பதித்த அனைத்தும்
எனக்கு தெரிந்தது... உங்களுக்கு தெரியவேண்டியது...

என்றும் உங்களுக்காக,
மோகன்
Unknown
உன் விழிகள் 


வைர விழியாளே, 

விழிகளெனும் விசித்திரங்கள்
தாக்கியப் பொழுது
வார்த்தைகள் வசப்படவில்லை
உவமைகள் உரியதாயில்லை

ஆனால்

உள் உணர்வோ
கவி செய்கிறது
கற்பனை கொள்கிறது,
சங்கீதம் பாடுகிறது,
சங்கடங்கள் தருகிறது

ஏய் தங்கதழலே,
உன் விழிகளெனும்:
வேல் அம்புகள்,
செய்யும் காயம்,
ரத்தம் சிந்தும் ரணங்களல்ல...
ரகசியமாய் தாக்கும்
சந்தோச கஷ்டங்கள்...

மினசாரமும் உன் விழியும்
சொந்தங்களோ?
ஒருமுறை தாக்கினாலும்
உயிர் கரைக்கிறது...
Unknown
முன் குறிப்பு: இன்று(ஜீன் 11) நான் எனது முதல் மென்பொருள் நிறுவனத்தில் இருந்து வேலையை  விட்டு கிளம்புகிறேன், எனது நிறுவனம் மற்றும் ஹைதராபாத் நண்பர்களுக்காக எழுதிய கவிதை இது...



இன்று பிரிகிறேன் உங்களிடம் இருந்து!!!


பிரிகிறேன் தோழிகளே,
பிரிகிறேன் தோழர்களே,
பிரிகிறேன் ஹைதராபாத்தே,

எத்தனை கனவுகள்,
எத்தனை நிகழ்வுகள்,
எத்தனை நினைவுகள்,
எத்தனை சிரிப்புகள்,
எத்தனை சன்டைகள்,
எத்தனை சமரசங்கள்,
எத்தனை மொக்கைகள்
இன்னும்
எத்தனை எத்தனையோ....

என் நினைவுகளை உங்களிடம் விட்டு விட்டு
உங்களின் நினைவுகளை என்னோடு ஏற்றிச்செல்கிறேன்...

எவ்வளவு சமாதானம் சொன்னாலும்
நெஞ்சு ஏற்பதில்லை
பிரிவுகளை...

எவ்வளவு மறைத்தாலும்
வழிந்து விடுகிறது
கண்ணீர் துளிகள்...

எவ்வளவு தவறுகள் இருந்தாலும்
முதல் நிறுவன அனுபவம்
முதல் முத்தம் போல்
என்றும் நிறைந்திருக்கும்
அதே ஈரத்துடன்...

விடை குடுங்கள் நன்பர்களே
விடியல் நோக்கிய
என் பயணத்திற்கு,


நட்பை எப்போதும்
தூரங்கள் முடிவு செய்வதில்லை
ஆனால்
நேற்றுவரை உங்கள் அனைவரிடமும்
நான் கண்டு, ரசித்த
சிரிப்புகளும்,
சின்ன சின்ன சன்டைகளும்,
பெரிய அறிவுரைகளும்,
ஆடி மகிழ்ந்த நிகழ்வுகளும்,
அன்பான கண்டிப்புகளும்,
நேசமான பகிர்வுகளும்
மரண மொக்கைகளும்
இனி
நினைவுகள் தான்
எனும் போது...
நிச்சியமாய் வலிக்கிறது நெஞ்சு...

சேர்ந்தவர்கள் பிரிவது
எதார்த்தம் என்றால்
பிரிந்தவர்கள் சேர்வதும்
எதார்த்தம் தானே...

மற்றொரு நாள்
மீண்டும் கைகோர்போம்
மீண்டும் பயணிப்போம்
ஏனென்றால்
எப்போதுமே பயணங்கள்
மட்டும் முடிவதெயில்லை....


என்றும் உங்கள் பயணங்களில் ஒருவன்,
தோழன் மோகன்
Unknown
நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைக்கெட்ட மாந்தர்களை நினைத்துவிட்டால்...

25 வருடம் கழித்து தீர்ப்பு வருகிறது ஆம் குற்றம் தான், இருந்தால் என்ன குற்றம் இழைத்தவர்கள் கோடீசுவர இந்தியர்கள் என்பதால் போனா போகுதுனு இரண்டாண்டு கால சிறை தண்டனை விதித்திருக்கிறது இந்திய நீதி மன்றம், இதில் வேடிக்கை இது தான் தீர்ப்பு வந்த சாய்ங்காலமே குற்றம்புரிந்த அனைவருக்கும் பிணை விடுதலை, பிறகென்ன அந்த நல்லவர்கள் (நயவஞ்சகர்கள்) கொன்றது இந்தியாவின் ஒற்றை கலங்கரை விளக்கான, இந்தியாவின் வல்லரசு கனவை நினைவாக்க பிறந்த ஒற்றை விடிவெள்ளியான, இந்தியாவின் பாதுகாப்பில் ஊழல் செய்த, தமிழீழ மக்களின் குரவளையை அறுத்த காங்கிரசின் தலைவர் ராஜீவ் காந்தியைவா? இல்லையே உழைப்பை மட்டுமே நம்பி, உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து போன வெறும் 8000 சாமானிய இந்தியர்கள் மன்னிக்க இந்தியா என்ற நிலப்பரப்பில் வாழ்வதால் இந்தியர்களாக ஆக்கப்பட்ட இந்தியர்களை தானே, இதுக்கு இரண்டு ஆண்டே ரொம்பக் கூட...

அப்ப போபாலில் விசவாயு தயாரிக்க அனுமதி வாங்காமல், எந்த ஒரு பாதுகாப்பு விதிமுறையையும் சரிவர பின்பற்றாமல், Union Carbide யால் இயக்கி வந்த அந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட விசவாயு கசிவால் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்ட 2 லட்ச பொது மக்களுக்கும் இது தான் நீதியா? என்று நீங்க யோசிச்சாலோ,கேட்டாலோ, இது தான் பதில்,

Unknown

இரண்டாம் முற்றுகை
 
என் இனியவளே,

ஓராயிரம் கோடி
வெண்ணிலாக்கள் உடைத்து
பார்க்கடல் ஊற்றி
பளிங்குகல் சேர்த்து
பத்திரமாய்
படைக்கபட்ட
பவளம் தானே
கண்ணே
உன் நிலா முகம்...

Unknown
நானொரு வெயில் காதலன்!!! 

வெயில் என்றவுடனே வேர்வை, புழுக்கம், அனல் காற்று, தாங்கவே முடியாத வெட்கை போன்ற ஏதாவது ஒன்றோ பல உணர்வுகளோ நம்மில் பலரிடம் தோன்றுகிறது... உச்சி வெயிலில் உங்கள் நண்பரிடமே, வா, வெயிலில் விளையாடலாம் அல்லது வெயிலில் பேசிக்கொண்டே நடக்கலாம் என்று சொல்லுங்கள், அவ்வளவுதான்,"உனக்கேன்ன பைத்தியமா என்றே கேட்பார்?"

உடனே கேளுங்கள், "சூரியன் மட்டும் இல்லையென்றால் பூமியே பிறந்திருக்காது தெரியுமா?"

சற்றே முழிப்பார், விடாதீர்கள் அடுத்த கேள்வியையும் கேட்டுவிடுங்கள், "சூரியனின் வெப்ப கதிர்கள் மட்டும் பூமிக்கு வருவது நின்றுப் போனால் மனிதன் மட்டுமல்ல அனைத்து உயிர்களும் அழிந்துபோகும் என்றாவது தெரியுமா?"

உங்கள் நண்பர் கொஞ்சம் சுதாரித்து எல்லாம் தெரியும் ஆனாலும் வரமுடியாது, வெயில்ல போனா வேர்க்கும், வேர்த்தா வாடை வரும், நான் வரலைனு சொன்னா...

ஒரு பொன்முறுவல் சிந்திவிட்டு நிதானமாகச் சொல்லுங்கள்,

வேர்வை வெளியேருவது உடலுக்கு நல்லது,

உடல் வேர்பதற்க்கும் உடல் ஆராக்கியத்திற்க்கும் நேரடி பங்குண்டு,

உடலிருந்து வெளியேரும் வேர்வைக்கு வாடைக் கிடையாது, ஆனால் நம் தோலில் இருக்கும் பாக்டீரியா போன்ற நுன்கிருமிகளாலும், அழுக்காலும் தான் வேர்வைக்கு வாடை சேர்க்கின்றன என்ற அறிவியலையும் சேர்த்துச் சொல்லுங்கள்,


வாயடைத்துப் போவார் உங்கள் நண்பர் என்று தானே நினைப்பீர்கள்,

இல்லை அவர் உடனே தனது வஜ்ராயூதத்தை பயன்படுத்துவார், அது "வெயிலால் என் உடல் நிறம் கருத்துபோயிரும்" என்பதல்ல "நான் கருப்பாகிவிடுவேன்" என்பதே அது...

Unknown
முதல் முற்றுகை

என் பிரியமானவளே,


என் இனியவளே,
என் இம்சையாளே,
என் ஆருயிரே,
என் ஓருயிரே,

என் கண்ணில் விழுந்தாய்
நினைவில் நின்றாய்;
உயிராய் உரைந்தாய்
உள்ளமாய் திரிந்தாய்

உண்மை சொல்
என் கண்மணி
நீ
தேவதைதானே??? 
Related Posts with Thumbnails

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner